டி.வி டைம்!

22 April 2010 ·
மீதாவுக்கு அடுத்து 'மச்சான்' தமிழில் பின்னும் கிரேக், அணு அளவும் பயமில்லை சீஸன் 3-யின் நிகழ்ச்சித் தொகுப்பாளர். ஆண்டாண்டு காலமாக எஸ்.எஸ்.மியூஸிக்கில் வாயாடித் திரிந்த இந்த ஆங்கிலோ இந்தியன் பார்ட்டியின் தமிழ் கொஞ்சம் முன்பின் இருந்தாலும், 'தமிழ்' என்பதை மட்டும் சுத்தமாக உச்சரிக்கிறார். ''என்னால முடிஞ்சதை முயற்சி பண்றேன் மச்சான். மெட்ராஸ் பாஷை பேசுவேன். ஆனா, அதெல்லாம் டி.வி-க்குச் சரியா வராதே. நான் தமிழில் பண்ற முதல் நிகழ்ச்சி இதுதான். வரும்போதே தெளிவா, 'தப்பு பண்ணாத் திருத்துங்க மச்சான்'னு சொல்லிட்டுத்தான் வந்தேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை. காக்ரோச்சுக்கு தமிழில் கரப்பான்பூச்சின்னு சொல்லணும். இதைச் சொல்ல வராம, கர்ப்பம்பூச்சி, கர்ப்பம்பூச்சின்னு முக்கா மணி நேரமாச் சொல்லிட்டு இருந்தேன். 'சிறப்பு நிகழ்ச்சி'ன்னு சொல்லணும். நாக்கு வரலை. 'செருப்பு நிகழ்ச்சி'ன்னு சொல்லிட்டேன். எல்லாரும் சிரிக்கிறாங்க. ஒரே பப்பி ஷேம். ஆனா, நான் சீக்கிரமே கத்துக்குவேன்!''


வாரிசு நடிகைகள் சினிமாவில் மட்டும் இல்லை. டி.வி-யிலும் உண்டு. 'இளவரசி', 'வாடகை வீடு', 'பொண்டாட்டி தேவை' என பல சீரியல்களில் நடிக்கும் சந்தோஷியின் அம்மா பூர்ணிமா ஒரு முன்னாள் டி.வி. நடிகை. ''13 வயசுல 'வாழ்க்கை'ன்னு ஒரு சீரியல் பண்ணேன். இன்னமும் அதுதான் என் அடையாளமா இருக்கு. சீரியல் பண்றதைவிட ரியாலிட்டி ஷோ பண்றதுதான் எனக்கு கஷ்டம். நீங்க பார்க்குற அஞ்சு நிமிஷ டான்சுக்காக நாங்க பல நாள் தூக்கமில்லாம உழைக்கணும், ரிகர்சல் பார்க்கணும். ஆனாலும் சீரியலைவிட ரியாலிட்டி ஷோ-வுலதான் இளைஞர்கள்கிட்ட அதிகமா ரீச் ஆக முடியுது'' என்கிறார் சந்தோஷி!Click to Enlarge

சீரியலுக்கு வரும் சினிமா நடிகைகளின் பட்டியலில் புதிதாக இணைகிறார்கள் நதியாவும், சமிக்ஷாவும். 'குரு' என்ற பெயரில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் தயாராகும் புதிய சீரியலில் இருவரும் நடிக்கப் போகின்றனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்படவிருக்கும் இந்த சீரியலை ஹென்றி என்பவர் தயாரிக்க, 'சிந்துபாத்', 'விக்கிரமாதித்தியன்' ஆகிய தொடர்களை இயக்கிய ராஜா இயக்குகிறார்!


'வாரணம் ஆயிரம்' படத்தில் சூர்யாவின் தங்கையாக நடித்த தீபா இப்போது சந்திரலேகா, அனுபல்லவி உட்பட பல சீரியல்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சந்திரலேகாவின் கணவர் நரேந்திரா 'அவிக்னா' என்ற பெயரில் டான்ஸ் ஸ்கூல் நடத்துகிறார். தீபாவும் டான்ஸர்தான். இருவரும் வெளிநாடுகள் பலவற்றில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்!


தமிழகத்தின் செல்லக் குரலைத் தேடும் 'சூப்பர் சிங்கர் ஜூனியர் 2' நிகழ்ச்சியில் இப்போது மிஞ்சியிருப்பது ஏழு பேர். விதவிதமான ரவுண்டுகளில் அத்தனை அழகாகப் பாடும் சிறுவர், சிறுமிகள் ஒவ்வொருவருக்கும் இப்போது தமிழ்நாட்டில் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. கேரளாவில் இருந்து இந்த நிகழ்ச்சிக்காகவே வந்து போகும் அல்கா தமிழ் பேசவும், எழுதப்படிக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறார். ஆடிக்கொண்டேப் பாடும் ஸ்டைலிஷ் பாடகி நித்தியஸ்ரீ ஏழு வயதில் இருந்து மேடையில் பாடுகிறார். 'நிக்காத நித்தியஸ்ரீ' என்பது செட்டில் செல்லப் பெயர். 12 வயது ரோஷன் ஏற்கெனவே சூப்பர் சிங்கர் ஜூனியர் 1-ல் கலந்துகொண்டு இறுதிச்சுற்று வரை வந்தவன். குற்றாலத்தில் இருந்து வந்து சாந்தக் குரலில் பாடும் பிரசன்ன சுந்தரின் குரல் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு அப்படியே மாறிவிட்டிருக்கிறதாம். எல்லோரையும் மிமிக்ரி பண்ணி கலாய்க்கும் ப்ரியங்காவின் அப்பா நல்லத்தம்பி 'புழல்' என்ற படத்தின் இசை அமைப்பாளர். 'உயர்ந்த மனிதன்' என்பது ஷ்ரவனுக்கான செல்லப் பெயர். டான்ஸ் ஆடும் ஷ்ரவனின் பாட்டியும் இப்போது ஃபேமஸ். மெலடிப் பாடல்களை அழகாகப் பாடும் ஸ்ரீநிஷாவின் அப்பா ஒரு மியூஸிக் குரூப் வைத்திருக்கிறார். ஏழு பேரின் குடும்பமும் ஏதோ ஒரு விதத்தில் இசையுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. அதனால் இவர்களைவிட இப்போது அதிக டென்ஷனில் இருப்பது ஏழு பேரின் குடும்பத்தினர்தான்!


இசையருவி நிஷா இப்போது சீரியலிலும் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டார். ''போன வருஷம் சிறந்த பெண் வீடியோ ஜாக்கி விருது வாங்கினேன். அடுத்தது என்னன்னு யோசிச்சப்போ, பாக்யராஜ் சார் இயக்கத்தில் 'விளக்கு வெச்ச நேரத்திலே' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்துச்சு. அவ்வளவு பெரிய இயக்குநர்... வாய்ப்பை மிஸ் பண்ண முடியுமா? அதான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சுட்டேன்'' என்கிற நிஷா, கோயம்புத்தூரில் ஒரு லோக்கல் சேனலில் காம்பியரிங் செய்து முன்னேறி வந்தவர்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil