முதல் தமிழ் கா(டா)ர்சன் படம்!

21 April 2010 ·

old is gold cinema kollywood news, old is gold kollywood special story, kollywood cinema of old is gold, tamil old is gold movies, kollywood old is gold music, Indian music, tamil Music, tamil Songs, Indian songs



முதல் தமிழ் ஆக்ஷன் படமும் 1937ம் ஆண்டில்தான் ரிலீஸானது. ஆனால், அதில் நடித்தது ஆக்ஷன் ஹீரோ கிடையாது. ஹீரோயின்! Ôமின்னல் கொடிÕ என்ற அந்த படத்தில் கே.டி. ருக்மணி நடித்தார். தனது அம்மாவுக்கு உடல் நிலை மோசமாக, டாக்டரிடம் செல்வார் ருக்மணி.

பணம் இருந்தால்தான் வைத்தியம் பார்ப்பேன் என்பார் டாக்டர். அம்மா இறந்து போவார். அதனால் கோபமடையும் ருக்மணி, ஆண் வேஷம் போட்டுக் கொண்டு, செல்வந்தர்களிடம் பணம் திருடுவார். அதை ஏழைகளுக்கு கொடுப்பார். படத்தில் தண்டவாளத¢தில் ரயில் வரும்போது சண்டையிடும் காட்சியில் ருக்மணி நடித்திருப்பார்.

இது ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றது. இதில் ஹீரோவாக பி.எஸ். சீனிவாசராவ் நடித்தார். படம் ஹிட்டானதால் இவர்கள் இணைந்து மேலும் பல ஆக்ஷன் படங்களில் நடித்தனர்.

தமிழ் சினிமாவை கலக்கிய எம்.ஆர். ராதா, 1937லேயே அறிமுகமாக இருந்தார். அதற்கு காரணம் அவரது Ôரத்தக் கண்ணீர்Õ மேடை நாடகம். இந்த நாடகத்தை பார்த¢து பலரும் கலங்கிப் போனார்கள். ஒவ்வொரு முறை ஒவ்வொரு ஊரில் நாடகம் நடத்தும்போதும் கிளைமாக்ஸ் காட்சியின் நேரம் மாறும். சில இடங்களில் 5 நிமிடங்களாகவும் வேறு சில இடங்களில் 10, 15 நிமிடங்களாகவும் நீளும். அன்றைய நாளிதழ்களில் வெளியாகும் முக்கிய செய்திகளை க்ளைமாக்ஸில் ராதா பயன்படுத்துவார்.

அதனால்தான் இந்த மாறுதல். இந்த யுக்தி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இந¢நாடகத்தை படமாக்க ஒரு யூனிட் திட்டமிட்டது. இது பற்றி ராதாவிடமும் பேசினார்கள். Ôசினிமாவில் டைரக்டர்களின் அடிமையாக நான் இருக்க முடியாதுÕ என ஒரே போடு போட்டார் ராதா. அந்த யூனிட் அப்படியே திரும்பிவிட்டது.

"அனாதைப் பெண்", 1938ல் வெளிவந்தது. இதில் எம்.கே. ராதா, ஹீரோ. பி.யூ.சின்னப்பாவும் நடித்திருந்தார். எம்.ஜி.ஆர். & சிவாஜி, ரஜினி & கமல் என¢பது போல அந்த காலத்தில் சூப்பர் ஸ்டார் போட்டியில் இருந்தவர்கள் தியாகராஜ பாகவதரும் பி.யூ. சின்னப்பாவும். பாகவதரை போலவே சின்னப்பாவும் இசை ஞானம் உள்ளவர். பாடக்கூடியவர். அடிக்கடி இவர்களின் ரசிகர்களுக்கு இடையில் சண்டை வரும் நிலை அப்போது இருந்தது.
அந்த காலத¢தில் வெளியான முதல் சினிமா
பத்திரிகை "சினிமா உலகம்". இதன் ஆசிரியர் பி.எஸ். செட்டியார். இவரது திறமையை பற்றி அறிந்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம், தனது படத்துக்கு கதை, வசனம் எழுத அவரை அழைத்தார். அந்த படம் Ôதாயுமானவர்Õ. கடவுளின் தீவிர பக்தரான தாயுமானவரின் கதையிது. தண்டபாணி தேசிகர் இதில் நடித்திருந்தார். ஷூட்டிங்கிற்கு முன்பாக செட்டியாருக்கு சுந்தரம் ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். Ôநீங்கள் 20 நாளுக்கு முன்பே வந்து, கதை, வசனம் எழுதி தர வேண்டும்.

அதன் பின் 1 மாதம் ஒத்திகை நடத்தப்படும்Õ என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஷூட்டிங்கிற்கு முன் ஒத்திகை நடத்தும் வழக்கம் ஹாலிவுட்டில் மட்டுமே இருந்தது. இந்த வழக்கம், தமிழ் சினிமாவில் அப்போதே நுழைந்துவிட்டதை, சுந்தரம் எழுதிய கடிதம் மூலம் அறிய முடிகிறது.

கர்நாடக இசைப் பாடகியான எம்.எஸ். சுப்புலட்சுமி, கச்சேரிகள் மூலம் டாப்பில் இருந்தார். அவரையும் நடிகையாக்கிவிட்டார் கே. சுப்ரமணியம். தான் இயக்கிய Ôசேவாசதனம்Õ படத்தில் சுப்புலட்சுமிதான் ஹீரோயின். அனாதைகள் இல்லம் பற்றிய கதையிது.
இதே ஆண்டில் தமிழ், இந்தியில் வெளியான முதல் படம் "துக்காராம்". இசை கச்சேரிகளை நடத்தும் முசிறி சுப்ர மணிய அய்யர் இதில் நடித்தார். இதையடுத்து மும்மொழி படமாக Ôநந்தகுமார்Õ, தமிழ், இந்தி, வங்க மொழியில் ஒரே நேரத்தில் ரிலீசானது. கிருஷ்ணரின் சிறு வயது கதையிது.

அதனால் 12 வயது சிறுவன¢ இந்த கதைக்கு தேவையாக இருந்தான். சிறுவன¢ கிடைப்பது பெரிய விஷயம் கிடையாது. ஆனால் நடிப்பதுடன் பாடவும் தெரிந்த சிறுவன்தான் வேண்டும் என பட தயாரிப்பாளரான ஏவிஎம் செட்டியார் தீர்மானமாக இருந்தார்.

கிட்டப்பாவின் பாடல்களை 12 வயது சிறுவன் மேடைகளில் பாடுகிறான் என¢பதை செட்டியார் அறிந்தார். அவனையே நடிக்கவும் வைத்தார். அவ(ர்)ன்தான் டி.ஆர். மகாலிங்கம்.

ஆங்கில படங்களை போல இந்தியில் டார்சன் கதை படங்கள் நிறைய வெளிவந்தன. தமிழில் வெளியான முதல் டார்சன் படம், Ôவனராஜா கார்சன்Õ. மிருகங்களுக்கு மத்த¤யில் குழந்தை காட்டில் வளருவான். அவன் பெரியவனாகும்போது மிருகத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவான்.

அதேநேரம், அவனுக்குள்ளும் மனித நேயம் இருக்கும். இத்தகைய கதையில்தான் டார்சன் படங்கள் வந்தன. இந்தப் படத்தை தமிழ், இந்தியில் மும்பையை சேர்ந்த ஹோமி வாடியா இயக்கினார். வடநாட்டை சேர்ந்த ஜான்காவாஸ் ஹீரோ. கதைப்படி ஹீரோ, ஊமை. அதனால் ஜான்காவாசுக்கு மொழி பிரச்னை ஏற்படவில்லை.

காட்டுவாசிகள் படமென்பதால் ஹீரோ, ஹீரோயின் தோல் ஆடை அணிந்துதான் நடிக்க வேண்டும். இதில் ஹீரோயினாக நடித்தது கே.ஆர். செல்லம். அவர் இப்படி நடித்ததும் படத்துக்கு பிரமாணர் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி படம் ஓடியது.
பரதநாட்டியத்தில் அப்போது பிரபலமாக இருந்தார் பானுமதி. அவரை ÔஜலஜாÕ என்ற படத்தில் நடிக்க வைத்தனர். படமும் பரத நாட்டிய டான்சரின் கதைதான். ஆனாலும் கதை சரியில்லாததால் படம் ஓடவில்லை

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites