சென்னை : டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக பிரகாஷ் ராஜ் தெரிவித்தார். இந்தி படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றுபவர் போனி வர்மா. பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் படங்களில் இவர் பணியாற்றினார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து மனைவி லலிதாகுமாரியை விவாகரத்து செய்தார் பிரகாஷ் ராஜ். இதுபற்றி பிரகாஷ் ராஜ் கூறியதாவது: சென்னை, ஐதராபாத்தில் நான் வீடு கட்டுவதாகவும் அதை பிரமாண்டமாக வடிவமைப்பதாகவும் சொல்கிறார்கள். நான் கட்டிடக் கலை படித்தவன். எனது வீடு எந்த விதத்தில் அலங்கரிக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்து, வடிவமைத்து வருகிறேன். கன்னடத்தில் நான் இயக்கியுள்ள Ôநானு நன்னா கனசுÕ இரு வாரங்களில் திரைக்கு வரும். இது Ôஅபியும் நானும்Õ படத்தின் ரீமேக். தொடர்ந்து பல மொழிகளில் நடிக்கிறேன். எனது மகள்களுக்காக பல படங்களில் நடிக்கிறேன¢. அவர்களுக்கு தேவையான அளவுக்கு நான் சம்பாதிக்க விரும்புகிறேன். அதே நேரம், எனது வாழ்க்கை பற்றியும் நான் சில முடிவுகள் எடுக்கும் நேரம் வந்திருக்கிறது. நான் காதலிப்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளேன். இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறினார்.
போனி வர்மாவுடன் திருமணமா? பிரகாஷ் ராஜ்
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment