நித்யானந்தா வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நித்யானந்தா மூலம் ரஞ்சிதாவின் போன் நம்பரை வாங்கிய போலீசார் அவரை தொடர்பு கொண்டனர். அப்போது பேசிய அவர் தான் நேரில் வந்து நடந்த விவரங்களை கூறுகிறேன் என்றார். பகலில் விசாரணை மேற்கொண்டால் இடையூறுகள் இருக்கும். அதனால் என்னிடம் இரவில் ரகசிய அறையில் விசாரணை மேற்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். ஆனால் அவர் எப்போது வருவேன், தற்போது தங்கியுள்ள இடம் ஆகியவற்றை போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. கேரளாவில் இருக்கிறேன் என்று மட்டும் கூறினார். இதையடுத்து ரஞ்சிதா நேற்று இரவு பெங்களூர் வரலாம் என போலீசார் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. தொடர்ந்து ரஞ்சிதா பேசிய போன் நம்பரை வைத்து அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ரஞ்சிதா பேசிய இடம் திருவனந்தபுரம் என்று தெரியவந்துள்ளது என்றும், இதையடுத்து கர்நாடக போலீசார் திருவனந்தபுரத்திற்கு விரைந்துள்ளனர் என்றும், திருனவனந்தபுரத்தில் ரஞ்சிதா எங்கு இருக்கிறார் என ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தகவல் வருகின்றன. நித்யானந்தாவுக்கு நெருக்கமான பெண் சீடரின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. ரஞ்சிதா அங்கிருக்கலாம் என்றும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர் என்றும் தகவல் வருகின்றன
விசாரணையின் போது ரஞ்சிதா பயன்படுத்திய போன் இன்டர்நெட் போன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இருந்து பேசினால் பேசும் இடத்தை கண்டறிவது சிரமம்.
அப்படி இருந்தும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் இன்டர்நெட் இணைப்பு எங்கு வாங்கப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ரஞ்சிதா இருக்கும் இடத்தை காட்டிக்கொடுத்த இன்டர்நெட் போன்
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
1 comments:
Post a Comment