விஜய் – விமர்சனம்- நாங்க விஜய்கிட்ட இருந்து கமல் அளவுக்கெல்லாம் எதிர்பார்க்கல். ஒரே படத்துல பத்து ரோல் பண்ணச் சொல்லல. பத்து படமா தொடர்ந்து ஒரே ரோல் பண்ண வேண்டாம்னுதான் சொல்றோம்

30 April 2010 ·

விஜய் – விமர்சனம்

நானும் வேண்டாம், கூடாது, பேசவே கூடாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எங்கு ஓடினாலும் துரத்தித் துரத்தி பயமுறுத்துவதால் ‘சுறா’வைப் பற்றி பேச வேண்டிய நிர்பந்தம்.

இன்று காலையில் சென்னை ஹலோ எஃப்.எம். சுசித்ரா நிகழ்ச்சியில் பேசப்பட்ட விஷயம் : தொடர்ந்து பல படங்களாக ஒரே ஃபார்முலாவில் நடித்துக் கொண்டிக்கும் விஜய் அதை மாற்றிக் கொள்ள வேண்டுமா?

போனில் பேசியவர்கள் எல்லோருமே ‘கண்டிப்பாக மாற்றியே தீர வேண்டும்’ என்று கொட்டித் தீர்த்துவிட்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய சிலரது கருத்துகள் :

ஒரு பெண் : விஜய்க்கு டான்ஸ் மட்டும்தான் ஆடத் தெரியும். அதுலயும் வித்தியாசமா, கஷ்டப்பட்டு பண்றதா நினைச்சு தரையில படுத்து தவழ ஆரம்பிச்சுடுறாரு. பாவமா இருக்கு.

***

ஒரு குடும்பத் தலைவி : இந்த படமாவது நல்லாயிருக்கும்னு மனசைத் தேத்திக்கிட்டு ஒவ்வொரு விஜய் படமும் தியேட்டர்ல போய் பார்க்கத்தான் செய்யுறேன். ஆனா ஒவ்வொரு தடவையும் ஏமாற்றமா இருக்குது. வெறுப்பா இருக்குது. இன்னிக்கு நைட்கூட சுறா போகலாம்னு இருக்கேன். விஜய் வேற மாதிரி நடிச்சா நல்லாயிருக்கும்.

***

ஒரு குடும்பத் தலைவர் : நாங்க விஜய்கிட்ட இருந்து கமல் அளவுக்கெல்லாம் எதிர்பார்க்கல். ஒரே படத்துல பத்து ரோல் பண்ணச் சொல்லல. பத்து படமா தொடர்ந்து ஒரே ரோல் பண்ண வேண்டாம்னுதான் சொல்றோம்.

***

ஒருவர் : விஜய் தன்னைக் கண்டிப்பா மாத்திக்கணுங்க. நடிப்புக்கு ஸ்கோப் உள்ள மாதிரி கேரக்டர் பண்ணனுங்க.

சுசித்ரா : அந்த ரிஸ்க் எடுக்கணுங்கிறீங்களா? அவரால முடியுமா?

ஒருவர் : ஏங்க, ஐம்பது படம் நடிச்சுட்டாரு. இன்னும் இந்த ரிஸ்க் கூட எடுக்கலேன்னா எப்படி?

***

நேயர் : விஜய் ஒரு தேசிய விருதாவது வாங்கணும். அப்படி ஒரு படத்துல நடிக்கணும்.

சுசித்ரா : அவர் உங்ககிட்ட தேசிய விருது வேணும்னு கேட்டாரா?

நேயர் : இல்லீங்க. நெம்பர் ஒன் இடத்துல இருக்கிறதா சொல்லிக்கிறாங்க. ஒரு விருதாவது வாங்கி அந்த இடத்துக்கு நியாயம் சேர்க்க வேண்டமா?

***

நிகழ்ச்சியில் பேசிய எல்லோரும் விஜயின் படங்களில் மாற்றத்தை எதிர்பார்த்தே பேசினார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகும் டப்பா படங்களுக்குக் கூட எஃப்.எம்.களில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளே அரங்கேறிக் கொண்டிருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சி விஜயைக் கேலி செய்ய வலுவான களம் அமைத்துக் கொடுத்ததுபோல அமைந்தது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு சுசித்ரா கடைசியில் சொன்ன வழிசல் வார்த்தைகள்.. ஹிஹி!

விஜய் எனக்கு நல்ல ப்ரெண்ட். அவரோட டான்ஸ் சான்ஸே இல்ல. அவர் சொன்ன தகவலை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன். அடுத்து அவர் நடிக்கிற த்ரீ இடியட்ஸ்ல ஒரு ஸீன்கூட மாத்தக்கூடாதுன்னு சொல்லிருக்காராம்.

சுசித்ராவுக்கு ஒரு கமெண்ட் : உங்கள் நிகழ்ச்சியில் நீங்கள் பாடிய பாடல்களை மட்டும் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேல் ஒலிப்பரப்பு செய்வது ரொம்ப ஓவர்.

***

விஜய் படங்களில் எனக்குப் பிடித்தது – 1. குஷி 2. காதலுக்கு மரியாதை 3. லவ் டுடே.

கடைசியாக தியேட்டருக்குச் சென்று (அதாவது நண்பர்களால் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதால்) பார்த்த படம் : சிவகாசி.

சுறா பார்க்கும் துர்பாக்கியமான சூழல் என் வாழ்க்கையில் அமைந்துவிடாது என்று எல்லாம் வல்ல கோடம்பாக்கீஸ்வரரை வேண்டிக் கொள்கிறேன்.

அது சரி. விஜய் மாற வேண்டியது பற்றி என் கருத்து…?

தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து இதுதான் என் கருத்துன்னு பாட நான் என்ன விஜயா? அட போங்கப்பு… நாட்டுல மாத்த வேண்டியது எவ்வளவோ இருக்கு. அதை விட்டுப்புட்டு

நன்றி முகில்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites