ருத்திரகுமாரன்... எதிர்ப்பும் ஆதரவும்!

24 April 2010 ·

ருத்திரகுமாரன்...
எதிர்ப்பும் ஆதரவும்!

நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் அமைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டமாகத் தொடரும் முயற்சிகள் பற்றி கடந்த இதழில் விளக்கமாகக் கூறியிருந்தோம். 'இனி ஆயுதப் போராட்டம் என்பதே இல்லை' என்று விசுவநாத ருத்திரகுமாரன் கூறியதாக அதில் வெளியான செய்தி, தமிழீழப் போராட்டத்தை வேறு பாணியில் தொடர நினைக்கும் இன்னொரு அணியினரின் எதிர்ப்புக்கு ஆளாகிவிட்டது. விளைவு, ருத்திரகுமாரனுக்கு எதிராக இணையதளங்கள் வாயிலாக அவர்கள் கணை பாய்ச்சத் தொடங்கிவிட்டார்கள். பதிலுக்கு ருத்திரகுமாரனும், நாடு கடந்த ஈழ அரசாங்கம் எத்தகைய சூழலில், நடைமுறை நிலைமையைக் கருத்தில்கொண்டு

அமைக்கப்படுகிறது என்பதை மிக விளக்கமாக இணையதளங்களின் மூலம் கூறியிருக்கிறார். கூடவே, 'நாடு கடந்த தமிழீழம் குறித்து தமிழ்நாட்டு சஞ்சிகை ஒன்றில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டதாகக் கூறப்பட்டுள்ள ஆயுதப் போராட்டம் குறித்த கருத்துகள் எவையும் என்னால் கூறப்படாதவை' என்று சொல்லியிருக்கிறார் ருத்திரகுமாரன்!

'ஆயுதப் போராட்டம் குறித்து என்னுடன் எதுவுமே பேசப்படவில்லை. அச்சஞ்சிகையின் கட்டுரையாளருடன் நான் மேற்கொண்டது தேர்தல் நடைமுறை தொடர்பான ஒரு சிறு உரையாடல் மட்டுமே' என்றும் விளக்கம் அளித்திருக்கிறார் ருத்திரகுமாரன்.

இதுகுறித்து விவரமான வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாவதை விரும்பாத சில சக்திகள் பற்றி தகவல் கிடைத்தது. ''இந்த ஜனநாயகமான அமைப்பை உருவாக்கும் முயற்சியில் உள்ளவர்கள்... அதன்மூலம் உலக நாடுகளை இலங்கை அரசுக்கு எதிராக நெருக்கடி கொடுக்க வைத்தால் மட்டு மே, ஈழத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத சிலர் - 'பிரபாகரன் இடத்துக்கு ருத்திரகுமாரன்' வர நினைக்கிறார் என்று அர்த்தமற்ற ஒரு கருத்தை உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள் மத்தியில் பரப்பத் துவங்கிவிட்டார்கள். 'இனி ஆயுத வழிப் போராட்டம் இல்லை என்று கூறுவது, ஆயிரக்கணக்கில் உயிர் துறந்த விடுதலைப்புலி வீரர்களை அவமதிப்பது போல் இருக்கிறது' என்ற கருத்தையும் அவர்கள் பரப்புகிறார்கள்...'' என்று விவரம் சொல்லுகிறார்கள் ஒரு தரப்பினர்.

ஐரோப்பிய நாடுகளில் புலி ஆதரவாளர்கள் மிக அதிகம். அவர்களில் சிலர் இன்னமும் வன்முறை கலாசாரத்தை கைவிடத் தயாராக இல்லை. அதேசமயம் அவர்களின் ஆதரவின்றி ருத்திரகுமாரன் அணி ஜெயிக்க வாய்பில்லை. ஆயுதம் வாங்குவது, அதற்கான பணம் வசூலிப்பது ஆகியவற்றில் நாட்டம் கொண்டவர்கள் ருத்திரகுமாரனை எதிர்ப்பதில் வியப்பில்லை. காரணம், ஈழத் தமிழர்களின் தீர்வுக்காக இந்தியாவுடன் இணைந்து செயல்படவே ருத்திரகுமாரன் விரும்புகிறார். அதற்கு வன்முறை வழி நிச்சயம் சரிப்பட்டு வராது! இதை ஏற்காதவர்களோ, ''போரில் நம்மை அழிக்க காரணமாக இருந்த இந்தியாவின் தயவு தேவையில்லை. இருக்கவே இருக்கிறது பாகிஸ்தான், பர்மா, வங்காளதேசம்!' என்று கூறி வருகிறார்களாம்.

எப்படியோ... ஜனநாயகமா அல்லது மீண்டும் ஆயுதப் போராட்டமா என்பதற்கான முடிவு, நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் அமைப்பதற்கான முதல்கட்ட தேர்வு நடக்கும் மே மாத இறுதியில் தெரிந்துவிடும். அந்த வகையில், ஜூ.வி-யின் கடந்த இதழ் கட்டுரை, உலகளாவிய ஈழத் தமிழர்கள் மத்தியில் புதிய விவாதப் பொருளாகியிருப்பதும் முக்கிய திருப்பம்தான்!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil