ஐ.பி.எல். அமைப்புக்கு தடை விதித்து கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள் : பால் தாக்கரே

21 April 2010 ·

ஐ.பி.எல். அமைப்புக்கு தடை விதித்து, 'கிரிக்கெட்'டை காப்பாற்றுங்கள் என்று என்று சிவசேனை தலைவர் பால் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வில் அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், "தற்போது ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி மற்றும் முன்னாள் அமைச்சர் சசி தரூர் இடையே ஏற்பட்ட சர்ச்சை 'ஜென்டில்மேன்' விளையாட்டான கிரிக்கெட்டின் மதிப்பையே களங்கப்படுத்திவிட்டது.

கிரிக்கெட் விளையாட்டை காப்பாற்றுவதற்கு ஐ.பி.எல். போட்டியைத் தடை செய்ய வேண்டும். மத்திய அரசு கிரிக்கெட் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், ஐ.பி.எல். அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

ஐ.பி.எல். போட்டி முழுவதும் பணத்தைச் சுற்றியே நடக்கிறது. ஐ.பி.எல். அமைப்பின் நிதி ஆதாராம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்," என்று கூறியிருக்கிறார் பால் தாக்கரே.

கிரிக்கெட் ரசிகரான பால் தாக்கரே, ஐ.பி.எல். கடைசி லீக் போட்டியில் மும்பை அணியின் தோல்வியால் மிகவும் வருத்தமடைந்துள்ளார். அந்தப் போட்டி 'ஃபிக்ஸிங்' என்றும் அவர் சந்தேகிக்கிறார்.

இதுகுறித்து அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பால் தாக்கரே, "எட்டு முதல் 10 போட்டிகள் வரை தொடர்ந்து வெற்றி பெற்ற மும்பை அணி, கோல்கத்தாவிடம் தோல்வியுற்றது வருந்தத்தக்கது.

அந்தத் தோல்வி ஏற்பட்டதன் பின்னணி என்ன? அந்தப் போட்டியில் சச்சின் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெறாதது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் இயல்பான ஒன்று. அதேநேரத்தில், கடைசி லீக் போட்டியில் கோல்கத்தா அணியிடம் மும்பை தோல்வியுற்றது சந்தேகத்துக்குரியது. அதில், 'புக்கீஸ்' கைவண்ணம் இருக்கக் கூடுமோ என தெரிகிறது," என்று குறிப்பிட்டிருக்கிறார் பால் தாக்கரே.

குறிப்பாக, ஐ.பி.எல். அமைப்புடன் தொடர்புடைய நடிகர்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே அவரது கோரிக்கை

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil