ரத்த பலி... கொடூர கொலை...!

24 April 2010 ·

பதில் சொல்கிறார் மேயர்
ரத்த பலி... கொடூர கொலை...!

மிழகத்தின் முதல் இளம் வயது பெண் மேயர் என்ற பெருமைக்குரியவர் சேலம் மாநகராட்சி மேயர் ரேகா பிரியதர்ஷினி. கடந்த ஒரு மாதத்தில் அவரை மையப்படுத்தி சேலத்தில் கிளம்பியிருக்கும் சர்ச்சைகள் ஏராளம். அத்தனைக்கும் மௌனத்தையே இதுவரை பதிலாக்கி வந்த ரேகா பிரியதர்ஷினி, நம் கேள்விக்கு இதோ பதில் தருகிறார் -

''அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு தொடர்பா தி.மு.க. வார்டு செயலாளர் சோலைராஜன் கடந்த வாரத்துல கொடூரமா கொலை செய்யப்பட்டாரு. அது கொலையாளிகள் உங்களுக்கு வைச்ச குறின்னு சொல்றாங்களே..?''

''என்னோட வார்டுல இருந்த குடிசைகளைஎல்லாம் அப்புறப்படுத்திட்டு, அந்த இடத்துல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர முடிவு செஞ்சோம். அந்தப் பகுதியில குடியிருந்த சிலர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாங்க. கோர்ட் ஆர்டர்படிஅவங்களை காலி பண்ணி குடியிருப்புகள் கட்டினோம். பயனாளிகள் எல்லாருக்கும் முறைப்படி வீடுகள் ஒதுக்கப்பட்டன. வீடுகள் ஒதுக்கீடு செஞ்சதுல எனக்கோ, வார்டு செயலாளர் சோலைராஜன் அண்ணாவுக்கோ எந்த சம்பந்தமும் இல்ல. ஆனா, இதுல எங்க தலையீடு இருப்பதா, அந்தக் குப்பத்தைச் சேர்ந்த சிலர், மக்கள் மத்தியில தப்பான தகவலை பரப்பிட்டு இருந்தாங்க. அந்தக் கோபத்துலதான் சோலை அண்ணாவை (அப்படித்தான் குறிப்பிடுகிறார்!) கொலை பண்ணியிருக்காங்க. அந்த வார்டுக்கு நான் கவுன்சிலர்ங்குறதால என் மேலயும் கோபம் இருந்திருக்கலாம். அதுக்கு நான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க..?''

''உங்களுக்கு தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில பிரச்னை வருவதாகவும், அதற்காக நீங்க ஒரு ஜோசியரை பார்த்ததாகவும், சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் மாநகராட்சியில் ஆடு வெட்டி ரத்தபலி கொடுத்ததாகவும் சொல்கிறார்களே..?''

''நான் மதிக்கிற பகவத்கீதை மேல சத்தியமா சொல்றேன். மாநகராட்சியில ஆடு வெட்டி ரத்தபலி கொடுத்ததற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அப்படி ஒரு விஷயம் நடந்ததே எனக்கு டி.வி-யில நியூஸ் பார்த்த பிறகுதான் தெரியும். பத்து நாளா ஆபீஸ§க்கு வராத மேயர், ரத்தபலி கொடுத்த பிறகுதான் வந்தாங்கன்னுகூட சொன்னாங்க. உண்மையிலேயே எனக்கு தொண்டை வலி. டாக்டர் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதனாலதான் எங்கேயும் போகவே இல்ல. ஆடு வெட்டி பலி கொடுத்தது யாருன்னு நான் விசாரிச்சேன். மாநகராட்சிக்குள்ள ஒரு பில்டிங் வேலை நடந்துட்டு இருக்குது. அதுல வேலை செய்ற ஆளுங்க அடிக்கடி கீழே விழுந்துட்டே இருந்திருக்காங்க. அதுக்காக அந்த பில்டிங் கட்டுற கான்ட்ரக்ட்காரங்கதான் ஆடு வெட்டி ரத்தபலி கொடுத்திருக்காங்க. இதுல மாநகராட்சி ஊழியர்கள் யாராவது சம்பந்தப்பட்டிருந்தா... அவங்க மேல நடவடிக்கை எடுக்கச்சொல்லி கமிஷனர்கிட்ட சொல்லியிருக்கேன்.''

''மாவட்ட அமைச்சரும் அவரது சகாக்களும்தான் உங்களை ஆட்டி வைப்பதாகவும், அவர்களை மீறி நீங்கள் எதுவும் செய்வதில்லைன்னும் புகார் சொல்கிறார்களாமே..?''

''மாநகராட்சி விஷயத்துல எப்போதுமே அமைச்சரோ... அல்லது, கட்சிக்காரங்களோ தலை யிட்டது கிடையாது. எனக்கு எல்லா விதத்திலுமே முழு சுதந்திரம் கொடுத்திருக்காங்க. இளைஞர்களும் படிச்ச வங்களும் அரசியலுக்கு வரணும்னு எல்லோருமே பேசுறாங்க. ஆனா, அப்படி யாராவது அரசியலுக்கு வந்தா... அவங்களைக் குறை சொல்றதே வேலையா போச்சு!'' என்று கரம் கூப்பினார் மேயர்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil