மளமள வருமானம்...'மல்டி பேகர்' பங்குகள்!

05 May 2010 ·

மளமள வருமானம்...


'மல்டி பேகர்' பங்குகள்!

ரு கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்தால் சந்தோஷம். ஒரே கல்லில் ஐந்து மாங்காய் கிடைத்தால்...? பங்குச் சந்தையிலும் இதே மாதிரி ஒரு கல், ஐந்து மாங்காய் பங்குகள் இருக்கவே செய்கின்றன. இந்த மாதிரியான பங்குகளுக்கு மல்டிபேகர் (Multibagger) பங்குகள் என்று பெயர். இந்தப் பங்குகளை சரியாக இனம் கண்டு, அதில் முதலீடு செய்துவிட்டு பொறுமையாக இருந்தாலே போதும்; நம் முதலீடு மளமளவென பல மடங்காக பெருகும் என்பதில் சந்தேகமே இல்லை.

மல்டிபேகர் பங்கா? அப்படி என்றால்...?

''சிம்பிள்'' என்று உற்சாகமாக விளக்கிச் சொன்னார் மும்பையைச் சேர்ந்த பிரைம் புரோக்கிங் கம்பெனி (இந்தியா) நிறுவனத்தின் இயக்குநர் டி.எஸ். அனந்தகிருஷ்ணன்.

''ஒவ்வொரு ஆண்டும் பங்குச் சந்தை குறிப்பிட்ட வளர்ச்சியைக் காணும். சென்செக்ஸ் அல்லது நிஃப்டி குறியீடுகளின் வளர்ச்சியை விட குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக வருமானம் தரும் பங்குகளைத்தான் மல்டிபேகர் பங்குகள் என்கிறார்கள்.'' என்றவரிடம், ''இது போன்ற பங்குகளைத் தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களை என்னென்ன'' என்று கேட்டோம்...

''நாம் வாங்க நினைக்கும் பங்கு நிறுவனம் சிறப்புத் தன்மை வாய்ந்ததா? அதன் ஃபண்டமென்டல் வலிமையானதா? நிறுவனம் சார்ந்திருக்கும் துறை அடுத்து வரும் ஆண்டுகளில் நிச்சயமாக வளர்ச்சிப் பாதையில் செல்லுமா? என்பது போன்ற விஷயங்களை கவனிப்பது மிக அவசியம். மேலும், கம்பெனியின் நிர்வாகம் தரமானதாக இருக்கிறதா? எந்த ஒரு பிரச்னையையும் சுலபமாக சமாளிக்கும் ஒற்றுமையான நிர்வாகம் இருக்கிறதா? திறமை வாய்ப்புள்ள வணிகம்தானா? மூலதனத்தை முழு அளவில் பயன்படுத்துகிறதா? இது போன்ற பல்வேறுவிஷயங்களை அலசி ஆராய்ந்து, அந்த நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பை அறிந்து கொள்ள வேண்டும். அடுத்த 4-5 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி அபாரமாக இருக்க வேண்டும்..'' என்றவர், மல்டிபேகர் பங்குகளில் உள்ள பாதக அம்சத்தையும் சொல்லத் தவறவில்லை.

''மல்டிபேகர் பங்குகள் அதீத வருமானம் அளிக்கும் அதே நேரத்தில், அதிக ரிஸ்கை கொண்டதாக இருப்பதையும் முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிக வருமானத்தைப் பெற, இந்தப் பங்குகளை அதன் விலை மிகவும் கீழ் இறங்கி வரும் காலத்தில் வாங்குவது புத்திசாலிதனம். வாங்கும் விலைதான் நீங்கள் அடையப் போகும் லாபத்தின் அளவை நிர்ணயிக்கும். இதைவிட முக்கியமானது பொறுமை. இந்தப் பங்குகளை பொறுத்தவரையில் இன்றைக்கு வாங்கி, நாளைக்கு லாபம் பார்ப்பது என்பது இயலாத காரணம். இன்றைக்கு அதன் உண்மை மதிப்பு வெளித் தெரியாத நிலையில்தான் அதனை வாங்குகிறோம் என்பதை முதலீட்டாளர்கள் மறந்துவிடக் கூடாது. நீண்ட காலத்துக்கு இந்தப் பங்கை வைத்திருந்தால் மட்டுமே அதிக லாபத்தைப் பார்க்க முடியும்'' என்றார்.

நாணயம் விகடன் வாசகர்களுக்காக அனந்தகிருஷ்ணன் தேர்வு செய்து தந்த ஐந்து மல்டிபேகர் பங்குகளும் அதற்கான காரணங்களும் இதோ:


பாலியெஸ்டர் சிப்ஸ் தயாரிப்பில் இருக்கும் முன்னணி நிறுவனம். இப்பிரிவில் இந்தியாவில் இதன் சந்தைப் பங்களிப்பு 51%. ஐக்கிய அரபு நாடுகளில் 90%, வளைகுடா நாடுகளில் 60% என்கிற அளவில் சந்தை பங்களிப்பைக் கொண்டிருக்கிறது. பகுதி பாலியெஸ்டர் சார்ந்த நூல் (Partially Oriented Yarn) தயாரிப்பில் இந்தியாவின் டாப் 5 நிறுவனங்களில் இது ஒன்று. 1986-ல் பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாறியது; கடந்த 25 ஆண்டுகளில் 250 மடங்கு வளர்ச்சி கண்டிருக்கிறது.

பாலியெஸ்டர் சிப்ஸ் தயாரிப்புக்கான பேக்வேர்ட் இன்டகிரேடட் திட்டங்களையும் இந்த நிறுவனம் கொண்டிருப்பது சிறப்பு. சிறந்த தரத்துக்காக ஐ.எஸ்.ஓ. 9001, சுற்றுச்சூழலுக்காக ஐ.எஸ்.ஓ. 14001 சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.ந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனம். இந்தியாவின் டாப் 100 நடுத்தர அளவு நிறுவனங்களில் இதற்கு 52-வது இடம். இதன் மூன்று பிரதான பிரிவுகளாக வாகனத் தயாரிப்பு, மெஷின் டூல்கள், என்ஜினீயரிங் ஆகியவை இருக்கிறது.

சுற்றுலா, ஸ்கூல் வேன்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்கான 6 வகை வாகனங்களைக் கொண்டுள்ளது. இதன் மெஷின் டூல்கள் பிரிவு 70 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சி.என்.சி. மெஷின்களை மொத்தமாக தயாரித்து வருகிறது. இவை இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு ஆசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது.

இதன் என்ஜினீயரிங் பிரிவு, இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மெஷின் வடிவமைப்பு மற்றும் இயந்திர பாகங்களை உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது.

இந்நிறுவனத்தின் ஆர்டர்கள் அரசுத் துறையான ரயில்வே மற்றும் ராணுவத்திடமிருந்து கிடைத்து வருவது முக்கிய பலம். அரசு மின் திட்டங்கள், உள்கட்டமைப்புத் துறைகளில் நிறைய திட்டங்களை பிரீமியர் நிறுவனம் நிறைவேற்றி வருகிறது.

இந்நிறுவனத்துக்கு மும்பையில் 216 ஏக்கரில் தொழிற்சாலைக்கான நிலம் இருக்கிறது. இதன் தோராய மதிப்பு 450 முதல் 550 கோடி ரூபாய். பங்கின் விலை,

இந்த இடத்துக்கு மட்டுமே இணையானதாக இருக்கிறது. தற்போது குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கும் பங்கின் விலை எதிர்காலத்தில் அதிக வளர்ச்சி காணும் எனலாம்.பேக்கேஜிங் துறையில் முன்னணி நிறுவனமான மும்பையிலுள்ள சோமானி குழுமத்தை சேர்ந்தது ஓரிகான் என்டர்பிரைசஸ். இது பிளாஸ்டிக் மற்றும் உலோக மூடிகள், மெட்டல் கன்டெய்னர்கள், அலுமினியம் ஃபாயில்கள் போன்றவற்றை தயாரித்து வருகிறது. கோக் நிறுவனத்தின் குளிர்பான மூடிகள் இதன் தயாரிப்புதான். 1970-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இதன் பதிவு அலுவலகம் மற்றும் தொழிற்சாலை மும்பையில் இருக்கிறது. ஹோல்டிங் நிறுவனமான யுனைடெட் ஷிப்பர்ஸ்-ஐ தன்னுடன் இணைக்கப் போகிறது.

இந்நிறுவனம், நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், ஸ்டீல் பொருட்கள், உப்பு, சர்க்கரை போன்றவற்றின் சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டு வருகிறது. மும்பையில் ஓர்லியை அடுத்து இந்நிறுவனத்துக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 400 கோடி ரூபாய். இந்நிறுவனம் ரியல் எஸ்டேட்டிலும் களமிறங்க இருக்கிறது. அப்போது இந்த இடத்தின் மூலம் கணிசமாக வாடகை வருமானம் கிடைக்கும். இது நிறுவனத்தின் லாபத்தை அதிகரித்து, பங்கின் மதிப்பையும் கூட்டும்.ந்தியாவின் ஒருங்கிணைந்த சுற்றுலா மற்றும் சுற்றுலா சார்ந்த நிதிச் சேவை நிறுவனம் இது. அந்நியச் செலாவணி பரிமாற்றம் (ஃபோரக்ஸ்), கார்ப்பரேட் டிராவல், கிரெடிட் கார்ட்கள், ப்ரி பெய்ட் கிரெடிட் கார்ட்கள், இன்ஷூரன்ஸ் போன்றவை இதன் முக்கிய பணிகளாக இருக்கின்றன். இந்தியாவில் 127 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் இந்த நிறுவனத்துக்கு நாடு முழுக்க 72 நகரங்களில் 180-க்கும் மேற்பட்ட இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. இலங்கை மற்றும் மொரீசியஸிலும் இயங்கி வருகிறது. சுற்றுலா தொடர்பான பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளது.

இதன் தாய் நிறுவனம் தாமஸ் கூக் குரூப். இதன் வருமானத்தில் முக்கிய இடத்தை ஃபோரக்ஸ் பிடித்திருக்கிறது. தற்போது உலக அளவிலான தொழில் மற்றும் பொருளாதார மந்தநிலை சீராகி வருவதால் டிராவல் பிஸினஸ¨ம் மேம்பட்டு வருகிறது. இது இந்நிறுவனத்துக்கு மிகவும் சாதகமான அம்சம்.சிறப்பு வகை மருத்துவமனை நிறுவனமான ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், அண்மையில்தான் வோக்ஹார்ட் மருத்துவமனையை கையகப்படுத்துவது தொடர்பான பணிகளை நிறைவு செய்திருக்கிறது. மேலும், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இங்கிலாந்தில் நுழையத் திட்டமிட்டுள்ளது. இதற்கு சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நாட்டின் 20 பிரதான இடங்களில் மருத்துவமனைகள் உள்ளன. மேலும், நாடு முழுவதும் மருத்துவமனைகளை திறக்கும் திட்டத்தில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறது. 2011-ம் ஆண்டில் இதன் மருத்துவமனைகளில் மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 6,600 ஆக அதிகரிக்கும்.

நாட்டு மக்களின் சராசரி வருமானம் அதிகரித்து வருவது மற்றும் உடல் நல பாராமரிப்புக்காக செலவிடுவது அதிகரிப்பு போன்றவை ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு மிகவும் சாதகமான அம்சமாக மாறியிருக்கிறது.

நன்றி விகடன்

2 comments:

unmaivrumbi said...
May 5, 2010 at 2:44 AM  

Respected Sir,
You have ritten "ORICON" CMP:12.50
But today cmp:335.00
kindly rectified it

govind,
mumbai

Aathavan said...
May 5, 2010 at 9:52 AM  

Mr.கோவிந்த் sir
உங்களுடைய தகவலுக்கு நன்றி ,
இது ஜுனியர் விகடன் இல் வெளியான ஒரு பதிவு , அட்லிஸ்ட் இந்த பதிவை பார்தவர்களுக்கவாது உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ,
தொடர்ந்து இந்தமாதிரியான பதிவுகளை இட துண்டுகிறது ,
நன்றி

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil