படுக்கையறை விவகாரம்... வெளிவராத தகவல்கள்! '' மந்திரி வேட்டி என் கையில...''

04 May 2010 ·

படுக்கையறை விவகாரம்... வெளிவராத தகவல்கள்!
'' மந்திரி வேட்டி என் கையில...''

'பயங்கர ஜொள்ளு பார்ட்டி' என்பதை கல்லூரி மாணவர்கள் தங் கள் அகராதியில் 'பி.ஜே.பி' என் பார்கள் ஜாலியாக. இப்போது கர்நாடகத்திலோ பி.ஜே.பி-யைச் சேர்ந்த அமைச்சர்கள் அடுத்தடுத்து ஜொள்ளு குற்றச்சாட்டில் சிக்கி பேஜார் ஆகியிருக்கிறார்கள். லேட்டஸ்டாக தன் மந்திரி பதவியையே ராஜினாமா செய்திருக்கிறார் கர்நாடக உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக இருந்த ஹாலப்பா! ஷிமோகா, வினோபா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசமூர்த்தி. ஃபைனான்ஸ் தொழில் செய்துவரும் இவர், அமைச்சர் ஹாலப்பாவின் நெருங்கிய நண்பர் மற்றும் தூரத்து உறவினர்

இவரது மனைவி சந்திரம்மா, ''என்னிடம் அமைச்சர் ஹாலப்பா தவறாக நடக்க முயன்றார்...'' என கர்நாடக காவல் துறை டி.ஜி.பி-யிடம் புகார் கொடுத்து இருக்கிறார். இது பற்றி சந்திரம்மாவிடம் பேசினோம்.

''ஹாலப்பா போன வருஷம் நவம்பர் மாசம், கட்சித் தொடர்பான வேலையாக ஷிமோகா வந்தார். எங்க வீட்டி லேயே அன்று தங்கினார். அன்னிக்கு ராத்திரி நான், எங்க வீட்டுக்காரர், ஹாலப்பா மூணு பேரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். 11 மணிக்குதான் சாப்பிட்டோம். அப்போகூட, 'சமையல் ரொம்ப நல்லா இருக்கு தங்கச்சி... இதுக்காகவே தெனமும் நான் இங்கே வந்துடலாம்போல இருக்கு'ன்னாரு. சாப்பிட்டு முடிச்சதும், மாடி ரூம்ல அவரைப் படுக்க அனுப்பி வெச்சோம். நானும் எங்க வீட்டுக்காரரும் கீழே இருக்குற ரூம்ல படுத்திருந்தோம். விடிகாலை மூணு மணி இருக்கும். எங்க ரூம் கதவை யாரோ தட்ட... தவைத் திறந்து பார்த்தா, ஹாலப்பா நின்னுட்டு இருந்தாரு. 'நெஞ்சு படபடப்பா இருக்கு. கெஸ்ட் ஹவுஸ்ல என் பேக்ல மாத்திரை இருக்கு. போய் எடுத்துட்டு வா'ன்னு என் வீட்டுக்காரர்கிட்ட சொன்னார். அவரும் கிளம்பிப் போனார்.

நான் தூக்கக் கலக்கத்துல பெட் ரூம்லயே படுத்திருந்தேன். கொஞ்ச நேரத்துல என் உடம்புல ஏதோ ஒரு கை படுற மாதிரி இருக்கவும், முழிச்சிக்கிட்டேன். என் பக்கத்துல ஹாலப்பா படுத்திருந்தாரு. 'சந்திரம்மா... உன் மேல நான் உசுரையே வெச் சிருக்கேன். பேசாம படு, உனக்கு என்ன வேணும்னாலும் நான் பண்றேன்'னு உளறினாரு. எனக்கு தூக்கிவாரிப் போட... படுக் கையில இருந்து வேகமா எழுந்தேன். ஆனா, ஹாலப்பா என் கையைப் பிடிச்சு மறுபடியும் படுக்கையிலேயே தள்ளிட்டாரு. என்னைக் காப்பாத்திக்க முடிஞ்சவரை போராடி, அவரைத் தள்ளி விட்டுட்டு எழுந்துட்டேன்.

அதுக்குள்ள என் வீட்டுக்காரர் வந்துட்டாரு. என் கோலத் தைப் பார்த்து அவருக்கு என்ன நடந்திருக்கும்னு புரிஞ்சு போச்சு. வந்த வேகத்துல ஹாலப்பாவை நாலு அறை விட்டார். ஹாலப்பா மயங்கி விழுந்துட்டார். நாங்க பயந்துட்டோம். முகத்துல தண்ணி தெளிச்சதும் ஹாலப்பா எழுந்து உட்கார்ந்துட்டாரு. 'என்னை மன்னிச்சிருங்க. தெரியாம பண்ணிட்டேன். இந்த விஷயத்தைப் பெருசு படுத்தாதீங்க'ன்னு சொல்லிட்டு, அதிகாலையிலே வீட்ல இருந்து கிளம்பிட்டாரு.

என்னை பெட்ரூம்ல ஹாலப்பா பலாத்காரம் செஞ்சப்போ, அவர் வேட்டியை நான் பிடிச்சு இழுத்துட்டேன். அது இன்னும் என்கிட்டதான் பத்திரமா இருக்கு. அதோட அவர் விட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனா, அதுக்குப் பிறகும் தொடர்ந்து எனக்கு போன் பண்ண ஆரம்பிச்சிட்டாரு. 'நான் நினைச்சா ஆயிரம் பொண்ணுங்களை வரவைக்க முடியும். ஆனா, எனக்கு உன்னைத் தவிர வேற யாரையும் பிடிக்கலை, சந்திரம்மா. நீ எனக்கு வேணும் சந்திரம்மா...'ன்னு அடிக்கடி டார்ச் சர் கொடுத்தாரு. ஒரு கட்டத்துல நான் கண்டபடி திட்டவும், என்னை பதிலுக்கு மிரட்ட ஆரம்பிச்சாரு. ஹாலப்பா எங்க வீட்டு பெட் ரூம்ல இருந்த காட்சி எங்க வீட்டுக்காரரோட செல்போன்ல பதிவாகி இருக்கு. அவரோட வேட்டியும் என்கிட்ட இருக்கு. இத்தனை ஆதாரங்களும் இருக்க... ஹாலப்பா மீது இப்போ புகார் கொடுத்துட்டேன். நண்பன் பொண்டாட்டியை அனுப விக்கத் துடிக்கிற இந்த மாதிரி ஆளுங்க மந்திரியா இருந்தா... நாடு எப்படி நல்லா இருக்கும்?'' என்று அழுதபடியே கேட்டார் சந்திரம்மா.

எதிர்க்கட்சிகளின் நெருக்கடி காரணமாக தற்போதைக்கு தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ள ஹாலப்பாவிடம் பேசியபோது, ''வெங்கடேசமூர்த்தி என் நண்பன்னு நம்பினேன். ஆனா, அவன் இப்படி நம்ப வெச்சு கழுத்தறுப்பான்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்ல. சந்திரம்மா சொல்ற புகார்ல ஒரு பர்சென்ட்கூட உண்மை கிடையாது. ஏதோ சினிமாவுல நடக்குற மாதிரி, வாய்க்கு வந்ததைச் சொல்லிட்டு இருக்காங்க. இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது. எதிர்க்கட்சியில இருக்கிற சிலரும்,எங்க கட்சியில இருக்குற சிலரும் சேர்ந்து திட்டம் போட்டு, இப்படி புகார் கிளப்ப வெச்சுருக்காங்க. இந்தக் கூட்டுச் சதியில யாரெல்லாம் ஈடுபட்டாங்கன்னு கூடிய சீக்கிரமே வெளியில் சொல்லப் போறேன். எப்பவோ நடந்ததா சொல்ற இந்த விஷயத்தை, இத்தனை மாசம் கழிச்சு எதுக்கு வெளியே சொல்லணும்..? பக்காவா பிளான் பண்ணி ஒரு டிராமா போட்டிருக்காங்க. பொய் ரொம்ப நாளைக்கு நிலைக்காது!

என் மேல தப்பு இருக்குன்னு நான் ராஜினாமா பண்ணலை. என்னால கட்சிக்கு எந்த சங்கடமும் வரக்கூடாதுங்குற ஒரே காரணத் துக்காகத்தான் ராஜினாமா பண்ணினேன். அதை ஏத்துக்கிட்ட முதல்வர் எடியூரப்பா, 'கட்சிக்குக் கெட்ட பேரை உண்டாக்க உன்னை பலிகடா ஆக்கியிருக்காங்க. சம்பவம் பற்றி விசாரிக்க உத்தர விட்டிருக்கேன்'னு சொல்லியிருக் காரு...'' என்றார்.

இதற்கிடையில், ''ஹாலப்பா மீதான புகாருக்குப் பொறுப்பேற்று எடியூரப்பாவும் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்!'' என காங்கிரஸ் கட்சியினர் பெங்களூருவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே, அமைச்சர் ரேணுகாச்சார்யா மீது செக்ஸ் குற்றச்சாட்டுகளை அடுக்கிய நர்ஸ் ஜெயலட்சுமியும், சந்திரம்மாவுக்கு ஆதரவாக கைகோத்துப் போராட்டம் நடத்தவும் தயாராகி வருகிறாராம்.

நல்ல கூட்டணிதான் போங்க!


நன்றி விகடன்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites