ஏ.ஆர்.ரகுமான் மகளுக்கு மும்பை மருத்துவமனையில் இருதய `ஆபரேஷன்'

08 May 2010 ·

ஏ.ஆர்.ரகுமான் மகளுக்கு மும்பை மருத்துவமனையில் இருதய
`ஆபரேஷன்'

ஏ.ஆர்.ரகுமான் மகளுக்கு மும்பை மருத்துவமனையில் இருதய ஆபரேஷன் நடைபெற்றது.

ஆஸ்கார் விருது பெற்ற, புகழ் பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்-சாய்ரா பானு தம்பதியினருக்கு கதிஜா (வயது 14), ரஹீமா (11) என்ற இரண்டு மகள்களும், ஆமீன் (5) என்ற மகனும் உள்ளனர்.

இவர்களில் ரஹீமாவுக்கு இருதயத்தில் சில பிரச்சினைகள் இருந்து அவஸ்தைப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் இந்த வாரத் தொடக்கத்தில் மும்பை பாந்திராவில் உள்ள ஆசிய இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கடந்த புதன்கிழமை இரவு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல் நிலை வேகமாக தேறி வருகிறது.

இது குறித்து ஏ.ஆர்.ரகுமான் `டிவிட்டர்` இணைய தளத்தில் எழுதி இருப்பதாவது:-

“கடந்த மூன்று இரவுகளாக நான் ஒரு பாசம் நிறைந்த தந்தையின் ஸ்தானத்தில் இருந்து செயல்பட்டு வந்திருக்கிறேன். இசை கிடையாது. எதுவும் கிடையாது. (என் மகளுக்காக) பிரார்த்தனை செய்ததற்காகவும், (விரைவில் நலம்பெற) வாழ்த்தியதற்காகவும் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் என் ஆத்மார்த்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் மிகவும் கருணையும் காட்டி இருக்கிறார். ஆகவேதான் ரஹீமா வேகமாக நலம் பெற்று வருகிறாள்.” - இவ்வாறு அதில் ஏ.ஆர்.ரகுமான் கூறி உள்ளார்நடிகை மனோரமா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி


நடிகை மனோரமா கடந்த ஒரு வருடமாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்றார். அதில் பலன் ஏற்படாததால் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மூட்டுவலிக்காக 2 கால்களிலும் ஆபரேஷன் செய்துகொண்டார். அதன்பிறகும் அவருக்கு மூட்டு வலி தீரவில்லை.

இதையொட்டி அறுபடை வீடுகளுக்கும் சென்று முருகனை தரிசனம் செய்தார். அதன் பிறகு திருப்பதி சென்று தலைமுடியை காணிக்கையாக செலுத்தினார். திருப்பதியில் இருந்து அவர் திரும்பி வந்துகொண்டிருந்தபோது அவர் பயணம் செய்த கார் விபத்துக்கு உள்ளானது. சாலையோரம் இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மனோரமா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினார்.

இப்போது அவர் மீண்டும் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை பட அதிபரும், டைரக்டருமான முக்தா சீனிவாசன் நேற்று சென்று பார்த்தார். “மனோரமா மீண்டும் உடல் நலம் பெறுவதற்காக அவருடைய ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil