இயக்குநர் போஸ்ட்டுக்குத் தயாராகிறார் நடிகர் தனுஷ்..!

10 May 2010 ·

இயக்குநர் போஸ்ட்டுக்குத் தயாராகிறார் நடிகர் தனுஷ்..!

“ச்சும்மா நடிக்க வந்தோமா? நாலு காசு தேத்துணோமா? காடு, கரையை வாங்கிப் போட்டோமான்னு இல்லாம உனக்கு எதுக்கு இந்த தயாரிப்பு, டைரக்ஷன்..?” அப்படீன்னு சொல்லித்தான் இருக்கிற ஹீரோக்களுக்கு வெறியை ஏற்றி விடுகிறார்கள் நலம் விரும்பிகள்.

ஆனாலும் பல நடிகர்களுக்குள்ளும் இருக்கின்ற ஒரு ஆசை தானும் ஒரு இயக்குநராக வேண்டும் என்பதுதான். ஆனால் அதற்கான வாய்ப்பு வரும்போது நான் நிச்சயம் இயக்கம் செய்வேன் என்று சொல்லித் தப்பிப்பார்கள். அந்த வாய்ப்பு எப்போது தெரியுமா..? அவர்களுக்கு மார்க்கெட் டவுனாகி அவர்கள் வாலண்டரி ரிட்டையர்மெண்ட்டில் வீட்டுக்கு அனுப்பப்படும்போதுதான்..!

ஆனானப்பட்ட சத்யராஜே தான் நடித்த நூறாவது படத்தில்தான் இயக்க வேலையைச் செய்தார். எல்லாருக்குமே இயக்கம் பற்றிய ஒரு பயம் இருக்கிறதே.. தற்போதைய நடிகர்களில் பலருக்கும் ஆசை இருந்தாலும் இருக்கிறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படக்கூடாது என்று சொல்லி அந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.

நடிகர் தனுஷோ வரிந்து கட்டிக் கொண்டு இறங்கிவிட்டார் இயக்குநர் களத்தில். அதற்கு முன்னோட்டமாக குறும் படம் ஒன்றை இயக்கப் போகிறாராம்.. இதில் அவருடைய பொல்லாதவன் படத்தின் ஜோடியான திவ்யா ஸ்பந்தனா நடிக்கப் போகிறாராம்.

முதலில் தனுஷ் திரையுலகத்தில் நுழைய ஆசைப்பட்டதே இயக்குநராகத்தான். தனது அப்பாவிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தவரை வேறு ஹீரோ கிடைக்காததால் செல்வராகவன் தனது துள்ளுவதோ இளமையில் ஹீரோவாக்கிவிட்டார்.

ஆனாலும் இத்தனை நாட்களாக தனது மனதுக்குள் இருக்கும் இயக்கம் ஆசைக்கு தண்ணீர் ஊற்ற ஆரம்பித்துவிட்டார் தனுஷ். அடுத்தது சினிமாஸ்கோப் இயக்கம்தான்.. அது எப்போது என்பதுதான் இப்போதைய கேள்வி..!

வாங்க இயக்குநர் தனுஷ் அவர்களே..!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil