“நான் சிகரெட் பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை” - அசினின் ஆவேசம்..!

04 May 2010 ·

“நான் சிகரெட் பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை” - அசினின் ஆவேசம்..!

அழகுப் பொண்ணுகளையெல்லாம் கோபப்பட வைச்சா எப்படி..? எப்பவும் சிரிப்போட இருக்குற அழகுதானே பார்க்குறதுக்கு அழகு..! அசின் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டில சில கேள்விகள் அவரை ரொம்பவே கோபப்பட வைச்சிருச்சாம்.. ஏற்கெனவே செக்கச் சிவந்த அந்த முகம் இந்தக் கேள்வியால இன்னும் சிவப்பாயிருச்சாம்..

அப்படியென்ன கேள்வி கேட்டுட்டாங்க பிரஸ்காரங்க.. “டோனி உங்க வீட்டுக்கே வந்தாராமே..? என்ன விசேஷம்..?” இதுதான் கேள்வி.. பாப்பாவுக்கு கோபம் வராதா..? “அது குறித்து நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஏன் நட்பை களங்கமாக பார்க்கிறார்கள். நானும், டோனியும் சேர்ந்து ஒரு விளம்பரத்தில் நடித்தோம். அதில் ஏற்பட்டதுதான் இந்த நட்பு, அவ்வளவுதான்” என்று படபடவென பொரிந்து தள்ளியிருக்கிறார்..!

இதுவே இப்படியென்றால் அடுத்தக் கேள்வியில் கோபத்தில் உச்சிக்கே போய்விட்டாராம்.. “வெளியில் அதிகம் பார்ட்டிகளில் கலந்து கொள்கிறீர்களாமே?” என்ற கேட்டுத் தொலைக்க சாமியாடியிருக்கிறார் அசின். “நான் வெளியில் அதிகம் பார்ட்டிகளுக்குப் போவதில்லை. நண்பர்களுடன் வீட்டிலேயே பார்ட்டி வைப்பதுதான் பிடிக்கும். நான் புகை பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை. எனவே கிளப்களுக்குப் போய் பார்ட்டியைக் கொண்டாடுவதற்கான அவசியம் இல்லை. இருப்பினும் நண்பர்கள் அல்லது திரைத்துறையினர் தொடர்பான பார்ட்டி என்றால் மட்டுமே கலந்து கொள்வேன்” என்று ஆவேசமாயிருக்கிறார்.

ஒரு வழியாக அவரை கூல் செய்துதான் பேட்டியைத் தொடர்ந்திருக்கிறார்கள். “நான் முதலில் தமிழை விட்டு போவதாக கூறவே இல்லை. எனவே திரும்பி வந்துள்ளேன் என்று கூற முடியாது. நல்ல படங்கள் கிடைத்தால் தமிழில் நடிப்பேன் என்றுதான் கூறியிருந்தேன். எந்த ஒரு தனிப்பட்ட மொழி படங்களுக்கும் நான் சொந்தக்காரி அல்ல. எல்லா மொழிப் படங்களிலும் நான் நடிப்பேன்.

தமிழில் ‘கஜினி’ மிகப் பெரிய வெற்றியை பெற்ற பிறகு எனக்கு நிறையப் படங்கள் வந்தன. ஆனால் நல்ல படங்களாக பார்த்துதான் தேர்ந்தெடுத்து நடித்தேன். ‘போக்கிரி’, ‘தசாவதாரம்’ படங்களுக்கு முன்பு என்னைத் தேடி வந்த பல படங்களை நான் கதை பிடிக்காததால் நிராகரித்துள்ளேன்.

அடுத்து ஜான் ஆப்ரகாமுடன் ஒரு இந்திப் படத்தில் நடிக்கவுள்ளேன். இது தெலுங்கில் நான் நடித்த ‘கர்சனா’ படத்தின் ரீமேக்தான். பின்னர் தெலுங்கு படமான ‘ரெடி’யின் இந்தி ரீமேக்கில் சல்மான்கானுடன் இணைந்து நடிக்கவுள்ளேன்” என்று சொல்லியிருக்கிறார் அசின்.

’கர்சனா’, தமிழில் வெளியான ‘காக்க காக்க’ படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites