என்னதான் சுமாறாக இருந்தாலும் ஓபனிங்கில் விஜய் படத்தை அடித்துக் கொள்ள - ரஜினி, கமல் தவிர்த்து - யாருமில்லை. சுறாவின் சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல் 58.9 லட்சங்கள். ஒரு வார முடிவில் 2.05 கோடிகளை சென்னையில் இப்படம் வசூலித்துள்ளது.
2. இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட கதை. ஆனால் இன்ஸ்டால்மெண்டில்தான் சிரிப்பு வருகிறது. இதன் முதல் மூன்று நாள் வசூல் 16.2 லட்சங்கள்.
3. குட்டிப் பிசாசு
ராம.நாராயணனின் மற்றுமொரு வீடியோ கேம். குழந்தைகளை குறி வைத்து எடுத்திருக்கிறார்கள். ஆனாலும் அம்பு சரியாக எய்யப்படவில்லை என்றே தெரிகிறது. இதன் மூன்று நாள் கலெக்சன் 12.9 லட்சங்கள்.
4. குரு சிஷ்யன்
ரிட்டையர்டு பார்ட்டி சத்யராஜ் நடித்திருப்பதாலா தெரியவில்லை, குரு சிஷ்யன் திரையரங்குகளில் யூத்களின் அட்டகாசத்தை காண முடியவில்லை. முதல் மூன்று தினங்களில் இப்படம் 9.8 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.
5. கோரிப்பாளையம்
ராசு மதுரவனின் இந்த மதுரை சரவெடிக்கு பெண்களின் ஆதரவு குறைவாகவே உள்ளது. படத்தில் மிகுந்திருக்கும் ஆக்சனும், காமமும் காரணமாக இருக்கலாம். வெளியான முதல் மூன்று தினங்களில் இப்படம் சென்னையில் 8.9 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.
முதல் வாரத்தில் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் சுறா 22-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் முதல் வார வசூல் 44,318 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 30.10 லட்சங்கள்.
ஓபனிங் சிறப்பாக இருந்தாலும் படத்துக்கான ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதால் இன்னும் சில லட்சங்களை சுறா வசூலிப்பதே கஷ்டம் என்கிறார்கள்.
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் புதிய படங்களை பின்னுக்குத் தள்ளி சுறா முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் புதிய படங்களை பின்னுக்குத்
தள்ளி சுறா முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
1. சுறா
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
1 comments:
வசூல் நாயகன் விஜயின் அடுத்த படத்தில் அவர் ரநிகர்கள் எதிர்பார்ப்பது போல் இப்பிடி சீன்களிருந்தால் இடுத்தபடமும் ஒஸ்காருக்கு போகுமே...
http://tamilpp.blogspot.com/2010/05/blog-post_11.html
Post a Comment