சூர்யா முதல் முறையாக இந்தியில் நடிக்கும் திரைப்படம் `ரத்த சரித்திரா`. இந்தியிலும் தமிழிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்படும் இந்தத் திரைப்படத்திற்கு தமிழில் `ரத்த சரித்திரம்` என பெயரிடப்பட்டுள்ளது. இந்தி இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கி வரும் இத்திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் சென்னையில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் நடிகர் சூர்யா, இயக்குநர் ராம்கோபால் வர்மா, பாடலாசிரியர் முத்துக்குமார், மற்றும் தமிழில் வசனம் எழுதியுள்ள ஞானவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நடிகர் சூர்யா பேசுகையில், "ராம்கோபால் வர்மாவின் படத்தில் நடிக்க எல்லா நடிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் அவருக்காகவும், ‘ரத்த சரித்திரம்’ கதைக்காகவும் படத்தை ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்துக்காக நான் ஜோதிகாவிடம் இந்தி கற்றுக்கொண்டேன். மேலும் மதுரையில் ஒரு வாத்தியாரிடமும் இந்தி பயின்றேன்.
நான் இதில் கதாநாயகனா என்று கேட்டால் இல்லைன்னுதான் சொல்லனும். கதைக்கேற்ற கதாபாத்திரம் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். நல்ல கேரக்டர்கள் வந்தால் நிச்சயமாகத் தொடர்ந்து இந்தித் திரைப்படங்களில் நடிப்பேன். மற்றபடி தமிழுக்குத்தான் முதல் முக்கியத்துவத்தை தருவேன்" என்றார்.
இயக்குநர் ராம்கோபால் வர்மா பேசுகையில் "சூர்யாவின் படங்களை பார்த்திருக்கிறேன். அவருடைய நடிப்பு என்னை பிரமிக்க வைக்கும். ரத்த சரித்திரா கதைக்கு அவர்தான் பொருத்தமானவர் என்று தோன்றியது. உடனே பேசினேன். சூர்யாவும் ஒப்புக்கொண்டார். சூர்யாவுக்கு, பாலிவுட்டில் நல்ல துவக்கத்தை ‘ரத்த சரித்திரா’ ஏற்படுத்தித் தரும். என்னுடைய படங்களில் வன்முறை அதிகமாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் கதைக்கு உகந்த அளவில்தான் வன்முறையை கையாள்கிறேன். சென்சாருக்கு பயப்படாமல் கதைக்கு ஏற்ற வகையில்தான் காட்சிகளை எடுக்கிறேன்" என்றார்.
வசனகர்த்தா ஞானவேல் கூறுகையில், "சூர்யாவின் இமேஜ்க்கு ஏற்ற வகையிலும், தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையிலும் வசனம் எழுதியுள்ளேன்" என்றார்.
இன்னும் சில காட்சிகள் மட்டுமே எடுக்கவேண்டிய நிலையில் `ரத்த சரித்திரா`வை ஆகஸ்டு மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். ‘ரத்த சரித்திரா’வில் ப்ரியாமணியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சூர்யாவுக்கு ஜோடி அவரா என்பதுதான் சஸ்பென்ஸ்!
ஜோதிகாவிடம் இந்தி கற்றுக்கொண்ட சூர்யா!
ஜோதிகாவிடம் இந்தி கற்றுக்கொண்ட சூர்யா!
"ரத்த சரித்திரா` இந்தி திரைப்படத்தில் நடிப்பதற்காக ஜோதிகாவிடம் இந்தி கற்றுக்கொண்டேன்" என்று நடிகர் சூர்யா கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment