கவர்ச்சி ஸ்டில்ஸில் ‘காதல்’ சந்தியா

11 May 2010 ·

கவர்ச்சி ஸ்டில்ஸில் ‘காதல்’ சந்தியா

தமிழில் படங்கள் கை நழுவிப் போனதால் கலக்கத்தில் இருந்த நடிகை காதல் சந்தியாவுக்கு கன்னட வாய்ப்பு கை தூக்கிவிட்டிருக்கிறது.

கன்னடத்தில் ‘ஆப்தரக்சகா’வில் நடித்து படம் வெற்றியடைந்ததால் அங்கு பிஸியாகிவிட்டார். “தமிழ் படம் வந்தால் நடிப்பேன். ஆனால் அதற்கு நேரம் கிடைக்குமோ தெரியவில்லை” என்கிறார். இதற்கிடையே மலையாளத்தில் இந்திரஜித் நாயகனாக நடிக்கும் படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தமிழில் சந்தியா நடித்த ‘காதல்’ படத்தைத் தவிர மற்ற அனைத்துமே ஏதோவொரு காரணத்தினால் பெட்டிக்குள் முடங்கிவிட்டதால் கிடைத்த வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம் பார்ட்டி, டிஸ்கொத்தே என்றாலும் தவறாமல் ஆஜராகி வாய்ப்பு தேடியபடியேதான் இருந்தார்.

சமீபத்தில் வெளி வந்திருக்கும் ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்க’த்தில் சந்தியா ஒரு நாயகியாக இருந்தாலும் லஷ்மிராய் தனது இரும்புத் தொடையைக் காட்டியே பெயரை தட்டிச் சென்றுவிட்டதால் தான் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தவர், இப்போது அந்தக் குழப்பம் தீர ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்.

அதுதான்.. எல்லா வாய்ப்பிழந்த நடிகைகள்லாம் செய்வதைப் போல் கொஞ்சம் கவர்ச்சி போஸில் போட்டோசெஷன் எடுத்து பரவலாக கோடம்பாக்கத்தில் பரவ விட்டிருக்கிறாராம்..

தற்போது உடற்பயிற்சி செய்து கிலோ கணக்கில் எடையைக் குறைத்து ஸ்லிம் சந்தியாவாகி காட்சியளிக்கிறாராம். அதில் ஒன்றிரண்டு ஸ்டில்கள் கண்ணை கூச வைக்கிறதாம். சும்மா ஸ்டில்சுகாகத்தான் அப்படி போஸ். மற்றபடி படங்களில் அப்படி நடிக்க மாட்டேன் என்று விளக்கம் வேறு சொல்கிறார்.

கத்திரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்..!


---------------------------------------------------------------------------------------------------------
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நமீதா..!

மே 10-ம் தேதி நமீதாவுக்கு பிறந்த நாள். வழக்கமாக ஷூட்டிங் ஸ்பாட்களில் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடுவார் நமீதா. ஆனால் இந்த முறை பிறந்த நாளன்று படப்பிடிப்பு எதுவுமில்லாததால் சொந்த ஊரான சூரத்துக்கே போய் பெற்றோருடன் பிறந்த நாளைக் கொண்டாடினார்.

ஆனால் அடுத்த நாளே சென்னையில் மானாட மயிலாட படப்பிடிப்புக்கு வந்த நமீதா, அங்கும் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். அனைவருக்கும் தன் கையால் கேக் ஊட்டினார்.

நமீதாவுக்கு தமிழகத்தில் ஏற்கனவே ரசிகர் மன்றம் துவங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிறந்த நாளிலும் ரசிகர் மன்றம் சார்பில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவ மாணவிகளுக்கு எழுது பொருள்கள், கம்ப்யூட்டர்கள், திருமண உதவி என பல நற்பணிகளைச் செய்து வருகிறார் நமீதா.

இந்த ஆண்டும் பிறந்தநாளையொட்டி ஆதரவற்ற குழந்தைகளுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்து. நமீதா இதில் பங்கேற்று குழந்தைகளுக்கு உணவு வழங்கினார். மாணவ மாணவிகளுக்கு உதவிகளும் வழங்குகிறார்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil