உலகில் கொண்டாடப்படும் சில வித்தியாசமான விடுமுறை தினங்கள் இது... ரஷ்யாவில் காதல் கண்ணாமூச்சியால் குடும்பத்தின் மேல் இளைஞர்களுக்குப் பாசம் குறைவதைக் கவலை யோடு சுட்டிக்காட்டினார் பிரதமரின் மனைவியான ஸ்வெட்லனா. உடனே, சென்ற வருடம் ஜூலை மாதம் 8-ம் தேதியைக் 'காதலர் தின எதிர்ப்பு தினம்' என்று அறிவித்து விடுமுறைவிட்டார்கள். இனி, ஒவ்வொரு ஜூலையிலும் குடும்பப் பாசத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடைபெறும்! ஸ்பெயினின் தக்காளித் திருவிழா உலகப் பிரபலம். 'லா டொமாட்டினா' என்று அழைக் கப்படும் இந்தத் திருவிழா, ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படுகிறது. ஸ்பெயினின் புனால் (Bunol) நகரத்தில் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவை, 'அந்த நகரத்தில் வாழ்ந்த துறவி ஒருவரைக் கௌரவிக்கும் விதமாகக் கொண்டாடப்படுகிறது' என்று கூறுகிறார்கள். இந்தத் திருவிழாவுக்காக ஒரு வாரம் முன்பிருந்தே ஸ்பெயின் தயாராகிவிடும். தக்காளிகளை அடித்து விளையாடி ஊரையே சிவப்பாக்கி விடுவார்கள். அதன் பிறகு, தீயணைப்புத் துறையினர் வந்து, கேலன் கேலனாகத் தண்ணீர் விட்டு நகரத்தையும் மக்களையும் சுத்தப்படுத்துவார்கள்! தாய்லாந்தில் இந்துக் கடவுளான அனுமனுக்கு நன்றி தெரிவிக்க, 'லோப்பரி குரங்கு பஃபே' என்கிற விழாவைக் கொண்டாடுகிறார்கள். நவம்பர் மாதம் லோப்பரி என்கிற இடத்தில் மேடை நிறையக் காய்கள், பழங்கள், சுவையான உணவுப் பொருட்களை வைத்துக் குரங்குகளுக்கு விருந்து அளிக்கிறார்கள் தாய்லாந்து மக்கள். வருடா வருடம் வருகிற கூட்டத்தைப் பார்த்து, விடுமுறை தினமாக அறிவித்துவிட்டது தாய்லாந்து அரசு இவ்ரியா திருவிழா இத்தாலியில் பிரபலம். ஒருவரை ஒருவர் ஆரஞ்சுப் பழங்களை வைத்து அடிப்பார்கள். அந்தக் காலத்தில் திருமணமாகும் ஒவ்வொரு பெண்ணும் தன் கன்னித்தன்மையை அரசனுக்குத்தான் முதலில் கொடுக்க வேண்டுமாம். அதற்கு அடுத்துதான் கணவன். வயலெட்டா என்கிற புதுப் பெண், அரசனின் தலையைத் துண்டித்து தன் கற்பைக் காப்பாற்றிக்கொண்டாளாம். வயலெட்டாவைக் கைது செய்ய வந்த அரச படைகளை, இவ்ரியா மக்கள் கல்லால் அடித்து விரட்டினார்களாம். அதன் நினைவாக இப்போது ஆரஞ்சுப் பழத்தால் அடிக்கிறார்கள் நன்றி விகடன்
கற்பைக் கேட்டால் கல்லால் அடி!
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment