Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts

ட்வீட்டரில் பிசியாக உள்ள பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மத்தியில், கரீனா கபூர் தனது புதிய அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கியுள்ளார்

01 July 2010 · 0 comments



இந்தி கவர்ச்சி  நடிகை கரீனா கபூர் புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

ட்வீட்டரில் பிசியாக உள்ள பாலிவுட்  நட்சத்திரங்களுக்கு மத்தியில், கரீனா கபூர் தனது புதிய அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கியுள்ளார். இதை தினசரி முடிந்தவரை அப்டேட் செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து கரீனா கூறுகையில், இது எனது சொந்த இணையதளம், எனக்கே எனக்கானது. ரசிகர்களுக்காக நிறைய செய்திகளை அதில் போடவுள்ளேன். எனக்கு ரசிகர்கள்   நேரடியாக கருத்துக்களை எழுதும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளேன் என்றார் கரீனா.

கரீனா கபூரின் இணையதளத்தின் பெயர் இதுதான் - www.kareenakapoor.me

கரீனா குறித்த இன்னொரு செய்தி. சர்வதேச அளவில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா நடத்தும் பிரசாரக் குழுமத்தில் கரீனாவும் இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் ஜெஸிகா ஆல்பா, கெவின் ஸ்பேஸி, மாட் டமோன், ஹில்லாரி கிளிண்டன் ஆகிய பிரபலங்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அசின் - சல்மான் -கமாண்டோ வீரர்கள் சூழ இலங்கையில் நடமாடுகின்றனர் -

25 June 2010 · 0 comments


இந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை   சென்றுள்ள அசின் - சல்மான்கான் ஜோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்துள்ளது ராஜபக்சே அரசாங்கம்.

மேலும் அசினுக்கும் சல்மானுக்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இஸட் பிரிவு பாதுகாப்பும் வழங்கியுள்ளது இலங்கை அரசு.

ஐஃபா விழாவுக்கு அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற முதல்நிலை நடிகர்கள் போகாமல் புறக்கணித்தபோது விவேக் ஓபராய், சல்மான் கான் ஆகியோர் மட்டுமே இலங்கைக்குச் சென்றார்கள்.

அவர்களுக்கு நன்றி பாராட்டும் விதமாக, வடக்கு புணரமைப்புத் திட்டத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை வழங்கியுள்ளது இலங்கை அரசு. இந்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்குப் போன சல்மானும் விவேக்கும் இன்னும் கூட இந்தியாவுக்குத் திரும்பவில்லை.

இருவரும் கிட்டத்தட்ட இலங்கையின் நிரந்தர விருந்தாளிகளாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். மேலும் சல்மான் கானும் ராஜபக்சேயின் மகன் நாமல் ராஜபக்சேயும் நெருங்கிய நண்பர்களாகியுள்ளனர்.

வடக்கு இலங்கையில் இதுவரை சினிமாக்காரர்களின் கால்படாத பல லொக்கேஷன்களில் சல்மான்கான் தனது ரெடி படத்தை எடுக்கிறார். இரண்டு மாத காலம் நடக்கும் நடக்கும் இந்தப் படப்பிடிப்புக்கு இலங்கை ராணுவம் பாதுகாப்பு தருகிறது. அசின்- சல்மான் ஆகிய நட்சத்திரங்களுக்கு மட்டும் உச்சபட்ச இஸட் பிரிவு பாதுகாப்பைத் தர உத்தரவிட்டுள்ளார் ராஜபக்சே.

இதைத் தொடர்ந்து கமாண்டோ வீரர்கள் சூழ இலங்கையில் நடமாடுகின்றனர் இவ்விருவரும்.

உண்மையில் இந்தப் படம் மொரீஷியஸில் ஷூட் பண்ணத் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் ராஜபக்சேயின் உபசரிப்பைப் பார்த்த பிறகு வேறு எந்த நாடும் வேண்டாம், இலங்கையே போதும் என்று முடிவு செய்துவிட்டாராம். 

அசின்-ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்பதற்காக கண்ணீர்விட்டு அழுபவள் நான் அல்ல

23 June 2010 · 0 comments



“ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்பதற்காக கண்ணீர்விட்டு அழுபவள் நான் அல்ல” என்று நடிகை அசின் கூறியுள்ளார்.

"காக்க காக்க` படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான் ஆபிரஹாம் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அசின் கதாநாயகியாக நடிக்கவிருந்தார். ஆனால் திடீரென அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். இந்த ஏமாற்றம் தாங்காமல் அசின் கண்ணீர் விட்டு அழுதார் என மும்பை பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரு படத்தில் நடிப்பதற்கும் நடிக்காமல் இருப்பதற்கும் பல காரணங்கள் இருக்கும். அது அந்தந்த நடிகர், நடிகையின் சொந்த விஷயம். இதற்கெல்லாம் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருப்பார்களா?

ஒரு சினிமா வாய்ப்புக்காக கண்ணீர் விட்டு அழும் சூழ்நிலையில் நான் இல்லை. இந்திப் பட உலகில் என்னுடைய வளர்ச்சி பிடிக்காதவர்கள் மீடியாவுக்குப் பரப்பிய வதந்திதான் இது. எனக்கான வாய்ப்புகள் எப்போதும் போல உள்ளன. நான் விரும்பும் கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். கிடைப்பதையெல்லாம் ஏற்பதில்லை.

முதலில் அந்தப் படத்தை கெளவுதம் மேனன் இயக்குவதாக இருந்தது. பிறகு நிஷிகாந்த காமத் இயக்குவார் என்றனர். அதையடுத்து கதையிலும் சில மாற்றங்கள் செய்தார்கள். இதையெல்லாம் யோசித்துதான் நானே அந்தப் படத்திலிருந்து வெளியேறி விட்டேன். யாரும் என்னை நீக்கவில்லை...`` என்று ஒரே போடாகப் போட்டார்!

================================================


வில்லனாக நடித்ததால் வில்லத்தனமான ஆசை 
கிளம்பிடுச்சோ பிருத்விராஜூக்கு?
வில்லனாக நடித்ததால் வில்லத்தனமான ஆசை கிளம்பிடுச்சோ பிருத்விராஜூக்கு?

சமீபத்தில் ராவணன் பட சிறப்புக் காட்சியின்போது ஒரு டெலிவிஷன் பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

"திரையில் என்னைவிட வயது அதிகம் கொண்ட பெண்களுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும் சந்தர்ப்பம் அடிக்கடிக் கிடைக்கிறது. சமீபத்தில் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தேன். இந்தியாவின் மிக அழகான பெண். அவருடன் நடிப்பதில் எனக்கு முதலில் தயக்கமிருந்தது. விக்ரம் வேறு அடிக்கடி சீண்டிக் கொண்டே இருந்தார். ஆனால் பின்னர் சகஜமாக காதல் காட்சிகளில் நடித்தேன்..." என்றார்.

அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், அடுத்து அவர் சொன்னதுதான் மகா வில்லங்கமானது...

"என்னைவிட வயசான ஹீரோயின்களோடு நடிப்பது எனக்குப் பிடித்தே இருக்கிறது. இதற்கு முன்பு அப்படி ஒரு ஹீரோயினோடு நடித்தேன். ஆனால் அவர் யார் என்று சொன்னால் என்னைக் கொன்றே போட்டுவிடுவார்" என்றார்.

உடனே பக்கத்திலிருந்த விக்ரம், `எல்லாம்` தெரிந்தது போல விழுந்து விழுந்து சிரித்தார். அவர் யார் என்று சொல்வது போல விக்ரம் பாசாங்கு செய்ய, இவர் ஓடிப் பாய்ந்து தடுத்தார்...

ஆமா.. யாருங்க அது..? உங்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த ரகசிய மொழியை எங்களுக்கும் சொல்லுங்களேன்! 

விபச்சாரத்தில் தள்ளுகிறார் – நடிகை

17 June 2010 · 0 comments

விபச்சாரத்தில் தள்ளுகிறார் –  நடிகை
துணை நடிகை ஒருவரும், அவரது கணவரும் இன்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் ஒருவர் மீது ஒருவர் மிக பயங்கர புகார்களைக் கூறி பரபரப்பை  ஏற்படுத்தினர்.

தன்னை நண்பர்களுக்கு விருந்தாக்க முயல்வதாக நடிகையும், தன்னிடம் ரூ. 30 லட்சம் கேட்டு மிரட்டுவதாக கணவரும் புகார் கூறியுள்ளனர்.

ஆடு புலி ஆட்டம், குருஷேத்திரம், எனக்காக உன் காதல் உள்பட பல படங்களில் நடித்துள்ள துணை நடிகை இந்திரா.
பட்டு வண்ண ரோசாவாம் படத்தில் 2 பாடல்களுக்கு நடனமும் ஆடியுள்ளார்.

இந் நிலையி்ல் அவர் மீது அவரது கணவர் சதீஷ்குமார் இன்று போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில் இந்திரா ரூ.30 லட்சம் கேட்டு குண்டர்களை ஏவி மிரட்டுவதாகக் கூறியுள்ளார்.

புகாரில் அவர்  கூறியிருப்பதாவது:

”நான் சென்னை சாலிகிராமம் தசரதபுரம் 8-வது தெருவில் வசிக்கிறேன். வளசரவாக்கத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் வைத்துள்ளேன். விருகம்பாக்கம் அதிமுக இளைஞர் பாசறை செயலாளராகவும் உள்ளேன்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திரா என்ற 32 வயது பெண் வீடு வேண்டும் என்று என்னை சந்தித்தார். வீடு பார்ப்பது தொடர்பாக நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசினோம். ஒரு நாள் அவர் என்னிடம், உங்களை நான் விரும்புகிறேன் என்றார்.

நானும் அவரை காதலித்தேன். கடந்த பிப்ரவரி மாதம் 5-ம் தேதி திடீரென என் வீட்டுக்கு வந்த அவர், “நான் வீட்டை விட்டு வந்து விட்டேன். என் தாயார் என்னை தவறான வழியில் செல்ல வற்புறுத்துகிறார். எனக்கு வீட்டுக்கு செல்ல விருப்பமில்லை. என்னை உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார்.

நான் அவசரப்படாதே, என் வீட்டில் பேசி முடிவு எடுக்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். ஆனால், இந்திரா அவரது வீட்டுக்கு செல்லவில்லை. அவரது நண்பர் வீட்டுக்கு சென்று தங்கினார்.

எங்கள் காதல் விஷயத்தை நான் என் தாயாரிடம் கூறினேன். அவர் என்னிடம், ஒரு வருடம் அவகாசம் எடுத்துக்கொள். இந்திராவை பற்றி நன்கு தெரிந்து புரிந்து கொண்ட பிறகு திருமணம் செய்வோம் என்றார்.

ஆனால், இந்திராவோ, நாம் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார். தாயாரை பணிய வைக்க, 10 தூக்க மாத்திரைகளை என்னிடம் கொடுத்து, இதை சாப்பிட்டால் உயிர் போய் விடாது. உன்னை மருத்துவமனையில் சேர்த்து நான் காப்பாற்றி விடுகிறேன் என்றார்.

நானும் 10 மாத்திரைகளையும் சாப்பிட்டேன். இந்திரா திட்டமிட்டது போல என்னை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, என் தாய்க்கு போன் செய்தார்.

என் தாய் மருத்துவமனைக்கு வந்து என்னைப் பார்த்து வருத்தப்பட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு இந்திராவின் தொல்லை அதிகரித்தது. திருமணம் செய்து கொள்ளலாம் என்று நச்சரித்தார்.

அவரை நம்பி என் தாயாரிடம் ரூ.1.5 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு இந்திராவின் தோழிகள் அனஷா, அனிதா ஆகியோர் உதவியுடன் பாரிமுனையில் பதிவு திருமணம் செய்து கொண்டோம்.

சாலிகிராமம் முத்தமிழ் நகரில் வாடகை வீட்டில் குடியேறினோம். 2  மாதம் இந்த வீட்டில் இருந்தோம்.

கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி நெய்வேலியில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நான் சென்று விட்டேன். திரும்பி வந்து பார்த்தபோது இந்திரா வீட்டில் இல்லை. இந்திராவிடம் செல்போனில் தொடர்பு கொண்டபோது, நான் கர்ப்பமாக உள்ளேன். 2  நாட்கள் என் தாய் வீட்டில் ஓய்வு எடுத்து விட்டு வருகிறேன் என்றார்.

தொடர்ந்து நான் அவரை போனில் அழைத்தும் அவர் நடத்த வரவில்லை. திடீரென ஒரு நாள் அவரது வழக்கறிஞர் என்று கூறிக் கொண்டு ஒருவர் என்னிடம் பேசினார். உடனடியாக உன் சொத்தைப் பிரித்துவிட்டு வா, இல்லை என்றால் உன்னையும் உன் குடும்பத்தினரையும் ஜெயிலில் தள்ளி விடுவோம் என்றார்.

அப்போதுதான் என் சொத்துக்களுக்காக இந்திரா என்னை திருமணம் செய்தது எனக்குப் புரிந்தது. இதையடுத்து அதையடுத்து அவரை பற்றி நான் விசாரித்தேன்.

அப்போது இந்திரா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் தெரிய வந்தது. சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த மகேஷ் என்பவரை 1996-ம் ஆண்டு அவர் திருமணம் செய்து ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்துள்ளது தெரியவந்தது.

பின்னர் மகேசை துரத்தி விட்டு ஆபாச படங்களிலும் இந்திரா நடித்து வந்தாகத் தெரிகிறது. காபரே நடனக் குழுவிலும் அவர் இருந்துள்ளார். முதல் திருமணத்தை மறைத்துவிட்டு சொத்துக்காக என்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தெரிந்தது.

இந் நிலையில் இப்போது ரவுடிகளை ஏவி விட்டு எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். என்  மீதும், என் குடும்பத்தினர் மீதும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தற்போது என் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் இந்திராவின் தம்பி ரகு அடியாட்களுடன் வந்து எடுத்து சென்றுள்ளார். இது பற்றி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்துள்ளேன். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்.

வடபழனி பகுதியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பணிபுரியும் ஒருவர் மூலம் கட்டப் பஞ்சாயத்து பேசி ரூ.30 லட்சம் கேட்டு இந்திரா என்னை தொடர்ந்து மிரட்டுகிறார். எனவே இந்திரா மீதும் அவர் தம்பி, தாய் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு  தர வேண்டும்.”

இவ்வாறு தனது மனுவில் சதீஷ்குமார் கூறியுள்ளார்.

ஆனால், சதீஷ்குமாரின் புகார் மனுவை ஏற்க கமிஷ்னர் அதிகாரிகள் மறுத்து விட்டனர். வடபழனி உதவி கமிஷனரை சந்தித்து புகார் கூறுமாறு கூறிவிட்டனர்.

இதையடுத்து கமிஷனர் அலுவலக வளாகத்தில் நிருபர்களிடம் தன் புகார் மனு விவரங்களை சொல்லிக் கொண்டிருந்தபோது, நடிகை இந்திராவும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது சதீஷ்குமாருக்கும் இந்திராவுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய சதீஷ்குமார், “10 ஆண்டுக்கு முன்பு ரூ.400 வாடகை வீட்டில் தங்கியிருந்த இந்திராவுக்கு இன்று சென்னையி்ல் 7 வீடுகள் உள்ளன. அவரால் ஏமாற்றப்பட்ட மகேஷ் தற்போது மனநலம் பாதிக்கப்பட்டு திரிகிறார். என்னையும் இப்போது ஏமாற்றியுள்ளார். என்னைப் போல மேலும் பலர் அவரிடம் ஏமாந்திருக்கலாம்.

இந்திராவுக்கு ஒரே குறிக்கோள் பணம் மட்டுமே. காபரே நடனம் பார்க்க வருபவர்களிடம் பேசி மயக்கி, காதலை வளர்த்து ஏமாற்றுவது அவரது பாணி” என்றார்.

நண்பர்களுக்கு விருந்தாக்கினார்-கணவர் மீது இந்திரா புகார்:

சதீஷ்குமார் நிருபர்களிடம் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோதே சற்று தொலையில் இந்திராவும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

கண்ணீருடன் அவர் கூறுகையில், “சதீஷ்குமார் முதலில் டிரைவராகதான் என்னிடம் வேலைக்கு சேர்ந்தார். அவரை ரூ.7 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்த்துக் கொண்டேன். வேலைக்கு சேர்ந்த சில மாதங்களில் அவர் என்னை காதலிப்பதாக சொன்னாக். ஆனால் நான் அவர் காதலை ஏற்கவில்லை.

ஆனால், நான் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். 3 முறை தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். நான்தான் அவரை காப்பாற்றினேன்.

நாளடைவில் அவர் மீது எனக்கு இரக்கம் ஏற்பட்டது. இதனால் நானும் அவரை அவரை காதலித்தேன். கடந்த பிப்ரவரி மாதம் எங்களுக்குத் திருமணம் நடந்தது. அதன் பிறகு 2 மாதத்திலேயே என்னை அவர் சித்ரவதை செய்யத் தொடங்கி விட்டார்.

அவர் அதிமுகவில் சேர்ந்த பிறகு என்னை துன்புறுத்துவது அதிகரித்தது. தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து மது விருந்து கொடுப்பார்.

அதன் பிறகு கோழிக் கறி வாங்கி வந்து பொறித்து கொடுக்கச் சொல்வார். போதை தலைக்கேறியதும் என்னை நண்பர்கள் முன்பு ஆபாச நடனம் ஆடுமாறு வற்புறுத்துவார். நான் மறுத்தால் என்னை அடித்து, உதைப்பார்.

ஒரு முறை என்னை டிவி கேபிள் வயர் மூலம் கழுத்தை நெரித்து கொல்லவும் முயன்றார். இதற்காக நான் மருத்துவமனையில் தங்கி பல நாட்கள் சிகிச்சை பெற்றேன்.

மீண்டும் வீட்டுக்கு வந்தபோது என்னை அடித்து துன்புறுத்தி எனது 35 பவுன் நகைகளை பறித்துக் கொண்டார். அப்போது நான் 3 மாதம் கர்ப்பமாக இருந்தேன். நான் கர்ப்பிணி என்றும் பாராமல் துன்புறுத்தினார். கருவை கலைக்கச் சொல்லி உதைத்தார்.

நான் நடிகை என்பது தெரிந்தும், திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க வேண்டாம் என்றார். இதனால் நானும் நடிக்கப் போகவில்லை.

ஆனால் என்னை நண்பர்களுக்கு விருந்தாக்கவே அவர் இப்படி திட்டம் தீட்டியது பிறகுதான் தெரிந்தது. நான் ராயப்பேட்டையில் உள்ள கிளப்பில் ஆபாச நடனம் ஆடுவதாக பொய் புகார் கூறியுள்ளார். அவர்தான் கோடம்பாக்கத்தில் பெண்களை வைத்து தொழில் (விபச்சாரம்) செய்து கொண்டிருக்கிறார்.

நான் 15 வயதில் சினிமாவில், குரூப் டான்சராக சேர்ந்தேன். அப்போது ஒரு இடத்தில் இலவச சுயம்வரம் நடந்தது. அப்போது ஒரு நபருக்கு மணப்பெண் இல்லாமல் இருந்தது. உடனே என்னை பிடித்து ஜோடியாக்கி விட்டனர். அந்த வயதில் என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை. இது பற்றி சதீஷ்குமாரிடம் நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன்.

ஆனால் நான் அவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக இப்போது பொய் புகார் கூறுகிறார். என்னை ரோட்டில் ஆள் வைத்து என்னை மிரட்டினார். இது பற்றி நான் ஏற்கனவே போலீசில் புகார் செய்திருந்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கடந்த மாதம் 3-ம் தேதி கமிஷனர் அலுவலகத்தில் நேரில் இவர் மீது புகார் கொடுத்தேன். அதற்கும் பலன் கிடைக்கவில்லை. என்னை போலீசார்தான் அவரிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

நான் சதீஷ்குமாருடன் வாழ விரும்பவில்லை. அவரிடம் இருந்து விவாகரத்து பெற மனு செய்துள்ளேன். மீண்டும் நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்” என்றார். 

இயக்குனருடன் முத்தக்காட்சியில் -அந்த படத்தில் இயக்குனருடன் நெருக்கமாக இருக்கும் பெண் நான் அல்ல நடிகை அலறல்

11 June 2010 · 5 comments



கன்னட திரையுலகில் 14 வயதிலேயே கதாநாயாகி, பிரபலமானவர் நடிகை அமுல்யா. தமிழில் வெளியான காதல் படத்தின் கன்னட ரீ-மேக்கில் சந்தியாவின் வேடத்தில் நடித்தவர்.

அந்தப் படம் மெகா ஹிட் ஆனதையடுத்த தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இதற்காக பள்ளிப் படிப்பை நிறுத்தினார் அமுல்யா.

சமீபத்தில் இயக்குனர் ரத்னஜா இயக்கிய `பிரேமிசம்` என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது அமுல்யாவும், ரத்னஜாவும் வரம்பு மீறி நெருக்கம் காட்டி வந்தனர்.

இந் நிலையில் இருவரும் லிப்-டு-லிப் முத்தம் கொடுத்துக் கொள்ளும் காட்சி அடங்கிய புகைப்படம் பெங்களூரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தை ரத்னஜாவே தனது செல்போனில் படம் பிடித்து வைத்திருந்ததாகவும், செல்போன் பழுதானதால் அதை சர்வீசுக்குக் கொடுத்தபோது, அதை செல்போன் சர்வீஸ் ஆசாமி டெளன்லோட் செய்து `லீக்` செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக இந்தப் படத்தை வெளியிடாமல் இருக்க ரூ. 1 கோடி கேட்டு ஒருவர் ரத்னஜாவை மிரட்டியுள்ளார். மேலும் ரத்னஜாவும் அமுல்யாவும் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் வீடியோவும் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், ரத்னஜா பணம் தராததால் முத்தக் காட்சி புகைப்படத்தை அந்த ஆசாமி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ரத்னஜா கூறுகையில், “முத்தக் காட்சி புகைப்படம் உண்மையானதல்ல. மார்பிங் செய்து உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிடாமல் இருக்க என்னிடம் ரூ.1 கோடி கேட்டு பிளாக்மெயில் செய்தனர்”  என்றார்.

இது குறித்து நடிகை அமுல்யா கூறுகையில், “இயக்குனர் ரத்னஜாவையும், என்னையும் சம்பந்தப்படுத்தி யாரோ வேண்டுமென்றே இப்படி ஒரு சதியை செய்துள்ளனர். எனது புகழை கண்டு பொறுக்க முடியாமல் சினிமா துறையை சேர்ந்த யாரோதான் இப்படி ஒரு கீழ்த்தரமான படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தை தொலைக்காட்சியில் பார்த்தவுடன் எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் அது போன்று கீழ்த்தரமாக நடந்து கொள்பவள் அல்ல என்பது சினிமா உலகை சார்ந்த குறிப்பாக என்னை நன்றாக தெரிந்தவர்களுக்கு தெரியும்.

நான் நடித்து வெளியான எல்லா படங்களும் நன்றாக ஓடுவதால் பொறாமைப்பட்ட சிலர் வேண்டும் என்றே காட்சிகளை சித்தரித்து ஆபாச படத்தை வெளியிட்டு உள்ளனர். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதை அந்தப் படத்தை உன்னிப்பாக கவனித்தாலே நன்கு தெரியும்.

அந்த படத்தில் இயக்குனருடன் நெருக்கமாக இருக்கும் பெண் நான் அல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சதியை நான் சட்டரீதியாக சந்திப்பேன்” என்றார் அழுதபடியே


PhotobucketPhotobucket

“ஸண்டே மட்டும் 3 சிகரெட் பிடிப்பேன்” – நடிகை சேத்னாவின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்..!

10 June 2010 · 0 comments

“ஸண்டே மட்டும் 3 சிகரெட் பிடிப்பேன்” – நடிகை சேத்னாவின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்..!
என்னதான் பேச்சுரிமையும், எழுத்துரிமையும் இருந்தாலும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வெளிப்படையா பேசவே வராது. இதுவும் தமிழ்ப் பெண்கள் தமிழ்ச் சினிமாவில் ஹீரோயின்களாக ஆக முடியாததற்கு ஒரு காரணம்..!

வடக்கில் இருந்து வருபவர்கள் கவர்ச்சி காட்ட விரும்பியும், ஓப்பன் மைண்ட்டோடும் வருவதால் பேச்சுக்கு பேச்சும் கிடைச்சு, படத்துக்கு இலவசமா பிரமோஷனும் கிடைப்பதால்தான் அவர்களையே தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் விரும்புகிறார்கள்.

இதோ இப்போது ஒருவர் வந்திருக்கிறார். பெயர் சேத்னா. உத்தர்காண்ட் மாநிலத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதி ஆகியிருக்கிறார். தேசிய அளவிலான பேட்மிண்டன் சாம்பியனும்கூட. நீயும்  நானும், படத்தின் கதாநாயகி..

படத்தின் ஸ்டில்களிலேயே எதற்கும் துணிந்த ஹீரோயின்தான் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

“செக்ஸியா நடிக்கிறதுல எனக்கு ஒரு தயக்கமும் இல்லை. அதற்கான அழகும், உடல்வாகும் எனக்கு இருக்கிறதாலதான் எல்லாரும் ரசிக்க விரும்புறாங்க.. ஆனா ஒண்ணு.. சம்பளம் எவ்வளவு அள்ளிக் கொடுத்தாலும் முத்தக் காட்சில மட்டும் நடிக்க மாட்டேன்.” என்கிறார்.

“தமிழகப் பிரவேசம் எப்படி?” என்றால், “அமீர்கானுடன் ஒரு விளம்பரப் படத்தில் நடித்திருந்ததைப் பார்த்துட்டு என் தூக்கத்தைக் கெடுக்குற அளவுக்கு நிறைய போன் வந்துச்சு. பாலிவுட் டைரக்டர்ஸ் கூப்பிட்டாங்க.. அத்தோட சோலைராஜாவும் வந்தார். அவரோட அணுகுமுறையும், பெண்களுக்குக் கொடுக்குற மரியாதையும் எனக்குப் பிடிச்சுப் போனதால நடிக்க ஒத்துக்கிட்டேன். எனக்கு மரியாதை ரொம்ப முக்கியம்..” என்கிறார்.

சேத்னா கடைசியா சொன்னதுதான் அதி முக்கியமான விஷயம். “தண்ணி சிகரெட் ரெண்டுமே யார் அடிச்சாலும் அது ஆரோக்கியக் கேடுதான். ஆண், பெண் என்கிற பிரிவெல்லாம் இதுல பார்க்கக் கூடாது. எனக்கு டிரிங்க்ஸ் பழக்கமில்ல. ஆனா ஸண்டே மட்டும் நான் கண்டிப்பா 3 சிகரெட் பிடிப்பேன்.. டேக் இட் ஈஸிம்மா..” என்கிறார்.

ஹீரோயின்கள் சொன்னதை நாங்க என்னிக்கு கேக்காம இருந்திருக்கோம்..? இதையும் ஈஸியாவே எடுத்துக்குவோம்..! 

================================================================
நானும், குஷ்புவும் எதிரிகளல்ல – நதியா பளீச் பேட்டி..!

அடுத்த ஜாக்பாட் ராணியாகவிருக்கும் நதியா இப்போதெல்லாம் மிகத் தெளிவாகப் பேசத் துவங்கியிருக்கிறார்..! எல்லாம் குஷ்புவின் காப்பிரைட்டிங்தானாம்.. இப்படி பேசத் துவங்கினால்தான் நிகழ்ச்சியில் சொதப்பாமல் இருக்க முடியும் என்பதால் பத்திரிகையாளர்கள் பேட்டி என்று போனால் “எவ்வளவு நேரம் வைச்சுக்கலாம்” என்று திருப்பிக் கேட்டு நெஞ்சுவலி வர வைக்கிறாராம்..

“நானும் குஷ்புவும் எதிரிகளல்ல. நல்ல பிரெண்ட்ஸ். அப்பப்போ பேசிக்குவோம்.. இந்த சேனல்ல எனக்குக் கொடுக்கப்பட்ட ஜாக்பாட் ஷோவை ஒரு ஷோவாதான் நான் பார்க்குறேன்.. குடும்பத்தோட கலந்துக்கிட்டு ஜாலியா என்ஜாய் பண்றாங்க. நான் பண்றதுக்கு சரியான புரோகிராம் இதுதான்..

பார்க்கிறவங்களுக்கு ஆரம்பத்துல செட் ஆகாத மாதிரிதான் தோணும். அப்புறம் போகப் போக நதியாவின் பளிச் டச் இந்த நிகழ்ச்சியிலேயும் தெரியும்.. எப்பவுமே எந்த வேலையைச் செய்தாலும் அதில் நம்முடைய திறமையை தனியா தெரிய வைக்கணும். அதுதான் என் ஸ்டைல்.

நான் இப்போ மும்பைல செட்டிலாயிட்டேன். பெரிய பொண்ணுக்கு பதிமூணு வயசு. சின்னப் பொண்ணுக்கு ஏழு வயசு. அவங்களுக்குத் தமிழ் தெரியாட்டியும் எல்லா தமிழ்ச் சேனலையும் பார்ப்பாங்க.. எனக்கு என் பிள்ளைகள்தான் மாஸ்டரா இருக்கப் போறாங்கன்னு நினைக்கிறேன். நான் சொதப்பாமல் பண்ணணுமேன்னு பயமாத்தான் இருக்கு..!” என்கிறார் நதியா.

“இத்தனை நாள் நடிச்சிருக்கீங்களே.. இயக்கம் எப்போ?” என்றவுடன் பதறுகிறார். “எனக்குத் தெரிஞ்ச வேலையை மட்டும் செஞ்சுக்கிட்டிருக்கேன். அதுவே போதுமே.. எதுக்கு இயக்கம் பண்ற வேலையெல்லாம்..?” என்கிறார்.

“ஜாக்பாட்டை வெற்றிகரமா முடிச்சிட்டு குஷ்பு அரசியல் கரை சேர்ந்துட்டாங்க.. குஷ்பு மாதிரியே நீங்களும் பின்னாடியே போயிருவீங்களா?” என்றவுடன் “ஐயையோ.. ஆளை விடுங்க.. எனக்கு அரசியலே தெரியாது..” என்று சொல்லிப் பதறுகிறார். அரசியலுக்குள்ள வர இதுதாம்மா தகுதி..!

ஆனாலும் கடைசிவரையில் ஒரு கேள்விக்கு மட்டு்ம் நதியா விடை சொல்லவில்லை. தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.. குஷ்புவின் அந்த ஜாக்கெட் மந்திரத்தை நதியாவும் தொடர்வாரா என்று..!? 

சிவாஜியை மிஞ்சும் ராவணன்..!

09 June 2010 · 0 comments

சிவாஜியை மிஞ்சும் ராவணன்..!
மணிரத்னத்தின் ராவணன் படம் குறித்த விளம்பர செய்திகள் அணிவகுக்க ஆரம்பித்துள்ளன.

ரஜினி நடித்து வசூலில் சாதனைப் படைத்த ஷங்கரின் சிவாஜி படத்தைவிட கூடுதல் திரையரங்குகளில் ராவணன் வெளியாகப் போகிறதாம்.

ராவணன் படம் வரும் ஜூன் 18ம் தேதி உலகெங்கும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது.

தமிழில் விக்ரம், பிருதிவிராஜ், பிரபு, கார்த்திக், ஐஸ்வர்யாராய், பிரியாமணி நடித்துள்ளனர். இந்திப் பதிப்பில் அபிஷேக்பச்சன், விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

சர்வதேச மார்க்கெட்டை பிடிக்க இலங்கையில் நடந்த பட விழாவில் இப்படத்தை திரையிட மணிரத்னம் திட்டமிட்டார். ஆனால், தென் இந்திய திரையுலகினரின் ஒன்றுபட்ட எதிர்ப்பைப் பார்த்து மிரண்டுபோய் அந்த திட்டத்தைக் கைவிட்டார். ஆனாலும் பெரும் விலைக்கு ராவணன் படம் விற்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ரஜினியின் சிவாஜி படத்தை விட அதிக தியேட்டர்களில் ராவணன் படத்தை திரையிடுகின்றனர். அந்த நேரத்தில் வெளியாகும் ஜாக்கிசானின் குழந்தைகள் படமான கராத்தே கிட் மற்றும் டாய் ஸ்டோரி ஆகிய ஹாலிவுட் படங்களுடன் இந்தப் படம் மோதுகிறது.

இந்த மூன்று படங்களுக்கும் அதிக தியேட்டர்கள் தேவைப்படுவதால், மற்ற தமிழ்ப் படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.

“குஷ்பு உளறிக் கொட்டியிருக்கிறார்” – தாக்குகிறார் நடிகை விந்தியா..!

08 June 2010 · 2 comments

“குஷ்பு உளறிக் கொட்டியிருக்கிறார்” – தாக்குகிறார் நடிகை விந்தியா..!
சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்த நடிகை குஷ்பு கலைஞரின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய பேச்சை விமர்சித்து பேட்டியளித்துள்ளார் இப்போது அ.தி.மு.க.வில் இருக்கும் நடிகை விந்தியா.

விந்தியாவின் பேட்டி இது :

“குஷ்புவும் நானும் சினிமாவில் தோழிகள். அவரும் நானும் இணைந்து சில படங்களில் பணியாற்றியிருக்கிறோம். இதனால் எங்கள் இருவருக்கும் இடையில் சகோதரித்துவ பாசவம் உண்டு. அவர் அரசியலுக்கு வந்ததை நான் மனமகிழ்வுடன் வரவேற்கிறேன்.

ஏதோ கட்சியில் சேர்ந்தோம். முதல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறோம் என்பதற்காக கட்சித் தலைமையைப் புகழ் பாட வேண்டும் என்பதற்காக குஷ்பு ஏதேதோ உளறிக் கொட்டியிருக்கிறார்.

உதாரணத்துக்கு பெண்களின் உரிமைக்காகப் பாடுபட்ட ஒரே தலைவர் கருணாநிதி. ஒரே கட்சி தி.மு.க. என்பது போல அவர் பேசியிருக்கிறார். அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு பதில் சொல்ல முடியாது.

இதே குஷ்பு தி.மு.க.வில் இணைவதற்கு முதல் நாள்வரை, “எனக்குப் பிடித்த தலைவி அம்மாதான். நான் அவரது ரசிகை” என்று அல்லவா வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருந்தார். எங்க அம்மாவின் அருமை, பெருமைகளை அவர் அறியாமலா ரசிகையாக இருந்திருப்பார்..?

தி.மு.க. ஆட்சியில்தான் ஆண்களைவிட பெண்கள் அதிகம் சாதிப்பதாக குஷ்பு சொல்கிறார். அந்தச் சாதனைப் பட்டியலை அவர் சொல்லட்டும். பார்க்கலாம். குறைந்தபட்சம் 500 பக்கம் அவர் சாதனைப் பட்டியலை வாசித்தால், நாங்கள் எங்கள் அம்மாவின் சாதனையை 1500 பக்கங்களுக்கு வாசிப்போம்..

அம்மாவை மட்டுமல்ல எம்.ஜி.ஆரைப் பற்றியும் குஷ்பு பேசியிருக்கிறார். அப்படிப் பேச குஷ்புவிற்கு என்ன தகுதியிருக்கிறது? எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேச கலைஞரே தயங்கும்போது, குஷ்பு எப்படி பேசலாம்? இன்றைக்கும் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ள ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்.தான்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் திரைப்படங்களுக்குப் பெண் பெயர்களை வைக்கவில்லை. கதையின் முக்கியத்துவம் கருதிதான் அது போன்ற பெயர்களை அவர் சூட்டியுள்ளார்.

எம்.ஜி.ஆர். அவரது படங்களுக்குத் ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாய்க்குப் பின் தாரம்’, ‘தாயைக் காத்த தனயன்’ என்றெல்லாம் பெயர் வைத்திருந்தது குஷ்புவுக்கு எங்கே தெரியப் போகிறது..?

தலைவர் எம்.ஜி.ஆர். அவர் நடித்த படங்களில் எல்லாம் தாய்க்குலத்துக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில்தான் நடித்திருப்பார். இதெல்லாம் குஷ்புவிற்கு எப்படித் தெரியும்? முதல் கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் கை தட்டல் வாங்க வேண்டும் என்பதற்காக யாரோ எழுதிக் கொடுத்ததை குஷ்பு பேசியிருப்பார்.

அழகிரி அடியெடுத்து வைத்தால் எல்லாமே அதிரடிதான். இவரு பெயரைக் கேட்டாலே சும்மா அதிரும் என்று சில பஞ்ச் டயலாக்குகளையும் குஷ்பு பேசியிருக்கிறார். இவர் இப்படி பஞ்ச் டயலாக் பேசவா அரசியலுக்கு வந்தார்..? குஷ்பு தேர்தல் பிரச்சாரம் செய்து ஒரு ரவுண்ட் வரட்டும். 2011-ல் யாருக்கு அதிரும், யாருக்கு எகிறும் என்பது அப்போது தெரியும்” என்று அதிரடியாகப் பேசியுள்ளார் விந்தியா

ஜோதிகாவுக்கு குட்டி சூர்யா பிறந்தான்..!

06 June 2010 · 0 comments


ஜோதிகாவுக்கு குட்டி சூர்யா பிறந்தான்..!
நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் நீண்ட காலம், பின்னர் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 

இத்தம்பதியினருக்கு இரு வயதான தியா என்ற பெண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதற்காக, அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஜோதிகா அட்மிட் செய்யப்பட்டார்.

மும்பையில் இருந்து ஜோதிகா உறவினர்களும், சூர்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் நேற்று இரவே மருத்துவமனையில் குவிந்துவிட்டனர்.

இன்று அதிகாலை 4.04 மணிக்கு சிசேரியன் மூலமாக ஆண் குழந்தை பிறந்தது. சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு உறவினர்களும், சினிமா நண்பர்களும் போனிலும், நேரில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

தடையை மீறிய நட்சத்திரங்களின் படங்களுக்கு தென்னிந்தியாவில் முழுத் தடை..!

· 0 comments

தடையை மீறிய நட்சத்திரங்களின் படங்களுக்கு தென்னிந்தியாவில் முழுத் தடை..!
தடையை மீறி ஐஃபா விழாவில் பங்கேற்ற சல்மான்கான், கரீனா கபூர் நடித்து வெளியாகவுள்ள 7 புதிய படங்களுக்கு தென்னகத்தில் உள்ள 5  மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களை படுகொலை செய்த இலங்கையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் நடிகர்- நடிகைகள் பங்கேற்க கூடாது என்று தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் தடை விதித்தன.

ஆனால் தடையை மீறி இந்தி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், விவேக் ஒபராய், சல்மான்கான், சஞ்சய்தத், கரீனாகபூர், பிபாசா பாசு, ரிதேஷ் தேஷ்முக், சீமாகான் போன்றோர் பங்கேற்றனர்.

இதையடுத்து சென்னையில் சத்தியம், ஈகா, பி.வி.ஆர்., ஐநாக்ஸ் ஆகிய 4 தியேட்டர்களில் திரையிட்டு ஓடிக்கொண்டிருந்த ஹிரித்திக் ரோஷனின் கைட்ஸ் படம் நேற்று முன்தினம் உடனடியாக தூக்கப்பட்டது. ஹிரித்திக்ரோஷனிடம் நஷ்டஈடு கேட்கவும், அவர் மறுத்தால் வழக்கு தொடரவும் விநியோகஸ்தர் தரப்பில் ஆலோசனை நடக்கிறது.

அடுத்தக் ட்டமாக விரைவில் ரிலீசாக உள்ள சல்மான்கான், கரீனா கபூரின் 7 படங்களுக்கும் தடை திக்கப்படுகிறது.

சல்மான்கான் நடித்து வரும் பந்தா ஏக் பிந்தாஸ் என்ற படம் ஜூலை 9-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் நடிக்கும் டாபங்க் என்ற படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. இவ்விரு படங்களும் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் திரையிடப்பட மாட்டாது.

கேரளா, கர்நாடகம், ஆந்திரா, புதுவை மாநிலங்களிலும் இப்படங்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாநில திரைப்பட அமைப்புகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தென்னிந்திய பிலிம்சேம்பருக்கு உறுதி அளித்துள்ளன.

சல்மான்கானுக்கு ஏற்கனவே தொடர்ச்சியாக 5 படங்கள் தோல்வி அடைந்தன. பிரபுதேவாதான் அவருக்கு வாண்டட் என்ற படம் மூலம் மறுவாழ்வு கொடுத்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. சென்னையிலும் வசூலை வாரி குவித்தது.

இதுபோல் கரீனாகபூர் நடித்து சமீபத்தில் ரிலீசான 3 இடியட்ஸ் படமும் சென்னையில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

இவர் நடித்து விரைவில் ரிலீசாக உள்ள மைலேஞ்ச் மைலேஞ்ச், சித்தார்த் மல்கோத்ராஸ் நெக்ஸ்ட், கோல்மால் 3, ரா ஒன், ஏன்ஜனட் விநோத் ஆகிய 5 படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் சல்மான்கானை வைத்து இயக்கவிருந்த படத்தை பிரபு தேவா கைவிட்டிருப்பதாகவும், அந்தக் கதையில் அமீர்கானை நடிக்க வைக்க முயற்சிப்பதாகவும் தெரிகிறது. மேலும் சல்மான்கானை வைத்து படம் பண்ணத் திட்டமிட்டிருந்த இயக்குநர் சரண், இப்போது வேறு ஹீரோ தேடுவதாகத் தெரிவித்துள்ளார்.

நான் இல்லை என்றால் நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார்-பிரபுதேவா விளக்கம்

26 May 2010 · 3 comments

நடிகை நயன்தாராவுக்கும், நடிகர்-டைரக்டர் பிரபுதேவாவுக்கும் இடையே நெருக்கமான காதல் இருந்து வருகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவியாக ரகசிய வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

பிரபுதேவா, திருமணம் ஆனவர். இவருக்கு ரமலத் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாராவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர், பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சை குத்தி இருக்கிறார். தனது காதல் பரிசாக, வைர டாலர் பதித்த தங்க சங்கிலியை நயன்தாரா,
பிரபுதேவாவுக்கு வழங்கி இருக்கிறார்.

அந்த சங்கிலியை பிரபுதேவா எப்போதும் கழுத்தில் அணிந்து இருக்கிறார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் ஜோடியாக வெளிநாடு போய் வருகிறார்கள்.

நயன்தாரா-பிரபுதேவாவின் காதல் விவகாரம், மனைவி ரமலத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. நயன்தாராவிடம் இருந்து கணவரை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என்று ரமலத் முயற்சி செய்து வருகிறார்.

அதன் முதல்கட்டமாக, ``நயன்தாரா என் கணவரை விட்டு விலகிவிட வேண்டும். இல்லையென்றால், அவரை எங்கேயாவது நேரில் பார்த்தால் அடிப்பேன்`` என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த எச்சரிக்கைக்கு எந்த பலனும் இல்லை. நயன்தாராவும், பிரபுதேவாவும் முன்பைவிட, இப்போது அதிக நெருக்கமாக நடந்துகொள்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து ரமலத், தமிழ் பட உலகை சேர்ந்த சில பிரமுகர்களிடம் தனது நிலைமையை கூறி முறையிட்டார். ``என்னிடம் இருந்தும், என் குழந்தைகளிடம் இருந்தும் என் கணவரை நயன்தாரா பிரித்து சென்று விடுவாரோ என்று பயப்படுகிறேன். நயன்தாராவின் பிடியில் இருந்து என் கணவரை மீட்டு, எங்களுடன் சேர்த்து வையுங்கள்`` என்று அழுதுகொண்டே கூறினார்.
அதைக் கேட்டு உருகிப்போன அந்த பிரமுகர்கள், பிரபுதேவாவை நேரில் வரவழைத்து, `பஞ்சாயத்து` பேசினார்கள். அவர்களிடம் பிரபுதேவா, ``நயன்தாராவை விட்டு என்னால் பிரிய முடியாது. அந்த அளவுக்கு நாங்கள் நெருக்கமாகி விட்டோம். நான் கைவிட்டால், நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார்`` என்று கூறிவிட்டார்.

அதனால் பஞ்சாயத்து பேச வந்தவர்கள், நயன்தாரா-பிரபுதேவா பிரச்சினையை கை கழுவி விட்டார்கள். 




தொடர் தோல்வி... விஜய்க்கு நாளை ஆப்பு திரையரங்க உரிமையாளர் சங்கம்.

25 May 2010 · 2 comments


விஜய்யின் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவி, பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவரது படங்களுக்கு நாளை ரெட் கார்டு போட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அங்காடித் தெரு தவிர சமீபத்தில் வெளியான எந்தத் தமிழ்ப் படமும் வெற்றியைப் பெறவில்லை என்று விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் புலம்பி வருகின்றனர்.

விஜய்யின் குருவி, வில்லு, வேட்டைக்காரன் மற்றும் சுறா ஆகிய படங்கள் தொடர்ச்சியான தோல்வியைத் தழுவி, பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக வெளிப்படையான புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நஷ்டத்தை விஜய்தான் ஈடு செய்ய வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எப்படி ஈடு செய்ய வேண்டும் என்றும் ஏற்கெனவே ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாளை மே 26-ம் தேதி பிற்பகல், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள செக்கர்ஸ் ஓட்டலில் திரையரங்க உரிமையாளர்களின் கூட்டமும் அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடக்கிறது.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஆர் எம் அண்ணாமலை இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறார். செயலாளர் பன்னீர் செல்வம், சேலம் டிஎன்டி ராஜா, கோவை ராயல் சுரேஷ் போன்ற நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், தனது படங்களின் நஷ்டத்தை விஜய் ஈடுகட்ட வேண்டும் அல்லது அவரது எதிர்வரும் படங்களுக்கு ரெட் கார்டு விதிக்கப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் தொடர்ந்து படுதோல்வியைத் தழுவி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள் குறித்தும் அந்த நஷ்டத்தை திரும்பப் பெறுவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

நடிகர் பிரபுவுடன் இருந்த தொடர்பு – ஒத்துக் கொள்கிறார் நடிகை குஷ்பு..

20 May 2010 · 1 comments

நடிகர் பிரபுவுடன் இருந்த தொடர்பு –
பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறார் நடிகை குஷ்பு..

சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நடிகை குஷ்பு ஜீ தமிழ்ச் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில் நடிகர் பிரபுவுடனான தனக்கு இருந்து வந்த தொடர்பை வெட்டவெளிச்சமாக்கியுள்ளார்.

“நடிகர் பிரபுவுடனான உங்களது தொடர்புகள்.. காதல் பற்றி” என்ற கேள்விக்குப் பதிலளித்த குஷ்பு, “தப்புப் பண்ணிட்டேன்.. தப்புப் பண்ணிட்டேன்.. அவ்வளவுதான்.. அது ஓவர்.. நான் தப்பே பண்ணலை. நான் ரொம்பத் தூய்மை.. புனிதம்னு மறைச்சு செய்றதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. தப்பை ஒத்துக்கணும்.. அடுத்தத் தடவை இந்த மாதிரி நடக்கக்கூடாது. அவ்வளவுதான்.. எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். என் கணவருக்கும் என்னைப் பற்றி திருமணத்துக்கு முன்பே நல்லா தெரியும்..” என்கிறார் குஷ்பு.

“பெண்ணின் சுயமரியாதையைப் பற்றி அதிகம் பேசும் உங்களுக்கு ஏற்கெனவே திருமணமான பிரபவுடன் தொடர்பு வைத்துக் கொண்டதில் குற்ற உணர்ச்சி ஏற்படவில்லையா..?” என்று கேட்டதற்கு, “லவ் இஸ் பிளைண்ட் இல்லையா..? அது மாதிரிதான் இருந்தது. கண் திறக்க செய்றது தப்புன்னு தெரிய.. ஆறு வருஷமாச்சு..” என்றார்.

“பிரபுவோட பழகிட்டு இருந்தப்போ அவங்க மனைவி வருத்தப்பட்டிருக்க மாட்டாங்களே.?” என்று கேட்டதற்கு “நிச்சயம் வருத்தப்பட்டிருப்பாங்க.. அவர் இப்போ நல்ல குடும்பத் தலைவராக, பேரனுடன் நல்லபடியாக வாழ்ந்து வருகிறார். நான்,. என் கணவர், வளரும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறேன். அப்போ நடந்ததுல இருந்து இப்போ ரொம்ப தூரம் வந்தாச்சு.. எங்க இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் பரஸ்பர மரியாதை இருக்கு..” என்று தெரிவித்தார் குஷ்பு.

கொழும்புவில் இந்திய திரைப்பட விழா : தமிழ் திரையுலகம் புறக்கப்பணிப்பு

19 May 2010 · 0 comments


இலங்கையில் நடைபெற உள்ள சர்வதேச இந்திய திரைப்பட அகாடெமி (IIFA) விருதுகள் விழாவை தமிழ்த் திரையுலகம் புறக்கணிக்கிறது.

அத்துடன், அந்த விழாவை ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்த் திரையுலகம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகிய அமைப்புகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:

"கடந்த வருடம் இலங்கையில் தமிழ் இனத்தை சேர்ந்த குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என குவியல் குவியலாக ஆயிரக்கணக்கானவர்களை கொன்று ஈழ மண்ணை சுடுகாடாக்கி மகிழ்ந்தது, சிங்கள அரசு. அங்கு கேட்ட மரண ஓலம் உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனதில் இன்னமும் ஆறாத வடுவாக இருந்து கொண்டிருக்கிறது.

இலங்கையில் நடைபெறும் தமிழ் இன அழிப்புப் போரை நிறுத்தி, தமிழ் இனத்தை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் திரையுலகம் சார்பில் நடிகர் - நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள், சின்னத்திரை கலைஞர்கள் ஆகிய அனைவரும் ஒன்று கூடி மனிதச்சங்கிலி, ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம் என திரையுலகம் சார்பில் கண்டனங்களை தெரிவித்தோம்.

அதை செவி கொடுத்து கேட்டும், சிங்கள அரசு போரை நிறுத்தவில்லை. நடைபெற்ற தமிழ் இன அழிப்பு போரில், தங்கள் உடல் உறுப்புகளை இழந்து, அந்தப்போரின் நடமாடும் நினைவு சின்னங்களாய் வாழ்ந்து வரும் சொந்தத்தை பார்க்கையில், நெஞ்சமே வெடித்து விடும் போல் இருக்கிறது.

நம் சகோதர - சகோதரிகளுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் கேட்டுக்கொள்வது என்னவென்றால், வருகிற ஜுன் 4,5,6 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் சர்வதேச இன்திய திரைப்பட விழாவை கொழும்புவில் நடத்தக்கூடாது. அதனையும் மீறி அங்கு அந்த விழா நடப்பதாக இருந்தால், இந்திய திரையுலகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள், தொழிலாளர் சம்மேளனத்தினர், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என ஒட்டுமொத்த திரையுலகமே அந்த விழாவை புறக்கணிக்க வேண்டும்.

இலங்கை தமிழர்களின் உணர்வுகளுக்கும், உள்ளக்குமுறல்களுக்கும் ஆதரவாக தமிழ்திரை உலகின் இந்த புறக்கணிப்பு முடிவுக்கு இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி என இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரையுலகினரையும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தான் செய்த சதி வேலைகளை மறைத்து, குறுக்கு வழியில் புகுந்து புகழ் தேட நினைக்கும் சிங்கள அரசுக்கு, இந்திய திரையுலகம் குறிப்பாக, தமிழ் திரையுலகின் ஒட்டுமொத்த புறக்கணிப்பு, அவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்,'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

விஜயகாந்துக்கு தலைவருக்கான தகுதியில்லை – குஷ்புவின் முதல் அட்டாக்..!

18 May 2010 · 0 comments

விஜயகாந்துக்கு தலைவருக்கான தகுதியில்லை – குஷ்புவின் முதல் அட்டாக்..!

சால்வைகள், மாலைகள் வாங்க காசிருந்தாலே போதும்.. நினைத்தக் கட்சியில் சேர்ந்துவிடலாம். சேர்ந்தபோது எடுத்த புகைப்படத்தை வீட்டில் மாட்டிவிட்டு கட்சியின் லட்சக்கணக்கான உடன்பிறப்புக்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொண்டு வீட்டிலேயே இருக்கலாம்.

ஆனால் குஷ்பு எடுத்த எடுப்பிலேயே டாப் கியருக்கு போகிறார்..! கடந்த ஒரு மாத காலமாகவே அவர் தி.மு.க.வில் சேர கனிமொழி மூலமாக முயற்சித்து வந்திருக்கிறார். கனிமொழி ஸ்டாலினிடம் சொல்ல அதன் பின் ஸ்டாலினை இரண்டு முறை நேரில் சந்தித்து விலாவாரியாக பேசியிருக்கிறார் குஷ்பூ.

கட்சி, நடவடிக்கைகள், அதன் பின்னான காரியங்கள், என்ன கிடைக்கும், என்ன கொடுக்கப்படும் என்கின்ற விஷயமெல்லாம் பேசி முடிக்கப்பட்ட பின்புதான் குஷ்பு அறிவாலயத்தில் காலெடுத்து வைத்திருக்கிறார். இந்தக் கூத்தெல்லாம் முடிந்து தனது முதல் பேட்டியிலேயே பக்கா தி.மு.க. உடன்பிறப்பாக மாறிவிட்டார் குஷ்பு.

இன்று வெளிவந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் விஜயகாந்த் பற்றி பேட்டியளித்துள்ள குஷ்பு, “சினிமாவில் கேப்டன் விஜயகாந்தை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுக்காக அவரு கட்சியில நான் எப்படி சேர முடியும்..? நான் இப்பத்தான் ஒரு கட்சில சேர்ந்து உறுப்பினர் அடையாள அட்டை வாங்கியிருக்கேன்.. அதுக்குள்ள ஒரு கட்சித் தலைவரைப் பற்றி விமர்சிக்கக் கூடாது. இருந்தாலும் சொல்லிக்கிறேன்.. பெரிய தலைவர் என்று சொல்லிக் கொள்வதற்கான தகுதி விஜயகாந்த்துக்கு இல்லை. அதனை ப்ரூப் செய்ய அவர் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது..!” என்று சொல்லியுள்ளார்.

பாப்பா பொழைச்சுக்கும்..!

=====================================================
அடுத்த ஜாக்கெட்(ஜாக்பாட்) பிரபலம் யார்..?

ஜெயா டிவியில் கடந்த 10 அண்டுகளாக ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்தி வந்தார் நடிகை குஷ்பு. இந்த நிகழ்ச்சியினால் இவருக்கு என்றே தனி நேயர்கள் பட்டாளமே உள்ளது.

பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசுகளையும், பணத்தையும் வெல்லும் வகையில் சுவையான பல சுற்றுக்களுடன் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது இந்த ஜாக்பாட் நிகழ்ச்சி. ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.

இந்நிகழ்ச்சியில் குஷ்பு அணிந்துவரும் ஜாக்கெட் ரொம்ப பிரபலம். இதனால்தான் இந்த நிகழ்ச்சியே பிரபலமானது. விதம்விதமான டிஸைன்களில் குஷ்பு அணிந்து வந்த ஜாக்கெட்டுகளினாலேயே இந்த நிகழ்ச்சி அமோக வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடு ஜெயா டிவியில் அதிக வருமானம் தரக்கூடிய நிகழ்ச்சியாகவும், டி.ஆர்.பி. ரேட்டிங் உள்ள ஒரேயொரு நிகழ்ச்சியாகவும் இருந்து வந்தது.

இந்நிலையில் அவர் தற்போது திமுகவில் இணைந்துள்ளதால் அந்நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குஷ்பு இதனை எதிர்பார்க்கவில்லை என்றாலும், தி.மு.க. தரப்பிலும், கலைஞர் டி.வி. தரப்பிலும் இதைத்தான் எதிர்பார்த்தார்கள்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக தி.மு.க.வுக்கு இது நிச்சயம் பலனளிக்கத்தான் போகிறது. முதல் பலனாக தி.மு.க.வுக்கு ஒரு கவர்ச்சி பிரபலம் கிடைத்ததோடு இல்லாமல் ஜாக்பாட் நிகழ்ச்சியை குப்புறக் கவிழ்த்ததால் இரண்டாமிடத்திற்கு தன்னுடன் போட்டியிட ஆளே இல்லாத நிலைமை கலைஞர் டிவிக்கு வந்துள்ளது.

ஜெயா டிவியின் நிலைமை இன்னும் பரிதாபத்திற்கு போயுள்ளது. அந்த டிவியின் ரேட்டிங் உள்ள ஒரேயொரு நிகழ்ச்சியான ஜாக்பாட்டை நிறுத்தி வைத்துள்ளதால் அவர்களுக்குத்தான் ஹெவியான நஷ்டம். அதோடு கூடவே இந்த 15 எபிசோடுகளை எடுத்தும் ஒளிபரப்ப முடியாததால் இந்த நஷ்டமும் சேர்ந்து கொண்டுள்ளது.

போதாததற்கு குஷ்பு மாதிரியான மக்கள் சக்தி வாய்ந்த ஒரு கவர்ச்சி பிம்பத்தை தேடிப் பிடித்து இதில் புக் செய்து மறுபடியும் நிகழ்ச்சியை சக்ஸஸ் செய்து காட்டுவது என்பது முடியாத காரியமாகவே தெரிகிறது.

சேனல் தரப்பில் தற்போது பரிசீலினையில் முதலிடத்தில் இருப்பது நடிகை ரோஜாதான். ஆனால் ரோஜா ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியில் சேரத் துடித்துக் கொண்டிருப்பதால் இந்தக் கோதாவில் களமிறங்குவாரா என்பது தெரியவில்லை.

பிரபுதேவா அடுத்த ஸ்டெப் -டயானாவுக்காக ஒரு டான்ஸ் ஸ்கூல்!

15 May 2010 · 1 comments


'பொம்பளை சகவாசத்தால் சம்பாதிச்ச சொத்தை எல்லாம் இழந்துட்டானே...' என்று பொதுவாக ஆண்களைத்தான் சொல்வார்கள். ஆனால், 'ஆம்பளை சகவாசத்தாலே ஆடிப்பாடி, சம்பாதிச்ச காசை எல்லாம் இழந்துட்டு அம்போன்னு நிக்கிறாளே...' என்று நயன்தாரா பெற்றோர் புலம்புவதாக வரும் தகவல்கள்தான் புதுக்கதை!

நயன்தாராவின் சினிமா வாழ்க்கைக்கும், குடும்பத்துக்கும் நெருக்கமான சிலரிடம் இதுபற்றி நாம் துருவியபோது, புலம்பலின் பூர்வீகத்தைப் புட்டுப்புட்டு வைத்தார்கள். ''கேரளாவில் உள்ள திருவல்லாதான் நயன்தாராவின் சொந்த ஊர். அவரது வீட்டில் மூன்று காஸ்ட்லியான கார்கள் இருக்கிறது. அப்படியிருந்தும், சமீபத்தில் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ காரை நயன்தாரா வாங்கினார். அதையும் தவணை முறையில் பணம் கட்டுவதாகச் சொல்லித்தான் வாங்கினார். என்ன காரணமோ... அந்தத் தவணைத் தொகையை நயன்தாரா சரிவரக் கட்டவில்லை. அதனால் கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டையே முற்றுகையிட்டார்கள்...'' எனச் சொன்னார்கள்.

''ஆயிரத்தில் சம்பளம் வாங்கும் சராசரிகளே மாதத் தவணையை ஒழுங்காகக் கட்டி வருகிறார்கள். ஆனால், லட்சக்கணக்கில் பணத்தைக் குவிக்கும் நயன்தாரா,தவணை கட்ட முடியாமல் தடுமாறுவதாகச் சொல்வது நம்பும்படியாக இல்லையே..?'' என நாம் கேட்க... ''நயன்தாரா இந்த நிலைமைக்கு ஆளானதற்குக் காரணமே பிரபுதேவாதான்!'' எனச் சொல்லி அதிர வைத்தவர்கள், மேற்கொண்டும் தொடர்ந்தார்கள்.

''சினிமாவில் நடிகர்கள் 10 வருஷங்களுக்கு மேலகூட உச்சத்தில் இருப்பாங்க. ஆனால், நடிகைகள் ஹீரோயினாக பிரகாசிப்பது சொற்ப காலம்தான். இதை நல்லா உணர்ந்தவர் நயன்தாரா. அதனால்தான் சிம்புவின் காதல் வலையில் சிக்காமல் தப்பி கிளாமர் இமேஜைக் காத்துக்கொண்டார். முன்பு இருந்ததைவிட தமிழ், தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டிப் பறந்தார். எப்போது பிரபுதேவா இயக்கத்தில் 'வில்லு' படத்தில் ஒப்பந்தம் ஆனாரோ... அப்போதே சரிய ஆரம்பித்துவிட்டார்.

நயன்தாராவோட ஒரிஜினல் பெயர் டயானா. அப்பா மிலிட்டரி ஆபீஸர். அம்மா ஹவுஸ் ஒய்ஃப். நயனோட சகோதரர் துபாயில் வேலை செய்கிறார். கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாராவுக்கு ரொம்ப தாராள மனசு. சிம்புவை காதலிச்ச நேரத்தில அடிக்கடி வெளிநாடு ஷூட்டிங் போவாங்க. அப்போ, திடீர்னு சிம்பு ஞாபகம் நயன்தாராவை படுத்தி எடுக்கும். உடனே, சென்னையில் இருந்த அவருக்கு போன் பண்ணி தன்னோட சொந்த காசுல போக, வர ஃப்ளைட் டிக்கெட் போட்டு, காஸ்ட்லியான ஸ்டார் ஹோட்டல் அறையிலேயே தங்க வெச்சுக்குவார். அப்போதான், அவங்க ரெண்டு பேரும் ரொம்ப அந்யோன்யமா இருக்கிற படங்கள் யார் மூலமாகவோ அத்தனை பத்திரிகைகளுக்கும் போயிடிச்சு. அதனால, ஏற்பட்ட வம்பாலேயே சிம்புவுடனான லவ் முறிஞ்சு போனது.

அதுக்கப்புறம்தான் பிரபுதேவாவோட நெருக்கம் உண்டானது. வழக்கமா பொண்ணுங்களை வசியம் பண்றதுக்கு ஆம்பளைங்கதான் நெக்லஸ், தங்க நகைன்னு பரிசா கொடுப்பாங்க. ஆனா, சமீபத்துல பிரபுதேவாவுக்கு வைரம் பொதித்த காஸ்ட்லியான செயினை வாங்கி கொடுத்திருக்கார். அதுமட்டுமில்லை... தமிழ், மலையாளம், தெலுங்குன்னு சவுத் இந்தியாவுல புகழ்பெற்ற நடிகையா வலம்வந்த நயன்தாரா... பிரபுதேவா சகவாசத்தால் நிறைய பட வாய்ப்புகளை இழந்து வருகிறார். அதுக்குக் காரணமே நயன்தாரா நடிக்கிற படங்களோட கதைகளை, அதிலும் கிளாமர் காட்சிகள் இல்லாத கதைகளை, மட்டுமே பிரபுதேவா செலக்ட் செய்கிறார். சம்பளத்தையும் அவர்தான் நிர்ணயம் செய்கிறார். அதோடு, 'நயன்தாரா படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு நானும் வருவேன்' என்று கண்டிஷன் போடுகிறார். இது நயன்தாராவுடன் நடிக்கும் ஹீரோக்களை நெளிய வைக்கிறது.

தமிழில் தற்போது 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். கொஞ்ச நாளைக்கு முன்பு அந்தப் படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்தது. அங்கே நயன்தாராவோடு பிரபுதேவாவும் போனார். அங்குள்ள ஹோட்டலில் தாராவுடன் தங்கினார். டைரக்டர் மறுநாள் எடுக்கும் காட்சியைப்பற்றி விளக்கிச் சொல்வதற்கு எத்தனையோ முறை முயன்றும் ஹீரோயினை நெருங்க முடியவில்லை. அதோட ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கே வந்து பிரபுதேவா அங்குள்ள கேரவனில் உட்கார்ந்துகொண்டார். எடுக்கப் போற ஸீன் பற்றி டைரக்டர் ஒரு தடவை சொன்னாலே... கற்பூரமாகப் பிடித்துக் கொள்ளும் நயன்தாரா கும்பகோணம் ஷூட்டிங்க்ல டேக் மேல டேக்கா வாங்கினாங்க. அடுத்த காட்சி பற்றி டைரக்டர் சொல்ல வர... இவரோ கேரவனுக்குள் போய்விட்டார். இந்த மாதிரி தொல்லைகளாலே நயன்தாராவை ஒப்பந்தம் பண்ண பலரும் பயப்படுறாங்க!'' என்றவர்கள், க்ளைமாக்ஸ் விஷயத்துக்கு வந்தார்கள்.

''கடந்த ஏழாம் தேதி இயக்குநர் சித்திக் மகளுக்கு கொச்சினில் கல்யாணம் நடந்தது. அதுக்கு பிரபுதேவாவோட ஜோடியா போனார் நயன்தாரா. 'நயன்தாரா'ங்கிற பேர்ல இன்டர்நேஷனல் டான்ஸ் ஸ்கூல் ஒன்றை பிரபுதேவா ஆரம்பிக்கப் போறார். மிகப் பெரிய அளவில திட்டமிடப்பட்டிருக்கிற அந்த ஸ்கூலுக்கு முழு ஒத்துழைப்பையும் தர நயன் ஓகே சொல்லிட்டாங்க. நல்லபடி சம்பாதிச்சாலும் நயனோட பணமெல்லாம் இந்த மாதிரி திசை தெரியாம செலவாகிட்டு இருக்கு. பி.எம்.டபிள்யூ கார் வாங்க நயனுக்கு ஆசையே இல்லை. மனசுக்குப் பிடிச்சவங்களை சந்தோஷப்படுத்துறதுக்காகத்தான் அந்த காஸ்ட்லியான காரை வாங்கினாங்க. அதுக்கான தவணையை அவங்க கட்டாததால், கடன் கொடுத்தவங்க வீடு வரைக்கும் தேடி வந்தது, நயனோட பெற்றோரை ரொம்ப கஷ்டப்படுத்திடிச்சு. இதுக்கிடையில் 'இச்' பட ஷூட்டிங்குக்காக வருகிற 20-ம் தேதி ஃபிரான்ஸ் போக இருக்கிறார் பிரபுதேவா. அவருடன் நயன்தாராவும் சைலண்டாக கிளம்பப் போவதாக தகவல் இருக்கிறது. நயன்தாராவை நம்பி புக் பண்ணியவர்கள் என்ன கதியாகப் போகிறார்களோ?'' என்றார்கள் பெருமூச்சுடன்.

நயன்தாரா - பிரபுதேவா ஜோடிக்கு நெருக்கமானவர் களிடம் இதுகுறித்துக் கேட்டால்... ''அப்படியெல்லாம் எதுவுமே இல்லை! மேலும் மேலும் இந்த விவகாரத்தை ஊதிவிடும் சிலருக்கு வேறு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது!'' என்று பலமாக மறுக்கிறார்கள்!

ப்ரீத்தி ஜிந்தாவை கடுப்பேற்றிய ரசிகைகள்..!

14 May 2010 · 0 comments

ப்ரீத்தி ஜிந்தாவை கடுப்பேற்றிய ரசிகைகள்..!

ரசிப்பு இருக்க வேண்டியதுதான். ஆனால் இந்த அளவுக்கா இருப்பது.. ரசிகர்கள் நடிகைகளையும் மனிதர்களாக நினைத்துப் பார்க்க வேண்டும் என்று நடிகைகள் கெஞ்சி வந்தாலும் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியினால் நடிகை ப்ரீத்தி ஜிந்தா கடும் டென்ஷனில் இருக்கிறாராம். காரணம் - சிறுநீர் கழிப்பதற்காக டாய்லெட்டுக்குப் போன இடத்தில் ரசிகைகள் சிலர் கேமராவுடன் வந்து அவரைப் படம் பிடித்ததால் ஏற்பட்ட டென்ஷனாம் இது.

இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் படபடப்போடு எழுதியுள்ளார் ப்ரீத்தி.

அதில், “நான் எப்போதுமே ரசிகர்களை மதிப்பவள். அவர்களை விரும்புகிறேன். அதை நான் மறைத்ததே இல்லை. ஆனால் நான் கழிப்பறைக்குச் செல்லும்போது பெண்கள் சிலர் கேமராவுடன் வந்து படம் பிடித்தபோது அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பாத்ரூமுக்குள் கேமராவுடன் வந்து படம் பிடிக்க வேண்டிய அவசியம் என்ன..?” என்று சற்று எரிச்சலுடனேயே கேட்டுள்ளார் ப்ரீத்தி.

சில நாட்களுக்கு முன்பு ஹாலிவுட்டில் பிரபலமாகி வரும் நடிகை ப்ரீதா பின்டோகூட இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டார். படப்பிடிப்புத் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிய கழிப்பறைக்குள் அவர் போனபோது சிலர் உள்ளே நுழைந்து அவரைப் படம் எடுத்து விட்டார்களாம்.

ரசிகர்களே உங்க வெறித்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா..?

இவர்களுக்கு ஏன் இவ்ளோ சின்ன மீசை?

· 0 comments

இவர்களுக்கு ஏன் இவ்ளோ சின்ன மீசை?
ஹாய் மதன்-கேள்வி பதில்

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், எஸ்.எஸ்.ராசேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என அனைவருமே சிறிய, மெல்லிய மீசையில் ஜொலித்த ரகசியம் என்ன?

ஹாலிவுட் பாதிப்பு இல்லாமல் நம்ம இந்திய சினிமா இல்லை!

அதாவது, 50-களில் எரால் ஃப்ளைன், க்ளார்க் கேபிள் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் அப்படி மீசை வைத்திருந்ததுதான் காரணம். இங்கு மட்டுமில்லை. ராஜ்கபூர், குருதத் போன்ற ஹிந்தி நடிகர்களும் அதே மாதிரி மீசை வைத்துக்கொண்டார்கள். இன்று ஹாலிவுட் நட்சத்திரங்கள் மீசை வைத்துக்கொள்ளவில்லை. நாமும்

திராவிட மொழிகளுக்குத் தாய் சம்ஸ்கிருதமா?

தாய் அல்ல, ஜஸ்ட் நண்பன்!

திராவிட மண்ணில் முதலில் பேசப்பட்ட, எழுதப்பட்ட மிகப் பண்டைய மொழி தமிழ். திராவிட மொழிகளுக்குத் தாயும் தமிழே!

அடுத்த பழமையான திராவிட மொழி கன்னடம். பிறகு தெலுங்கு, கடைசியாக மலையாளம். சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு சம்ஸ்கிருதம் தெற்கு நோக்கிப் பிரவேசித்து, தமிழை வெல்ல முடியாமல் அதனுடன் கை குலுக்கியது. அதன் காரணமாக, கி.பி. 500-ல் இருந்து கி.பி. 850 வரை சம்ஸ்கிருத வார்த்தைகள் தமிழில் கலந்தன. தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் தலை தூக்கிய பிறகு, மீண்டும் தமிழ் புதுப்பொலிவு பெற்றது. (நேற்று வரை 'ஹாஸ்யம்' என்று சம்ஸ்கிருத மொழியில் சொல்லிவந்த நாம், இன்று 'நகைச்சுவை' என்கிறோம்!) இன்று ஆங்கில வார்த்தைகள் தமிழுக்குள் புகுந்து விளையாடி வருவது வேறு விஷயம். ஆனால், கன்னடத்திலும், தெலுங்கிலும் இன்றளவும் சம்ஸ்கிருத பாதிப்பு அதிகம். தமிழின் பாதிப்பு பெரிய அளவில் உள்ள மொழி மலையாளம் மட்டும்தான். நாம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்ட, தமிழின் பண்டைய சங்க கால வார்த்தைகள் இன்றும்கூட சரளமாகப் புழக்கத்தில் இருக்கும் மொழி... மலையாளம்!

கோயிலுக்குச் சென்று அங்கு வரும் இளம் பெண்களின் அழகை ரசித்தது உண்டா? (மறைக்காமல் கூறுங்கள்!)

இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது?! இளம் பெண்களின் அழகை ரசிப்பதற்காக ரெகுலராகவே கோயிலுக்குச் சென்றதுகூட உண்டு (இப்ப இல்லை!).

வெறும் தமிழ் மொழியை மட்டும் தெரிந்துகொண்டு நாடாளுமன்ற விவாதங்களில் செயல்பட முடியாதா என்ன?

ஐ.நா-வில் நூற்றுக்கணக்கான மொழிகளில் பேசுபவர்கள் ஒன்று கூடிச் செயல்படும்போது, நாடாளுமன்றத்தில் ஏன் முடியாது? பல மொழிகள் பேசும் மக்கள் அடங்கிய நாடு இந்தியா. இந்த நாட்டுக்கான நாடாளுமன்றத்திலும் பல மொழிகள் ஒலிப்பதுதானே அழகு? டெக்னாலஜி விசுவரூபம் எடுத்திருக்கும் இன்றைய நிலையில், ஏன் அதற்கான வசதிகளைச் செய்து தருவதில் இவ்வளவு பிரச்னை?! என்னைக் கேட்டால், தமிழ் மக்களின் பிரநிதிகள் அனைவருமே நாடாளுமன்றத்தில் தமிழில்தான் உரையாற்ற வேண்டும் என்பேன்

பிற பறவைகளைப்போல மயில், தொடர்ச்சியாகப் பறக்கக் கூடிய பறவை அல்ல. திருவிளையாடல் திரைப்படத்தில் மயில் மீது ஏறி முருகன் உலகைச் சுற்றி வந்த விந்தை எப்படி நிகழ்ந்தது?

டைனோசர்கள் பறக்குமா? இன்றைய பறவைகள் அனைத்தும் டைனோசர்களின் வாரிசுகள்தான்! அதேபோல இன்று பறக்கும் திறனை இழந்த மயில் ஒரு காலத்தில் தொடர்ந்து பறந்திருக்குமோ?! முருகன் மயில் மீது அமர்ந்து பறந்த காலத்தை நீங்கள் குறிப்பிட்டால், என்னால் உங்கள் கேள்விக்குத் திட்டவட்டமாகப் பதில் சொல்லிவிட முடியும்

புவியீர்ப்பு விசைக்கு எதிராக நாம் மேல் நோக்கி வளர்கிறோமே. எப்படி?

புவியீர்ப்புச் சக்தி இல்லாமல் இருந்து... 'அவதார்' படத்தில் வரும் வேற்றுக் கிரகவாசிகளைப்போல நாம் எல்லோரும் 10 அடி உயரத்துக்கு வளர்ந்து... கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்


தனிநபர் துதி நம் நாட்டில் அதிகமாக இருப்பதற்குக் காரணம் என்ன?

அந்தக் காலத்தில் இருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான கடவுள்களை வழிபடுபவர்கள் இந்தியர்கள். அதிலும் திருப்தி இல்லாமல் தனிநபர்களையும் துதி பாடி வழிபட ஆரம்பித்துவிட்டதால் இந்த நிலைமை. இது, நடிகைகளுக்குக் கோயில் கட்டும் அளவுக்குப் போய்விட்டது மேலும் தமாஷ். பகுத்தறிவை வளர்க்க வேண்டும் என்று முழங்கும் அரசியல் கட்சிகளே 'தனிநபர் துதி'யையும் கூடவே வளர்த்துவிட்டிருப்பது கூடுதல் தமாஷ்!

'காமதேவன்' என ஓர் இறைவன் நிஜமாகவே உண்டா?

காமதேவன், காம அரக்கன் என்று ரெண்டு பேர் உண்டு. உஷாராக இருக்கவும்!

-vikatan


சுஜாதா-25- "சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்"

13 May 2010 · 1 comments

சுஜாதா-25- "சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்"


சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்...

ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.

நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு 'நைலான் ரதங்கள்'!


முதல் சிறுகதை 1958-ல் 'சிவாஜி' பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. 'கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்' என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை 'இடது ஓரத்தில்' 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு!

பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதாபெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்!

இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த் தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!

20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிஇருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!

சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் 'எந்திரன்'. கமலுக்காக எுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!

ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகை களில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்!

தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற 'வாஸ்விக்' விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வ ளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை!

சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை!

சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங் கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன!

கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை!

ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது!

உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடுமுயற்சி செய்தவர்!

புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண் பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது!

ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!

1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது!

சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. 'கடவுள் வந்திருந்தார்' நாடகம் பரபரப்பு பெற்றது!

இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, 'அம்மாவைப் பார்த்துக்கோ' என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது!

அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை!

பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்!

பங்களா வீடு, பென்ஸ் கார் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை சுஜாதா. தன் மூத்த மகன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் சுஜாதாவின் வருத்தமாக இருந்தது!

கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை!

சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா. செம கி ஜோக் அது

-vikatan

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites