Showing posts with label Nithiyanantha. Show all posts
Showing posts with label Nithiyanantha. Show all posts

புதுசு -கூட்டணி சேரும் கேரளா நடிகை -ரஞ்சிதா சுறு சுறு

14 May 2010 · 1 comments

குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நித்தியானந்தாவின் நீதிமன்ற காவலை வரும் 26-ம் தேதி வரை நீட்டிக்கிறேன். மேலும் சிறைக்குள் அவருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தையும் வழக்கம்போல் வழங்குமாறும் உத்தரவிடுகிறேன்...' -ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயலட்சுமி இப்படி உத்தரவிட... நித்தியானந்தாவின் நீதிமன்ற காவல் நீள்கிறது!

நித்தியானந்தாவின் விஷயங்களைக் கூர்ந்து கவனித்து வரும் பெங்களூருவைச் சேர்ந்த அவரது நெருக்கமான வழக்கறிஞர்கள் நம்மிடம்,

''நித்தியானந்தாவை கூடிய சீக்கிரம் விடுவித்து, அவரை மறுபடியும் பிடதி ஆசிரமத்தின் தலைவராக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய ஆசிரமத்தின் தலைவரான சதானந்தாவின் நோக்கம். அதற்கான வேலைகளில் முழு மூச்சாக அவர் இறங்கியிருக்கிறார். 1995-ம் வருஷத்துல நித்தியானந்தா, ராமகிருஷ்ணா மடத்துல இருந்தாரு. அந்த சமயத்துல அவரோட அறையில



தங்கியிருந்தவர், கோபால ராமகிருஷ்ணன். அவரை அண்மையில தேடிக் கண்டுபிடிச்சு, பிடதி ஆசிரமத்துக்கு அழைச்சிட்டு வந்திருக்காரு சதானந்தா. 'நித்தியானந்தா, ராஜசேகராக இருந்த காலத்துல எப்படியெல்லாம் இருந்தாரு...' என்பதை கோபாலராமகிருஷ்ணன் வாயாலேயே சொல்லவைத்து வீடியோ பதிவு செய்திருக்காரு. அதில், 'நானும் ராஜசேகரும் ராமகிருஷ்ணா மடத்துல கிச்சன் டிபார்ட்மென்ட்டை கவனிச்சிட்டு இருந்தோம்அவனைப்போல ஒரு சின்சியரான ஆளைப் பார்க்கவே முடியாது. கனிவு, பொறுமை, அறிவு ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவமாக இருந்தான். அவன்மேல இப்போ சொல்ற குற்றச்சாட்டுகள் எதுவும் நம்புற மாதிரியே இல்ல. பொய் நீண்ட நாளைக்கு உயிரோடு இருக்காது. என் நண்பன் ராஜசேகர் விரைவிலேயே குற்றமற்றவன்னு ஊரே சொல்லப் போகுது...' என்றெல்லாம் பேசியிருக்கிறாராம் கோபால ராமகிருஷ்ணன். இந்த வீடியோவும் அதிலுள்ள செய்திகளும் நித்தியானந்தாவுக்கு ஆதரவாக சில மீடியாக்களில் சீக்கிரம் வரப்போகுது. அதற்கான வேலைகளை சதானந்தா செஞ்சுட்டாரு.

கடந்த முறை நித்தியானந்தாவை கோர்ட்டுக்குக் கொண்டுவந்தபோது... அவர் சதானந்தாவிடம், 'பணத்தை பத்திக் கவலைப்பட வேண்டாம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல... சீக்கிரம் என்னை வெளியே கொண்டுவரும் வழியைப் பாருங்க...'ன்னு சொல்லியிருக்காரு. அதுக்குப் பிறகுதான் சதானந்தா அதிரடியாக பல வேலைகள்ல இறங்கினாரு.

பெங்களூருவுல நித்தியானந்தாவுக்காக ஆஜரான வழக்கறிஞர்களை மாத்திட்டு,டெல்லியில இருக்கிற பிரபலமான வழக்கறிஞர் நிதின் பிரதான் என்பவரை நியமிச்சுருக்காரு. அவர் ஆஜரானா, எந்த கேஸையும் தவிடு பொடியாக்கிடுவாருன்னு டெல்லி வழக்கறிஞர்கள் மத்தியில பேச்சு உண்டு. நித்தியானந்தாவை ஜெயில்ல சந்திச்சுப் பேசவும் அந்த லாயர் அனுமதி கேட்டிருக்காராம். அதுக்குப்பிறகு வழக்குல அதிரடி திருப்பங்கள் வரும். அதை நீங்களும் பார்க்கத்தான் போறீங்க.

நித்தியானந்தாவுக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில, அவர் ஆண்மை இல்லாதவர்னு சொல்லியிருப்பதாவும் ஒரு தகவல் பரவுது. அதை நித்தியானந்தா தரப்பு உறுதியாக மறுக்காத பட்சத்தில், இந்த கேஸ் அடிபட்டுரும். அந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை வாங்கும் முயற்சியில் நித்தியானந்தா தரப்பு தீவிரமா இறங்கியிருக்குனுகூட சொல்றாங்க..!'' என்கிறார்கள்.

ஆனால், வழக்கை விசாரிக்கும் கர்நாடக சி.ஐ.டி. டி.ஐ.ஜி-யான ஷரன் ரெட்டி நம்மிடம், ''நித்தியானந்தா வழக்கைப் பொறுத்தவரை எங்களுக்கு முக்கியமான சாட்சி நடிகை ரஞ்சிதாதான்! அந்தப் பொண்ணு இதுவரைக்கும் ஆஜராகல. அவங்களை கைதுசெய்து விசாரணை நடத்தவேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. ரஞ்சிதாவோட வழக்கறிஞரிடம் பேசியிருக்கோம். அவங்க ரஞ்சிதாவை வழக்கு விசாரணைக்கு அழைத்து வருவதாகவும், போதிய பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டிருக்காங்க. அதனால நம்பிக்கையோட இருக்கோம். வேற யாராவது நித்தியானந்தா மேல புகார் கொடுக்க நினைச்சாலும், எங்ககிட்ட வந்து புகார் கொடுக்கலாம். அவங்களைப்பற்றிய விவரங்களை ரகசியமா வெச்சிருப்போம். ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் உண்மையானதான்னு கண்டுபிடிக்க ஆசிரமத்துல இருந்து கைப்பற்றிய வீடியோ ஆதாரங்களை ஹைதராபாத்துக்கு அனுப்பியிருக்கோம்!'' என்றார்.

நித்தியானந்தா திடீரென தனது வழக்கறிஞரை மாற்றியதைப் போலவே ரஞ்சிதாவும் தனது வழக்கறிஞரை மாற்றியிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரான சுதா ராமலிங்கம், ரஞ்சிதாவுக்காக ஆஜராகப் போகிறாராம். கேரள முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சரான ஜோசப், விமானத்தில் தனது முன் ஸீட்டில் உட்கார்ந்திருந்த கேரளாவைச் சேர்ந்த டி.வி. நடிகையான லட்சுமி கோபகுமாரிடம் சில்மிஷம் செய்ததாக சில வருடங்களுக்கு முன்பு புகார் கிளம்பியது. அந்த வழக்கில் அமைச்சருக்கு எதிராக நடிகை லட்சுமி கோபகுமார் சார்பாக களமிறங்கியவர்தான் இந்த சுதா ராமலிங்கம். ரஞ்சிதாவும், லட்சுமி கோபகுமாரும் நெருங்கிய தோழிகளாம். அப்படித்தான் வக்கீல் மாற்றம் என்கிறார்கள்.

வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் பேசினோம். ''இந்த வழக்கு சம்பந்தமா நான் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. தேவைப்படும்போது நானே பேசுகிறேன்...'' என்று மட்டும் சொன்னார்.

''முடிந்தவரைக்கும் ரஞ்சிதாவை வெளியிலயே கொண்டுவராம இந்த வழக்கை முடிக்கிறதுக்கு எல்லா வகையிலும் முயற்சிகள் நடந்துட்டு இருக்கு. ரஞ்சிதாவோட வழக்கறிஞரும் அதற்கான வேலைகள்ல இறங்கியிருக்காங்க. நித்தியானந்தா விவகாரத்துல இருந்து தன்னை முழுமையா விடுவிச்சுக்கிட்டு, மறுபடியும் முழு நேர நடிகையாகவே களமிறங்க ரஞ்சிதா திட்டமிட்டிருக்காங்க. கேரளாவுல ஒரு டி.வி. சீரியல்ல நடிக்கிறதுக்கு லட்சுமிகோபகுமார் மூலமாகவே பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்காங்க...'' என்றனர், ரஞ்சிதாவை பற்றிய விவரமறிந்த சிலர்

vikatan

ரஞ்சிதா வாக்குமூலம் அளிப்பாரா? இல்லை கைதாவாரா?

02 May 2010 · 0 comments

ரஞ்சிதா வாக்குமூலம் அளிப்பாரா? இல்லை கைதாவாரா?



நித்யானந்தாவுடன் இருந்த நடிகை ரஞ்சிதாவிடம் விசாரித்தால் நித்யானந்தா பற்றிய மேலும் பல தகவல்களை திரட்டமுடியும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இதனால் ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த போலீசார் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் ரஞ்சிதா இருப்பிடத்தை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

ரஞ்சிதா தனக்கு உதவியாக பிரசாந்த் மந்திரத்தா என்ற வக்கீலை நியமித்துள்ளார். அவர் மூலம் ரஞ்சிதாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினார்கள். ஆனால் அதிலும் பலன் கிடைக்கவில்லை.

எனவே போலீசார் ரஞ்சிதாவின் வக்கீல் மூலம் ரஞ்சிதாவுக்கு 2 நோட்டீசுகளை அனுப்பி உள்ளனர். இ.மெயில் மூலம் அனுப்பப்பட்ட இந்த நோட்டீசில் ரஞ்சிதா மே 2-ந்தேதிக்குள் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தனர்.

அதன்படி அவர் ஆஜராகாவிட்டால் அவரை கைது செய்வதுடன் அவர் மீது பல்வேறு வழக்குகளையும் தொடர திட்டமிட்டு இருந்தனர்.

இதனால் பயந்துபோன ரஞ்சிதா போலீசாரிடம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ரஞ்சிதா வக்கீல் பிரசாந்த், ‘’ சி.ஐ.டி. போலீசார் அனுப்பிய நோட்டீசு எங்களுக்கு கிடைத்துள்ளது. போலீஸ் விசாரணைக்கு ரஞ்சிதா முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறார். போலீசார் முன்பு ஆஜர் ஆவதற்கும் அவர் தயாராக உள்ளார். ஆனால் எப்போது ஆஜராவார் என்பதை என்னால் சொல்ல முடியாது என்றார்.

இன்று மாலை அல்லது நாளைக்குள் ரஞ்சிதா போலீசார் முன்பு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நித்யானந்தா ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். அது நாளை விசாரணைக்கு வருகிறது. நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொள்ளதிட்டமிட்டு உள்ளனர். அதற்கு உரிய காரணங்களை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.

அதற்கு முன்பு ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்திவிட்டால் நித்யானந்தாவுக்கு எதிராக மேலும் பல ஆதாரங்கள் கிடைக்கும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் ஜாமீனுக்கு மறுப்பு தெரிவிக்க பல காரணங்கள் கிடைக்கலாம். எனவே ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே ரஞ்சிதாவிடம் விசாரணையை முடித்து விட முயற்சித்து வருகின்றனர்.

ரஞ்சிதா ஆஜராகாவிட்டால் உடனடியாக அவரை கைது செய்யவும் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் ரஞ்சிதா வாக்குமூலம் அளிப்பாரா? இல்லை கைதாவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க வீதிகளில் நித்யானந்தா- ரஞ்சிதா

நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியானதை தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இமாச்சல பிரதேசத்தில் அவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.

தற்போது அவர் நீதிமன்ற காவலில் ராமநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நித்யானந்தா பற்றி மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் ஆசிரமம் இருப்பதால் நித்யானந்தா அடிக்கடி அமெரிக்கா போய் வருவார். அவருடன் நடிகை ரஞ்சிதாவும் பலமுறை அமெரிக்காவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் ஆகஸ்டு மற்றும் அக்டோபர் மாதங்களில் நித்யானந்தா அமெரிக்கா சென்றபோது அவருடன் நடிகை ரஞ்சிதாவும் சென்று இருக்கிறார். இதுபற்றி அமெரிக்காவில் வசிக்கும் நித்யானந்தரின் பக்தர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கொலம்பஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், சீட்டல், ஒகலஹோமா, டல்லஸ், ஹவுஸ்டன் மற்றும் சான் ஜோஸ் ஆகிய நகரங்களுக்கு வரும்போது நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதாவும் வந்திருந்தார்.

குறிப்பாக கொலம்பஸ் கோவிலில் நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் நெருக்கமாக வந்தனர் என்று அமெரிக்காவை சேர்ந்த பக்தர் ஒருவர் கூறியுள்ளார். நித்யானந்தா தியான பீடத்தின் பயண ஆவணங்களை பார்த்தால் ரஞ்சிதாவும் நித்யானந்தாவுடன் அமெரிக்கா சென்றிருந்தார் என்பது தெரியவரும் என்று கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் நித்யானந்தாவின் யோகா பயணத்தின்போது, உடன் இருந்த ரஞ்சிதாவை காட்டி, இவரை நான் பிரம்மாச்சாரியார்களில் ஒருவராக தயார் செய்து வருகிறேன். அதனால் தான் ரஞ்சிதாவுக்காக அதிக நேரம் செலவு செய்கிறேன்’என்று அங்குள்ள தனது சீடர்களிடம் நித்யானந்தா கூறியுள்ளார்.

நன்றி நக்கீரன்

புதுசு-திடீர் அறிக்கையும், திடுக் பின்னணியும் நித்தியானந்த

01 May 2010 · 0 comments


'விசாரணை என்ற பேரில் எனது ருத்திராட்ச மாலையைப் பிடுங்கிட்டாங்க. ருத்திராட்சத்தை உருட்டாமல் என்னால் ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாது. அந்தப் படபடப்புலதான் எனக்கு நெஞ்சு வலியே வந்திடுச்சு. தயவுபண்ணி ருத்திராட்சத்தை திருப்பிக் கொடுங்க!'' - பெங்களூருவில் உள்ள ஜெயதேவா இதய நோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் நித்தியானந்தா இப்படிக் கெஞ்ச... ''இதயத் துடிப்பு சீராகத்தான் இருக்கிறது. எந்தப் பிரச்னையும் இல்லை!'' என்று புன்னகைத்தார்கள் டாக்டர்கள்.நித்தியானந்தா மறுபடியும் போலீஸ் கஸ்டடி யில்!

தகதக தங்கக் கடத்தல்!

கஸ்டடியில் நித்தியானந்தாவிடம் அதிரடி விசாரணை நடக்கிறது. அவர் மீது புகார் கொடுத்த லெனின் கருப்பனை பெங்களூருவுக்கு அழைத்து வந்து, ஆசிரமத்தின் கணக்கு வழக்குகளைத் துருவிய கர்நாடக சி.ஐ.டி. போலீஸார், அந்தக் குறிப்புகளுடன் நித்தியானந்தாவிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இதுவரைக்கும் நித்தியானந்தா ஒப்புதல் அளித்திருக்கும் உண்மைகளை வைத்து அவர் மீது மூன்றே மூன்று மோசடி வழக்குகளை மட்டுமே போட முடியுமாம். இதனால், நித்தியானந்தா அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போய் வந்த பயணங்களில் கண் பதித்த போலீஸ், அவர் மீது தங்கக் கடத்தல் வழக்கைப் பதிவுசெய்ய முடிவு எடுத்திருக்கிறதாம். அமெரிக்காவுக்கு அடிக்கடி போன நித்தியானந்தா, போகும்போது சாதாரண ருத்திராட்சம், செம்புக் காப்புகளை அணிந்திருந்ததாகவும், திரும்பி வரும்போதெல்லாம் அவை மொத்தமும் தங்கமாக மாறி இருந்ததையும் கடந்த ஜனவரி மாதமே மத்திய சுங்க வரித் துறை சந்தேகப்பட்டு கண்காணித்திருக்கிறது. இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, ''ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது. தங்கத்துக்கு ஆசைப்பட்டால்... என் பக்தர்களே கிலோ கணக்கில் கொட்டி இருப்பார்கள். அமெரிக்காவுக்குப் போய் நான் தங்கம் கடத்தி வந்ததாகச் சொல்றதைக் கேட்டால் சின்னக் குழந்தைகூட சிரிக்கும்!'' என கமென்ட் அடித்தாராம்.

இரவில் வருவேன்... ரகசியம் சொல்வேன்!

கடந்த ஜூ.வி-யில் குறிப் பிட்டது போல் கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் ரஞ்சிதாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது. விசாரணை அதிகாரிகள் இதுபற்றி, ''நித்தி யானந்தா, ரஞ்சிதாவின் போன் நம்பரை எங்களுக்குக் கொடுத்ததாக சில மீடியாக்களில் செய்தி வந்திருக் கின்றன. அது உண்மை இல்லை. போன் நம்பர் தொடங்கி ரஞ்சிதா குறித்த எந்த விவரங்களையும் நித்தியானந்தா தர மறுக்கிறார். அவர் தலைமறைவாக இருந்த காலத்தில் பேசிய போன் ஆதாரங்களை வைத்துத் தான் ரஞ்சிதாவின் எண்ணைக் கண்டுபிடித்தோம். ரஞ்சிதாவிடம் நாங்கள் பேசியபோது, ஆரம்பத்திலேயே அழத் தொடங்கிவிட்டார். 'நான் எந்தக் குற்றத்திலும் ஈடுபடலை. எல்லாமே என்னோட விதி. தயவுபண்ணி என்னை நோகடிக்காதீங்க'ன்னு சொன்னாங்க. நாங்க விளக்கிச் சொன்னதும் நீண்ட தயக்கத்துக்குப் பிறகே விசாரணைக்கு வருவதாகச் சொன்னாங்க. பகலில் வந்தால், மீடியாக்களை எதிர்கொள்ள முடியாதுன்னு... இரவு நேர விசாரணைக்கு வருவதாகச் சொல்லும் ரஞ்சிதா, எல்லா ரகசியங்களையும் உடைச்சுப் பேசத் தயாராகி விட்டார்!'' என்றார்கள்.

சி.டி-களும் செல்போன்களும்!

ஆசிரமத்தில் அள்ளி வந்த சி.டி-களையும் நூற்றுக்கணக்கான புகைப்படங்களையும் தனி டீம் அமைத்து விசாரித்துக்கொண்டு இருக் கிறது கர்நாடக போலீஸ். இமாசலில் தங்கி இருந்தபோது, அவர் பயன்படுத்திய ஏழு செல்போன்களைக் கைப்பற்றிய போலீஸ், அதில் இருக்கும் அத்தனை தொடர்பு எண்களையும் துருவிக்கொண்டு இருக்கிறது. ''ரஞ்சிதாவுடன் பல முறை நித்தியானந்தா தொடர்புகொண்டு பேசி இருக்கிறார். போலீஸ் விசாரணை எப்படி எல்லாம் விரியும் என்பதை முன்கூட்டியே ரஞ்சிதாவிடம் சொல்லி இருக்கும் நித்தியானந்தா, பெரிய அளவிலான பேரத்தையும் அவரிடம் நடத்தி இருக்கிறார். 'எனக்கு எதிராக ரஞ்சிதா ஒரு வார்த்தைகூட சொல்ல மாட்டார்!' என நித்தியானந்தா எங்களிடம் அடித்துச் சொல்வதற்கு இந்த பேரம்தான் காரணம்!'' என்கிறார்கள் அதிகாரிகள்.

கோபிகாவும்... ரஞ்சிதாவும்!

ரஞ்சிதாவை ரகசிய இடத்துக்கு அழைத்து விசாரிக்கத் தயாராகி வரும் கர்நாடகப் போலீஸ், நித்தியானந்தாவின் செயலாளர் நித்திய கோபிகாவையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப் போகிறது. ஆசிரமத்தின் சொத்து குறித்த விவரங்களை நித்ய கோபிகா விடமும், நித்தியானந்தாவின் செக்ஸ் சேட்டைகளைப்பற்றி ரஞ்சிதாவிடமும் துருவ நினைக்கிறது போலீஸ். ரஞ்சிதா உண்மைகளைச் சொல்ல ஒப்புக்கொண் டாலும், நித்திய கோபிகா விசாரணைக்கு உடன்பட மறுக்கிறாராம். ''சுவாமி தவறு செய்பவராக இருந்தால், நாங்கள் எப்படி இப்போதும் அவருடைய தயவில் வாழ்ந்து கொண்டு இருப்போம்?'' என போலீஸிடம் சீறும் நித்திய கோபிகா, சில ஆடிட்டர்கள் மூலமாக ஆசிரமக் கணக்குகளை துல்லியமாக ரெடி செய்துவைத்திருக்கிறாராம்.

ரஞ்சிதா எந்த அளவுக்கு உதவுவார் என்பது குறித்து கர்நாடக சி.ஐ.டி. பிரிவின் எஸ்.பி-யான யோகப்பாவிடம் பேசினோம். ''ரஞ்சிதா எந்த அளவுக்கு விவரங்களைச் சொல்வார் என்பது தெரியவில்லை. ஆனாலும், அவரிடம் விசாரணை நடத்த இப்போதே கேள்விகளை ரெடி பண்ணி விட்டோம்...'' என்று மட்டும் சொன்னார்.

திடீர் அறிக்கையும், திடுக் பின்னணியும்

கர்நாடக போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ''மீடியாக்களில் நித்தியானந்தாவுடன் ரஞ்சிதா இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகத் தொடங்கிய நிமிடத்திலிருந்து ரஞ்சிதாவின் இருப்பிடம் தெரியாமலே இருந்தது. அதே போல நித்தியானந்தாவும் தலைமறைவாகி விட்டார். போலீஸ் கஸ்டடிக்குள் நித்தியானந்தா வந்தவுடன், 'அடுத்து ரஞ்சிதாதான்' என்று முடிவானது. எப்படி யும் தன்னையும் போலீஸ் நெருங்கும் எனத் தெரிந்து கொண்ட ரஞ்சிதா சட்ட பூர்வமாக அதை சந்திக்க முடிவெடுத்தார். தான் சம்பந்தப்பட்ட காட்சிகள், தன்னைப் பற்றிய செய்திகள் வெளியானபோது அமைதி காத்த ரஞ்சிதா, டெல்லியில் இருக்கும் பிரபலமான வழக்கறிஞர்கள் மூலம் தன் தரப்பைச் சொல்ல முடிவெடுத்தார். வழக்கறிஞர்கள் மூலமாகவே ரஞ்சிதாவின் அறிக்கை மீடியாக்களுக்கு அனுப்பப்பட்டது. இதுவரை தன்னைப் பற்றி வந்த செய்திகள், தன் பேட்டியாக பிரசுரித்த விவரங்கள் எல்லாவற்றையும் தன் அறிக்கையில் மறுத்தார் ரஞ்சிதா. நித்தியானந்தாவுடன் ரஞ்சிதா இருப்பது போன்று வெளியான வீடியோவைப் பற்றி தன் அறிக்கையில் 'அது உண்மை என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப் படாதவை' என்று குறிப்பிட்டிருக்கிறார்!'' என்று சொல்லும் அந்த அதிகாரி, ''ரஞ்சிதாவின் அறிக்கைக்குப் பின்னால் முழுக்க முழுக்க நித்தியானந்தாவின் சகாக்கள்தான் இருக்கிறார்கள். காரணம், ஏற்கெனவே நித்தியானந்தா மீது பல வழக்குகள் பாயத் தயாராக இருக்கும் நிலையில் ரஞ்சிதா மூலமும் இடைஞ்சல் வரக்கூடாது என்பதுதான். இனி நாங்கள் நித்தியானந்தாவிடம் முழுக்க முழுக்க ரஞ்சிதா பற்றிய விவரங்களைத்தான் கறக்கப் போகிறோம்!'' என்றார்.

தமிழக போலீஸிடம் நித்தியானந்தா!!

மௌன விரதம், நெஞ்சு வலி என பல காரணங்களைச் சொல்லி நித்தியானந்தா கர்நாடக சி.ஐ.டி. போலீஸை காய வைக்கும் நிலையில், கஸ்டடி விசாரணையை நீட்டிக்கக் கூடாது என கோர்ட்டில் வலுவான வாதங்களை வைத்திருக்கிறது நித்தி யானந்தா தரப்பு. இதற்கிடையில், அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க தமிழக போலீஸும் தயாராகிவிட்டது. ''சாத்வீக முறையில் விசாரித்தால் நித்தியானந்தாவிடம் இருந்து எந்த உண்மையையும் வரவழைக்க முடியாது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் போலீஸை அணுகத் தயாராக இருக்கிறார்கள். அவர்களின் முன்னிலையில் வைத்து நித்தியானந்தாவை விசாரிக்க வேண்டும்!'' என கர்நாடகபோலீஸிடம் வற்புறுத்தி இருக்கிறது தமிழக போலீஸ்.

யாகமும் புத்தகமும்!

போலீஸ் கஸ்டடியில் விசாரணையில் சிக்கியுள்ள நித்தியானந் தாவைக் காப்பாற்றுவதற்காக பிடதி ஆசிரமத்தில் புதிய நிர்வாகியான சதானந்தா மூலம் இரண்டு நாட்களாக யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இப்போது ஆசிரமத்துக்கு ஆதரவாக இருக்கும் பக்தர்கள் இந்த யாகத்தில் பெரிய அளவில் கலந்து கொண்டு, குறிப்பிட்ட ஒரு மந்திரத்தை உரக்கச் சொல்கிறார்களாம். ஆசிரமத்தின் நிர்வாகிகள் உலகம் முழுக்க இருக்கும் பக்தர்களைத் தொடர்புகொண்டு, அதே மந்திரத்தைச் சொல்லி 'எத்தனை முறை உங்களால் அந்த மந்திரத்தைச் சொல்ல முடியுமோ... அத்தனை முறையும் சொல்லுங்கள். சுவாமியை சூழ்ந்திருக்கும் அத்தனை கஷ்டங்களையும் அகற்றி அவருக்கு சக்தியைக் கொடுக்க இந்த மந்திரத்தால் முடியும்!' எனச் சொல்கிறார்கள்.

இதற்கிடையில், நித்தியானந்தாவுக்கு ஆரம்ப காலம் தொட்டு நெருக்கமாக இருக்கும் இரண்டு நிர்வாகிகள், ஆசிரமத்தில் இருந்தபடியே ஒரு புத்தகத்தைத் தயாரிக்க... அந்தப் புத்தகத்தில், 'ஆசிரமம் எப்படி வளர்ந்தது... யார் யாரால் ஆசிரமத்துக்கு மிரட்டல் வந்தது?' எனப் பல விவரங்களை எழுதிக்கொண்டு இருக்கிறார்களாம். பல அரசியல் புள்ளிகளைச் சரிக்கட்டுவதற்காக, ஆசிரமம் எவ்வளவு பணத்தை இழந்தது என்பதையும் அதில் மறைக்காமல் சுட்டிக்காட்டப் போகிறார்களாம். 'எதற்கு இந்தப் புத்தக முயற்சி?' எனக் கேட்டதற்கு, ''இன்னொரு முறை இந்த ஆசிரமத்துக்குள் போலீஸ் அடி எடுத்துவைத்தால், அவர்களுக்கு முதலில் அந்த புத்தகத்தைத்தான் கொடுக்கப் போகிறோம். எதையும் நாங்கள் மறைக்கவில்லை என்பது அதன் பிறகுதான் அவர்களுக்குப் புரியும். விசாரணை என்கிற பெயரில் இங்கிருந்து போலீஸ் அள்ளிக்கொண்டு போன பணமும், பத்திரங்களும் கொஞ்சநஞ்சமில்லை!'' என்கிறார்களாம் சீறலாக!


நன்றி விகடன்

மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா

30 April 2010 · 0 comments

மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா

நித்யானந்தா ஆணா?பெண்ணா?என்று மருத்துவ பரிசோதனை செய்ய கர்நாடக சிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்துள்ளதால் அவர் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து அவர் கர்நாடக ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ராம்நகர் நீதிமன்றம் நித்யானந்தாவை மே-12 வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டது.

மகளிர் சிறையில் கைதிகள் இல்லாததால் நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நித்யானந்தா ஆணா பெண்ணா என்று சோதனை நடத்தவிருக்கும் நிலையில் அவர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது

ரஞ்சிதா இருக்கும் இடத்தை காட்டிக்கொடுத்த இன்டர்நெட் போன்

· 1 comments


நித்யானந்தா வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் நித்யானந்தா மூலம் ரஞ்சிதாவின் போன் நம்பரை வாங்கிய போலீசார் அவரை தொடர்பு கொண்டனர். அப்போது பேசிய அவர் தான் நேரில் வந்து நடந்த விவரங்களை கூறுகிறேன் என்றார்.

பகலில் விசாரணை மேற்கொண்டால் இடையூறுகள் இருக்கும். அதனால் என்னிடம் இரவில் ரகசிய அறையில் விசாரணை மேற்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

ஆனால் அவர் எப்போது வருவேன், தற்போது தங்கியுள்ள இடம் ஆகியவற்றை போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. கேரளாவில் இருக்கிறேன் என்று மட்டும் கூறினார்.

இதையடுத்து ரஞ்சிதா நேற்று இரவு பெங்களூர் வரலாம் என போலீசார் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை.

தொடர்ந்து ரஞ்சிதா பேசிய போன் நம்பரை வைத்து அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது ரஞ்சிதா பயன்படுத்திய போன் இன்டர்நெட் போன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இருந்து
பேசினால் பேசும் இடத்தை கண்டறிவது சிரமம்.


அப்படி இருந்தும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் இன்டர்நெட் இணைப்பு எங்கு வாங்கப்பட்டுள்ளது என்பது
கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் ரஞ்சிதா பேசிய இடம் திருவனந்தபுரம் என்று தெரியவந்துள்ளது என்றும், இதையடுத்து கர்நாடக போலீசார் திருவனந்தபுரத்திற்கு விரைந்துள்ளனர் என்றும், திருனவனந்தபுரத்தில் ரஞ்சிதா எங்கு இருக்கிறார் என ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தகவல் வருகின்றன.

நித்யானந்தாவுக்கு நெருக்கமான பெண் சீடரின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. ரஞ்சிதா அங்கிருக்கலாம் என்றும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர் என்றும் தகவல் வருகின்றன

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites