தரவிறக்கம் செய்து கொள்ள இங்க கிளிக்
part 1
part 2

கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை நடத்தினர்.அதில், கம்ப்யூட்டர், லேப்-டாப், ஐபாட் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு, நாளடைவில், தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிய வந்தது.கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள், மனித மூளையின் வழக்கமான செயல்பாடுகளை பாதிப்பதும் தெரிய வந்தது.மனித மூளை, காலை சூரிய வெளிச்சம் வந்தவுடன் இயங்க ஆரம்பித்து இரவு சூரிய ஒளி மங்கியவுடன் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும் வகையில் செயல்படுகிறது.இதை, மெலட்டோனின் என்ற ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது. இது அறிவியல் விந்தையாக கருதப்படுகிறது.ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீல நிற வெளிச்சம், மெலட்டோனின் ஹார்மோன் செயல்பாட்டை பாதித்து, தூக்கத்தை கெடுப்பதாக தெரிவிக்கின்றனர். மனிதனின் கண்கள், நீல நிறத்தை பகல் பொழுதாக எடுத்துக் கொள்ளும் தகவமைப்பை பெற்றுள்ளது என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.இரவில் நிம்மதியாக தூங்க, நல்ல புத்தகங்களை படிப்பது சிறந்த வழி. தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்க்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை கொண்டு மெலட்டோனின் ஹார்மோன் இரவில் தூக்கம் வருவதை தவிர்த்து, விழிப்புடன் இருக்க, மூளையை தூண்டும். இதனால், தூக்கம் வருவதில் நாளடைவில் சிக்கல் எழும் என, நார்த்வெஸ்ட் பல்கலைக் கழக மூளை அறிவியல் துறை பேராசிரியர் பில்லீஸ் சீ தெரிவித்துள்ளார்.
செல்போன் பயன்படுத்துவதால் மூளை புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தொடக்கத்தில் வசதியானவர்கள், தொழிலதிபர்கள் செல்போன் பயன்படுத்தினர். தற்போது இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைவரும் செல்போன் பயன்படுத்துகின்றனர். கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்கள், வகுப்பறைகளில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது. சில தனியார் நிறுவனங்கள் கூட, அலுவலகத்தில் செல்போன் பேச தடை விதித்துள்ளன.
இவற்றை மீறி, பல்கலைக்கழக, கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்துகின்றனர். வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்கு தெரியாமல் எஸ்.எம்.எஸ் அனுப்புகின்றனர். கார், பைக், பஸ்களில் போகும்போது, சாலைகளில் நடந்து செல்லும் போது, வீட்டில் இருக்கும்போது இரவு, பகல் பாராமல் மணிக்கணக்கில் செல்போனில் பேசுகின்றனர். நண்பர்கள் அருகே இருந்தால் கூட எஸ்.எம்.எஸ். மூலம் சாட்டிங் செய்யும் அளவுக்கு, செல்போனுக்கு இன்றைய இளைஞர்கள் அடிமையாகி விட்டனர்.சாலையில் நடக்கும்போது, வாகனத்தை ஓட்டும்போது செல்போனில் பேசினால் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. மேலும், அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடல் நிலை பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர். இதுகுறித்து காது, மூக்கு, தொண்டை சிகிச்சை டாக்டர்கள் கூறியதாவது:
ரேடியோ பிரீக்வன்சி (வானொலி அலைவரிசை) மூலம் செல்போன் செயல்படுகிறது. நமது உள் காது மற்றும் மூளை பகுதியும் அதே போன்ற அலைவரிசையில்தான் செயல்படுகின்றன. செல்போனை காதின் அருகில் வைத்து பேசுவதால், உள் காதின் செவித்திறன் கடுமையாக பாதிக்கிறது. இதுபோல் தொடர்ந்து பேசுபவர்களுக்கு முதலில் காதில் வலி ஏற்படும். இரைச்சல் உருவாகும், அதன்பின் காது கேட்கும் திறன் படிப்படியாக குறையும். இறுதியாக காது கேட்கும் திறன் முழுமையாக நின்றுவிடும்.
செல்போனில் தொடர்ந்து பேசுவதால், வெளி காது, நடு காது, உள் காது மற்றும் மூளையில் புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளன. மனநிலையும் பாதிக்கலாம். சில நேரங்களில் மயக்கம், தலை சுற்றல் போன்றவைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்த ஆராய்ச்சி தற்போது நடந்து வருகிறது. ஆனால் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் செல்போன் பேசுவதால் ஏற்படும் இந்த பாதிப்புகளை இதுவரை மறுக்கவில்லை.
செல்போன் பேசுவதால் பாதிக்கப்பட்டு காது வலி, காது சரியாக கேட்கவில்லை என்று தினமும் சராசரியாக 10 பேர் வருகின்றனர். இதில் இளைஞர்கள்தான் அதிகம். அவசர தேவைகளுக்கு மட்டும் செல்போனை பயன்படுத்தலாம். முடிந்த அளவு ஹெட்போன், புளுடூத் பயன்படுத்தி பேசலாம். இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்===================================================================

கம்ப்யூட்டர் -பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அடி வாங்கிச் செத்த டைனோசர்!
மயிலுக்குத் தோகை, தவளைக்கு விரியும் கழுத்துப் பை என ஆண் விலங்குகள் அனைத்துக்கும் தங்களை விளம்பரம் செய்துகொள்ளும் ஸ்டைல் உண்டு. தன்னைச் சரியாக விற்கும் ஆண் மட்டும்தான் பெண்ணின் உறவைப் பெற முடியும். இனத்தையும் பெருக்க முடியும்!சுமார் எட்டுக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, டைனோசர்கள் இனப் பெருக்கக் காலத்தில் தன்னை விளம்பரப்படுத்த, முதுகுப் பகுதியில் இருக்கும் பட்டைகளில் மிக அதிக ரத்தத்தைச் செலுத்தி அவற்றைச் சிவப்பு நிறமாக மாற்றுமாம். அப்படிச் செய்யக் கற்றுக்கொள்ளாத சில ஆண் டைனோசர்கள், பெண் டைனோசர்களிடம் அடி வாங்கியே செத்துப்போயினவாம். மனித இனத்தில் மட்டும்தான் பெண்கள் விளம்பரப் பொருளாக இருக்கிறார்கள்.கிரேக்க காலத்தில் விலை மாதுக்கள் தங்களை விளம் பரப்படுத்த அனுமதி இருந்தது. அம்புக் குறி பொறிக்கப்பட்ட காலணிகளில் சிவப்பு மை பதித்த விலை மாதர்கள் கிரேக்க வீதிகளில் வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருப்பார்களாம். அவர்கள் நகரும்போது செருப்புத் தடத்தின் சிவப்பு மையைப் பார்த்து வாடிக்கையாளர்கள் பின் தொடர்ந்ததாக வரலாறு!
--------------------------------------------------------------------------
நீங்க கோலா ஆளா?
'கோகோ கோலா, பெப்சி' - விளம்பர உலகின் தவிர்க்க இயலாத பாடங்கள். 30 பைசா செலவில் ஒரு பானத்தைத் தயாரித்து ஏழு ரூபாய்க்கு விளம்பரம் செய்து 10 ரூபாய்க்கு விற்கும் விற்பனைத் தந்திரத்தை உலகுக்குக் கற்றுத் தந்தது இந்த கோலாக்கள்தான்.1890-களில் இருந்தே விளம்பரங்கள் மூலமாக மக்களை வசியப் படுத்தும் ஆராய்ச்சியைச் செய்து வருகின்றன கோலா நிறுவனங்கள். இவர்களின் முக்கியமான விளம்பர உத்தி 'பாலின ஈர்ப்பு'! பெண்ணின் உடல் போன்ற வடிவத்திலேயே கோலா பாட்டில்கள் உருவாக்கப் படுகின்றன. ஐரோப்பாவில் விற்கும் கோலா பாட்டில் நீண்டு மெலிந்ததாகவும், இந்திய பாட்டில்கள் அதைவிடக் கொஞ்சம் உயரம் குறைவானதாகவும், சீன கோலா பாட்டில்கள் குட்டையாகவும் இருக்கும்! தவிர, நட்சத்திரங்கள் மீதான கவர்ச்சி, தேசியஉணர்ச்சி போன்றவையும் இவர்களுக்கு விளம்பர ஆயுதங்களே. இந்திய கிரிக்கெட் டீமின் டி-ஷர்ட் கலர் புளூ. உடனே, 'புளூ பெப்சி' வந்தது. சீனாவில் ஒலிம்பிக்... அதனால் 'சிவப்பு கோக்'
--------------------------------------------------------------------------------
மனசே மந்திரம்... உடலே விளம்பரம்தேர்தல் சமயத்தில் தலைமுடியை இரட்டை இலைபோல வெட்டிக்கொள்ளும் தொண்டர்கள் நம் ஊரில் உண்டு. உலகம் முழுக்க உடம்பில் விளம்பரம் செய்து கொள்வது ஒரு வியாபாரம். இவர்களுக்கு Human Billboards என்று பெயர்.
19-ம் நூற்றாண்டில் லண்டனில் விளம்பரப் பலகைகளுக்கு வரி விதிக்க ஆரம்பித்தனர். இட நெருக்கடியும், போட்டியும் சேர்ந்து கொள்ள மாற்றுவழியாக உருவானதுதான் மனித விளம்பரப் பலகைகள். சாண்ட்விச் கடைகள் தங்கள் விளம்பரங்களைச் சிலரின் கழுத்தில் முன்னும் பின்னுமாகத் தொங்க விட்டுச் சுற்றவிட்டன. (பிராண்ட் அம்பாஸடர்?!). இதை எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் 'ஒரு துண்டு மனித இறைச்சி இரண்டு விளம்பரப் பலகைகளுக்கு நடுவே மாட்டியிருக்கிறது' என எழுதினார். இது படிப்படியாக வளர்ந்து, பணம் கொட்டும் பிசினஸ் ஆகிவிட்டது. 2003-ம் ஆண்டு ஜிம் நெல்சன் என்ற 22 வயது இளைஞர், தன் பின் மண்டையை ஒரு இணைய தள நிறுவன விளம்பரத்துக்கு 7,000 டாலருக்காக விற்றார். அடுத்த ஆறு மாதங்களில் இந்த விளம்பரம் மூலமாக 500 புதிய வாடிக்கையாளர்கள் அந்தத் தளத்துக்குக் கிடைத் தனர். 2005-ல் ஆண்ட்ரீவ் ஃபிச்சர் என்பவர் தன் நெற்றியை eBay நிறுவன விளம்பரத்துக்கு விற்றார். அதற்கு அவர் பெற்ற சம்பளம் 37,375 டாலர்!
------------------------------------------------------------------------------------
மின்னலைப் பிடித்து, மேகத்தைச் சமைத்து விளம்பரம் செய்!
விண்ணில் ஏறி விளம்பரம் செய்யும் வித்தை இது. ஸ்கை ரைட்டிங் (Sky writing), ஸ்கை டைப்பிங் (Sky Typing) என்பார்கள்.
ஸ்கை ரைட்டிங் முறையில் சிறிய விமானம் ஒன்றை விண்ணில் செலுத்தி அதன் எக்ஸாஸ்டில் இருந்து சிறப்பு வகையான புகையை வெளிவரச் செய்வார்கள். அழுத் தம் ஊட்டப்பட்ட கன்டெயினரை எக்ஸாஸ்ட்டுடன் இணைத்து அதற்குள் கானோபஸ் 13 என்ற எண்ணெய் அல்லது பாரஃபின் எண்ணெயை அடைத்து, இந்த அடர்த்தியான வெண் புகையை வரவழைப்பார்கள். விமானத்தைக் குறிப்பிட்ட முறையில் பறக்கச் செய்யும் போது வெளிவரும் புகையானது விளம்பர வாசகங்களை வானில் உருவாக்கும். கீழே இருந்து பார்க்க ஜோராக இருக்கும். சில பணக் காரக் காதலர்கள் தங்களின் காதலைக்கூட இப்படிச் சொல் வார்களாம். நியூயார்க்கில் இதற்கு என்றே இயங்கும் ஒரு நிறுவனம் மாதத்துக்குக் கிட்டத்தட்ட 50 ஸ்கை ரைட்டிங் காதல் வாசகங் களை வானில் எழுது கிறது. காற்று குறைவான, மேகங்கள் இல்லாத தெளிவான வானிலை இதற்கு அவசியம்.கிட்டத்தட்ட 10 ஆயிரம் அடி முதல் 17ஆயிரம் அடி உயரத்தில் இந்த ஸ்கை ரைட்டிங் விளம்பரங்கள் எழுதப்படும். ஒரு விமா னம் மூலம் ஆறு எழுத்துக்கள் வரை எழுதலாம். ஓர் எழுத்தை உருவாக்க ஆறேழு விநாடிகள் ஆகும். அதிக எழுத்துக்கள் கொண்ட நீளமான வாசகங்கள் என்றால் ஏழெட்டு விமானங் களைப் பயன்படுத்தி, பல திசை களில் விமானங்களைச் செலுத்தி மிகுந்த திறமையுடன் வாசகங்களை எழுதுவார்கள். அதிகபட்சம் 20 நிமிடங்கள் வரை இந்த எழுத் துக்கள் வானில் இருக்கச் சாத்தி யம் உண்டு. காற்று பலமாக வீசி னால் கலைந்துவிடும். கிட்டத்தட்ட 30 மைல் சுற்றளவில் உள்ளவர்களால் இந்த விளம்பர வாசகங்களைப் படிக்க முடியும். ஸ்கை ரைட்டிங், விமானிகளின் சாகச விளையாட்டு. 1922-ம் ஆண்டு முதல் ஸ்கை ரைட்டிங் என்பது விளம்பரங்களிலும் வந்தது. பெப்ஸியும் ஸ்கை ரைட்டிங் மூலம் விளம்பரம் செய்தது. நம் ஊர் சர்க்கஸ்களில் சர்ச் லைட்டுகள் மூலம் மக்களை ஈர்ப்பதும் ஒரு வகையான வான் வழி விளம்பரம் தான்!
-------------------------------------------------------------------------------
ஒரு படம்... ஒரு பாடம்!
ஒரு படம் அல்லது சில வார்த்தைகள் மூலம் விளம்பரம் செய்வது ரொம்பவே சவாலான விஷயம். அந்தச் சவாலில் சாதித்த சில விளம்பரங்கள்இவை...
புயலில் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கிடக்கும் ஊரில் எதுவும் மிஞ்சவில்லை. நான்கு சக்கரங்கள் மட்டுமே எஞ்சி நிற்கினறன. ஜே.கே. டயர்ஸின் விளம்பரம் இது.
'ஷாரூக்கான் ஒரு நிமிடத்துக்கு 247 ரூபாய் சம்பாதிக்கிறார். அமிதாப் 361 ரூபாய். சச்சின் 1,163 ரூபாய். இந்திரா நூயி (பெப்ஸி நிறுவன அதிகாரி) நிமிடத்துக்கு 2,911 ரூபாய் சம்பாதிக்கிறார்' என்பதோடு அந்த லிஸ்ட் முடிகிறது. கீழே 'பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்காதீர்கள்' என்ற விளம்பர வாசகம்.
டூ மினிட் மேகி நூடுல்ஸின் சமீபத்திய விளம்பரம் இது. 'கடந்த 20 வருடங்களாக நாங்கள் உங்களின் இரண்டு நிமிடங்களை மட்டும்தான் கேட்கிறோம்!' என்கிற ஸ்லோகனுக்குக் கீழே மேகி நூடுல்ஸின் லோகோ. கெஞ்சல் தொனியில் இருக்கும் இந்த விளம்பரம் எக்கச்சக்க ஹிட்.
காரின் ஜன்னல் வழியே பார்த்தால் பச்சைப் பசேல் என்ற நிலம் இருக்கும். அதன் மிரர் வியூவில் (பின்புறம் பார்க்கும் கண்ணாடி) வறண்ட, கரடுமுரடான நிலம் இருக்கும். கண்ணாடியில் 'objects in the mirror are closer than they appear' என்கிற வாசகம் இருக்கும். 'மரத்தைக் காப்பாற்றுங்கள்... உலகத்தைக் காப்பாற்றுங்கள்' என்பது விளம்பர வரிகள்.
v s on என்கிற வார்த்தைக்குக் கீழே 'கண்தானம் செய்யுங்கள்' என்கிற அறிவிப்பு. ஏதாவது புரிகிறதா? vision என்கிற எழுத்தில் இருந்து இரண்டு 'ஐ'யை எடுத்துத் தானம் செய்யச் சொல்கிறார்கள். எவ்வளவு பெரிய விஷயத்தைச் சிம்பிளாகச் சொல்லிவிட்டார்கள்?
பரமபத விளையாட்டில் ஏணிகள் மட்டுமே இருக்கின்றன. பாம்புகள் ஒன்றுகூட இல்லை. அனிமல் பிளானெட் சேனலின் உலக அளவிலான பாம்புகள் பற்றிய ஷோவுக்கான விளம்பரம் இது. (பாம்புகள் எல்லாம் ஷோவுக்குச் சென்றுவிட்டனவாம்!) ஒற்றை மனிதக் காலுக்கு அருகிலேயே ஒரு செயற்கைக் கால். 'காரைப்போல மனிதர்களுக்கு ஒரிஜினல் ஸ்பேர்பார்ட்ஸ் கிடைப்பது இல்லை' என்பது விளம்பர வாசகம். 'குடித்துவிட்டு வண்டி ஓட்டாதீர்கள்' என்கிற பி.எம்.டபிள்யூ காரின் விளம்பரம் இது.
------------------------------------------------------------------------
வாழ்க்கையே ஒரு விளம்பர இடைவேளைதான்!
'நான் என்ன சொன்னேன்... நீ என்ன செஞ்சே?' என்று புலம்பும் கவுண்டரைப்போல ஆகிவிடுகின்றன பல விளம்பரங்களின் நிலைமை. இவர்கள் ஓர் அர்த்தத்தில் விளம்பரம் எடுக்க, மக்கள் அதை வேறு மாதிரி புரிந்துகொள்கின்றனர்.
ஆல் அவுட் கொசு மருந்தை வாங்கி வைத்துவிட்டு அது எம்பி நாக்கை நீட்டிக் கொசுவைப் பிடிக்கும் என்று காத்திருந்தவர்கள் பலர். 1990 வரையிலும் ஆணுறை உபயோகம்பற்றி மக்களுக்கு விளக்க இந்தியாவில் சமூக சேவகர்களே கிடைக்கவில்லை. பீஹார் பகுதிகளில் 'விளக்கியே ஆக வேண்டும்' என்று அரசால் அனுப் பப்பட்டவர்கள் கட்டை விரலில் ஆணுறையை மாட்டிக்கொண்டு 'இப்படி அணிந்துகொண்டால் எய்ட்ஸ் வராது' என்றார்கள். விளைவு, மக்களும் ஆளுக்கு ஒன்றை வாங்கி கட்டை விரலில் மாட்டிக்கொண்டார்கள்!
மின் விளக்குகள் இந்தியாவில் பிரபலமாகாத நிலையில் பிரிட்டன் நிறுவனம் ஒன்று கண்ணாடி பொருத்தப்பட்ட சிம்னி விளக்கு ஒன்றை அறிமுகப்படுத்தியது. 'சாதாரண விளக்கு காற்றில் அணைந்துவிடும். இது புயலில்கூட (ஹரிகேன்) அணையாது' என்று அவர்கள் ஆங்கிலத்தில் விளம்பரம் செய்ய... நாம் அதை இன்னமும் 'ஹரிகேன் லைட்' என்றே அழைக்கிறோம். போட்டோ காப்பியரை ஜெராக்ஸ் என்றும்,
அடிசிவ் பேன்டேஜ் என்பதை பேன்ட் -எய்டு என்றும், பெட்ரோலியம்ஜெல் லியை வாசலின் என்றும், வேக்குவம் க்ளீனரை ஹோவர் என்றும் அழைக்கும் அளவுக்கு விளம்பரங்களின் தாக்கம் மக்களின் மனங்களில் பதியவைக்கப்பட்டுள்ளது.
ரேடியோக்கள் வந்த புதிதில் விளம்பரங்கள் அதிகபட்சம் மூன்று நிமிடங்களில் முடிந்துவிடும். ஆனால் இன்று, 18 நிமிடங்கள் வரை நீள்கின்றன. 'நமது மூளையில் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் மூவாயிரம் மார்க்கெட்டிங் செய்திகள் விளம்பரங்கள் மூலமாக நுழைகின்றன. சராசரியாக ஒருவர் தன் வாழ்நாளில் மூன்று வருடங்கள் விளம்பரங்கள் பார்ப்பதிலேயே செலவழிக்கிறார்' என்கிறார் பிரபல விளம்பர விமர்சகர் கல்லே லாசன்!
--------------------------------------------------------------------------
கார் வாங்கினால்தான் கெளரவமா?
விளம்பரங்கள் பல நூற்றாண்டு காலமாக இருந்தாலும், தொழில் புரட்சிக்குப் பின்னர்தான் இத்தனை முன்னேற்றம். தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பிறகு இந்த முன்னேற்றம் பல மடங்கு அதிகரித்தது.
இந்தியாவில் டி.வி. விளம்பரங் களைக் கட்டுப்படுத்திக் கண்காணிக்கும் அமைப்பு, அட்வர்டைஸிங் ஸ்டாண்டர்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா. விதிமுறைகளுக்கு எதிராக மற்றும் தவறான, நேர்மையற்ற, ஆபாசமான, சட்டத்துக்குப் புறம்பான, பாதுகாப்பற்ற செயல் முறைகளுக்கு வழிவகுக்கக்கூடிய விளம்பரங்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும் உரிமை இவர்களுக்கு உண்டு. சமீபத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் தொடர்பான விளம்பரங்களின் விதிமுறைகளைக் கடுமையாக்கி உள்ளனர். இதன்படி, குறிப்பிட்ட பொருளைச் சாப்பிட்டால் புத்திக்கூர்மை அதிகரிக்கும், உடல் திறன் அதிகரிக்கும் என்ற விளம்பர வாசகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இந்த வாசகங்களைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கான உணவு மற்றும் பானங்கள் தொடர்பான விளம்பரங்களில் வரும் வாசகங்கள், அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் இருக்க வேண்டும். விளம்பரத்தில் காட்டுவதற்கும் உண்மைக்கும் எவ்வித வித்தியாசமும் இருக்கக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் எல்லாம் ஓ.கே. ஆனால், இவை பின்பற்றப்படுகின்றனவா?
பணத் தேவை இல்லாதபோது, உங்களிடம் 100 ரூபாயை திடீரெனக் கொடுத்து செலவு செய்யச் சொன்னால், அதில் 50 ரூபாயை உங்கள் மனதில் ஓடும் விளம்பரங்களின்படிதான் நீங்கள் செலவு செய்வீர்கள். அதுதான் விளம்பரங்களின் வெற்றி. கறுப்பான பெண்ணை ஆண்களுக்குப் பிடிக்காது, பைக் இல்லாத பையனைப் பெண்களுக்குப் பிடிக்காது, கார் வாங்கினால்தான் குடும்பத்துக்குக் கௌரவம் போன்ற கருத்துக்கள் யாருடைய வெற்றி... யாருடைய தோல்வி?
பக்கத்துத் தெருவில் இருக்கும் கடைக்குச் சென்று பால் பாக்கெட் வாங்கி வருவதில் ஆரம்பித்துகோடி ரூபாயில் வீடு வாங்குவது வரை நம் அனைத்துச் செயல்பாடுகளிலும் ரிஸ்க் இருக்கிறது. ரிஸ்க் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. ரிஸ்க் என்பது அடிப்படையில் மோசமான விஷயமும் அல்ல. ஒருவர் ரிஸ்க் எடுக்கத் தயங்குகிறார் எனில் அவர் அருமையான வாய்ப்புகளைத் தவறவிடுகிறார் என்றே அர்த்தம். இந்த உண்மை பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதற்கும் நூற்றுக்கு நூறு சதம் பொருந்தும்.
பங்குச் சந்தையில் நாலு காசு பார்க்க நீங்கள் ரிஸ்க் எடுக்கத் தயாரா? உங்கள் பதில் எஸ் எனில், உங்களுக்கு என் பாராட்டுகள். வாருங்கள், ரிஸ்க் எடுப்போம்.
ஆனால், நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்வது புத்திசாலித்தனமாகாது. அழகான குளத்தைப் பார்த்தவுடன் அதில் குதித்துவிடக்கூடாது. இந்தக் குளம் எத்தனை ஆழமானது? இந்தத் தண்ணீர் நம் உடம்புக்கு ஒன்றும் செய்யாதா? இதில் முதலை ஏதாவது இருக்குமோ? தண்ணீரில் குதித்த பிறகு நமக்கு ஏதாவது பிரச்னை எனில் காப்பாற்ற பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா? அவர்களுக்கு நீச்சல் தெரியுமா? இப்படி அதில் இருக்கும் அத்தனை ரிஸ்க் பற்றியும் நாம் அலசி ஆராய வேண்டும். அப்போதுதான் எந்தப் பிரச்னை வந்தாலும் அதைச் சமாளிக்கும் தெளிவு நமக்குள் இருக்கும்.
பங்குச் சந்தையில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி வருமானம் பார்க்க நினைக்கிறவர்கள் ரிஸ்க் எடுக்கும்போது பின்வரும் 10 கட்டளைகளை அவசியம் கவனித்தாக வேண்டும்.
வயது!
ஒருவரின் வயதுக்கு ஏற்ற முதலீடுகளை மேற்கொள்வது முதலீட்டின் ஆதாரமான உண்மை. ஒரு மனிதனின் வயது என்பது உண்மையில் அவன் உடல் மற்றும் மனநலனைப் பொறுத்ததாக இருக்கிறது. சிலர் அறுபது வயதிலும் திடகாத்திரமாக இருக்கலாம். சிலர் நாற்பது வயதிலேயே தளர்ந்து போகலாம். தாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை உணர்ந்தே இவர்கள் எவ்வளவு ரிஸ்க் எடுப்பது என முடிவு செய்ய வேண்டும். ஆனால் ஓய்வுக் காலத்தை நெருங்கி கொண்டிருப்பவர்கள், உத்தரவாதமான வருமானத் திட்டங்களில் கவனம் செலுத்துவதே நல்லது. அவர்கள் ரிஸ்க் உள்ள பங்குகளை குறைத்துக் கொள்வது அவசியம்.
நிதிநிலை
ஒருவரின் முதலீடு மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் அவருடைய தற்போதைய வருமானம் மற்றும் சொத்து ஆகியவற்றின் அடிப்படையில்தான் அமைக்கப் படவேண்டும்.
குடும்பம்!
முதலீட்டாளரின் குடும்ப நிலையையும் கவனத்தில் கொள்வது அவசியம். ஒருவர் திருமணம் ஆகாத தனிநபர் அல்லது அவரைச் சார்ந்து யாரும் இல்லை என்கிற போது வயதைப் பற்றி கவலைப்படாமல் ரிஸ்க் எடுக்கலாம். அதே சமயம் அவரைச் சார்ந்த நபர்கள் இருந்தால் அவர்களுக்கும் இந்த 10 கட்டளைகளைப் பொருத்திப் பார்க்கவேண்டும்.
நிதித் தேவை
வாழ்க்கையின் பல்வேறு கால கட்டங்களின் நிதி தேவையை ஈடு செய்யும் வகையில் முதலீடு அமைந்திருக்கவேண்டும். அதாவது கல்வி, வேலை, திருமணம், சொந்த வீடு, மருத்துவம், ஓய்வுகால தேவைகள், பிள்ளைகளின் கல்வி, திருமணம், போன்றவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
உணர்ச்சி வசப்படுதல்
எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள், இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் பங்கு முதலீட்டிலிருந்து விலகி நிற்பதே நல்லது. பங்குச் சந்தை சரிவுகளை இவர்களால் தாங்கிக் கொள்ளமுடியாது. இதனால் இவர்கள் ரிஸ்க் குறைவான முதலீட்டில்தான் கவனம் செலுத்தவேண்டும்.
ரிஸ்க் எடுக்கும் திறன்
இத்திறன் ஒருவரின் மனம் மற்றும் உடல் ரீதியாக எந்த அளவுக்கு இழப்பைத் தாங்கிக் கொண்டு மறுபடியும் முதலீட்டிற்கு வருகிறார் என்பதாகும். இந்த ரிஸ்க் எடுக்கும் திறனின் அடிப்படையானது ஒருவர் அவருடைய எல்லா வழக்கமான செலவுகளைத் தாண்டி எவ்வளவு பணம் ஒதுக்கமுடியும் என்பதைப் பொறுத்திருக்கிறது.
ரிஸ்க் க்ஷிஷி ரிவார்டு
ஒரு முதலீட்டில் உள்ள ரிஸ்க் மற்றும் அதனால் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றைக் கணக்கிட்டு, கிடைக்கும் ரிவார்டு எடுக்கும் ரிஸ்க்குக்கு ஏற்றதுதானா என்று பார்க்கவேண்டும். இதை எல்லா முதலீட்டு வகைகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
கடன்
எந்த ஒரு காலக் கட்டத்திலும் கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கூடாது. சந்தையில் சரிவு ஏற்பட்டால் கடன் மற்றும் அதற்கான வட்டியைத் தவிர பங்கின் விலையில் ஏற்பட்ட இழப்பும் சேர்ந்து ஒருவரை மேலும் கடன்காரராக ஆக்கிவிடும்.
பல தரப்பட்ட பங்கு!
எந்த வயதாக இருந்தாலும் போர்ட்ஃபோலியோ என்பது டைவர்சிஃபைடாக இருப்பது அவசியம். அதில், பங்குகள், ஃபண்ட்கள், இ.டி.எஃப், தங்கம், வெள்ளி, வங்கி டெபாசிட்கள் என எல்லாமே கலவையாக இருக்க வேண்டும். போர்ட்ஃபோலியோவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் பங்குகளில் வயதுக்கு ஏற்ப முதலீடு அமைய வேண்டும்.
அதிகக் கவனம் தேவை!
பங்குகளை வாங்கும் நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதிக லாபம் வேண்டுமென்றால் ரிஸ்க் எடுத்துதான் ஆகவேண்டும். வருமானத்தைக் கவனத்தில் கொள்வதைவிட ரிஸ்க் மேலாண்மையை பற்றித் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
இப்போது நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடிவெடுத்துவிட்டால் முக்கியமாக உங்கள் வயதுக்கேற்ப பங்குகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
ஃபார்முலா
பல்வேறு வயதினர் பங்குகளில் எந்த அளவுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்குப் பொதுவான ஃபார்முலா ஒன்று இருக்கிறது.
பங்கு முதலீடு சதவிகிதம் = 100 - X
இங்கு X என்பது முதலீட்டாளரின் வயதைக் குறிக்கும். உதாரணத்துக்கு, 25 வயதுள்ள ஒருவர் அவரின் முதலீட்டுத் தொகையில் 75% (100-25) பங்குகளில் முதலீடு செய்யலாம். இதுவே அவரின் வயது 35 ஆக இருந்தால் 65% (100-35) தொகையைப் பங்குகளில் முதலீடு செய்யலாம். இது சுமார் 5% முன்பின் இருந்தால் தவறில்லை.
பங்குச் சந்தையைப் பொறுத்தவரை நீங்கள் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயாரோ, அந்த அளவுக்கு லாபம் பார்க்கலாம். எந்த வயதுக்காரர்கள், எது மாதிரியான பங்குகளில் முதலீடு செய்யலாம் என்கிற பட்டியல் இதோ:
vikatan

எப்போது, எப்படி ஆரம்பித்தன விளம்பரங்கள்?
'மனிதன் தனக்குத் தேவையானதை மட்டும் உற்பத்தி செய்தபோது விளம் பரம் தேவைப்படவில்லை. தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்துதபோதுதான் விளம்பரம் பிறந்தது' என்கின்றனர் ஆய்வாளர்கள். முதன்முதலில் பாபிரஸ் இலைகள் மூலம் சுவரில் எழுதி விற்ப னையை மக்களிடம் விளம்பரப்படுத் தியவர்கள் எகிப்தியர் கள். பின்னர், வீடுகளுக்கு முன்சென்று கூவுவது, முச்சந்தியில் நின்று கத்துவது என்று விளம்பரம் படிப்படியாக வளர்ந்தது.
அப்போது படித்தவர் களின் எண்ணிக்கை சொற்பமாக இருந்ததால் வியாபாரிகள் தங்கள் பொருட்களை ஓவிய மாக வரைந்து விளம் பரங்கள் செய்தார்கள். அச்சு இயந்திரங்கள் தோன்றியபோது, விளம்பரங்கள் வேறு வடிவம் பெற்றன. 17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் பத்திரிகைகளில் முதல் முறையாக மருந்து, மாத்திரைகள் பற்றிய விளம்பரங்கள் இடம்பிடித்தன.
ஜூன் 1836-ல் பிரெஞ்சுப் பத்திரிகையான La Presse முதன் முதலாக விளம்பரங்களுக்குக் கட்டணம் வசூலித்தது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரும்பாலான வீடுகளில் பெண்கள்தான் முடிவு எடுத்தார்கள். எனவே, பெண்களைக் குறி வைத்தே வீட்டு உபயோகப் பொருட்களை விளம்பரம் செய்தார்கள். 'அதையும் பெண் களைவைத்தே விளம்பரம் செய்யலாமே?' என்று நினைத்தபோதுதான் 'விளம்பர மாடல்கள்' என்றொரு புதிய இனம் உருவானது. ஒரு குளியல் சோப் விளம்பரம்தான் பெண் மாடலைவைத்து எடுக்கப்பட்ட முதல் விளம்பரம். 'நீங்கள் தொட விரும்பும் சருமம்'(The skin you love to touch) என்பதுதான் விளம்பர உலகில் எழுதப்பட்ட முதல் ஸ்லோகன்.
1920-களில் ரேடியோ புழக்கத்துக்கு வந்தவுடன் விளம்பர உலகம் விரிவு அடைந்தது. 1950-களில் டுமான்ட் டெலி விஷன் நெட்வொர்க் என்ற தொலைக் காட்சி நிலையம் முதல் முறையாக விளம் பரங்களை ஒளிபரப்பியது. 1960-களில் என்ன செய்தியோ, அதை மட்டுமே விளம்பரம் என்று சொல்லி வந்தனர். அதற்கடுத்துதான் 'கிரியேட்டிவிட்டி' முக்கிய அம்சம் ஆனது. இன்று எல்லாமே விளம்பரமயம். தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளத் தெரிந்தவர்கள் மட்டுமே விலைபோகிறார்கள். இல்லை என்றால், செல்லாக் காசுதான்!
------------------------------------------------------------------
புள்ளி ராஜாவிற்கு எய்ட்ஸ் வருமா?வியாபாரத்தைப் பெருக்குவதற்கு மட்டும் அல்ல... மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் விளம்பரங்கள் தேவை. சமூகத்துக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்திய சில விளம்பரங்கள் இவை.1980-களில் 'Just Say No' என்கிற வார்த்தை அமெரிக்காவில் பட்டிதொட்டி எல்லாம் ஒட்டப்பட்டது. அப்போது நிறைய இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருந்தார்கள். 'சக நண்பர்கள் போதைப் பழக்கத்தை அறிமுகப்படுத்தும்போது இந்த மந்திரச் சொல்லை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்' என்று விளம்பரப் படுத்தியதில் பலர் பாதை மாறாமல் தப்பித்தார் கள்.
எய்ட்ஸ் எமனாகப் பரவிய நேரத்தில் மும்பையில் 'பல்பீர் பாஷாவுக்கு எய்ட்ஸ் வருமா?' என்ற விளம் பரம் கலக்கி எடுத்தது. அதுவே, தமிழ்நாட்டில் புள்ளிராஜாவாக அவதாரம் எடுத்தது. அதற்கடுத்துப் பல மாநிலங்களில் பல்பீர் பாஷா பல பெயர் தரித்து விழிப்பு உணர்வு கொடுத்தார்.
இப்போது உலகத்துக்கே ஒட்டுமொத்தமான பிரச்னை... புவி வெப்பமயமாதல். 'மரங்களை வெட்டாதீர்கள். இயற்கையைப் பாதுகாப்போம்' என்று பல நாடுகளும் பல வழிகளில் விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கின்றன. 2050 என்கிற கேள்வியோடு உலக உருண்டை இல்லாமல் வெறும் அச்சை மட்டும் காட்டி அச்சத்தை விளம்பரப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்!
------------------------------------------------------------
நோ ஸ்மோக்கிங்!
கடவுளைக்கூட விளம் பரப்படுத்த வேண்டிய சூழலில் ஒரு பொருளுக்கு மட்டும் பெரும்பாலான ஊடகங்கள் விளம்பரம் செய்ய மறுத்து வருகின்றன. அது என்ன தெரியுமா? சிகரெட்!
சிகரெட்டின் தீமைகள் தெரிய வருவதற்கு முன்பு விளம்பரம் செய்ய எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அமெரிக்காவின் லோரி லார்ட் என்கிற புகையிலை கம்பெனிதான் 1789-ல் முதல் சிகரெட் விளம்பரத்தை உலகில் பற்றவைத்தது.
உற்பத்தி மற்றும் போக்குவரத்து வசதிகள் அவ்வளவாகப் பெருகாத காலம் என்பதால், எந்த ஒரு சிகரெட் கம்பெனியும் லோக்கல் பகுதியைத் தாண்டி வளரவில்லை. 1870-ம் ஆண்டு சிகரெட் உற்பத்தி செய்யும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஒரு நாளுக்கு நான்கு மில்லியன் சிகரெட்டுகளை உற்பத்தி செய்தது. 1880-களில் அச்சுத் தொழிலில் வண்ணங்களை உபயோகித்து அச்சடிக்கும் அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால், சிகரெட் லேபிள்களில் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், உள்ளூர் பிரபலங்கள் விளம்பர மாடல்களாக இருந்தார்கள். 1950-களில் சிகரெட் கம்பெனிகள் போட்டியைச் சமாளிக்க சிகரெட் லேபிள்கள் மீது கவனம் ஈர்க்கும் வரிகளை எழுதின.
சிகரெட்டினால் புற்றுநோய் அதிகரிப்பதை உணர்ந்துகொண்ட பத்திரிகைகள், சிகரெட் விளம்பரங்களை வெளியிட மறுத்தன. உடனே, புகையிலை கம்பெனிகள் மருத்துவர்கள், டென்டிஸ்ட்டுகள் ஆகி யோரைவைத்து சிகரெட் நல்லது என்கிற தொனியில் விளம்பரங்களைத் தொடர்ந்து வெளியிட்டன. 1964-ல் யு.எஸ்.சர்ஜன் ஜெனரல் லூதர் டெர்ரி என்பவர் 'புகை பிடித்தலும் ஆரோக்கியமும்' என்ற தலைப்பில் ஓர் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார். சிகரெட் குடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் வரும் என்பது அவரின் ஆய்வு முடிவு. அதன் பின்னர்தான் சிகரெட் விளம்பரங்களில் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற்றன--------------------------------------------------------------------
உங்கள் உதட்டில் ஒரு தூண்டில்!
'ஷாக்வர்டைஸிங்' தெரியுமா? பார்த்த மாத்திரத்தில் அதிர்ச்சியை அளித்து மக்களிடையே பொருட்களை விளம் பரப்படுத்துவதுதான் ஷாக்வர்டைஸிங். மக்களை மிரளவைத்த விளம்பரங்களில் இங்கே சில...
'மைக்ரோசாஃப்ட்' நிறுவனம் வின்டோஸ் ஜ்ஜீ-யை அறிமுகப்படுத்தியபோது, ஓர் ஆண் ஒரு பெண்ணின் உள்ளாடையைக் கழற்ற முயற்சி செய்து, அதில் தோற்பதுபோல விளம்பரம் செய்தது. 'எங்களின் பாஸ்வேர்டு அவ்வளவு பாதுகாப்பானது' என்பது கான்செப்ட். மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் தன் விளம்பரத்தை வாபஸ் வாங்கிக்கொண்டது.
வர்ஜின் மொபைல் நிறுவனம், குடும்பஸ்தர்களைக் குறிவைத்து பொது இடங்களில் துண்டுச் சீட்டை விநியோகித்தது. வாங்கிப் பார்த்தவர்களுக்கு செம ஷாக். சில சீட்டுகளில் ஆணும் பெண்ணும் முத்தம் இட்டார்கள். சில சீட்டுகளில் ஆணும் ஆணும் முத்தமிட்டார்கள். மதத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கவே, உடனடியாக இந்த விளம்பர உத்தியை நிறுத்தியது வர்ஜின் மொபைல்.
இங்கிலாந்தின் சுகாதாரத் துறை, சிகரெட் மிகவும் கொடியது என்பதை உணர்த்த மீன் பிடிக்கும் தூண்டிலில் மனிதனின் உதடு மாட்டிக்கொண்டதைப்போல விளம்பரப்படுத்தியது. குழந்தைகளையும் பலவீனமான இதயம் கொண்டவர்களையும் பயமுறுத்துகிற மாதிரி இருக்கிறது என்று கிளம்பிய எதிர்ப்பால், குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சிகளுக்கு இடையே இதை ஒளிபரப்புவதை நிறுத்திவைத்தார்கள். இன்னொரு பக்கம் புகை பிடிக்கும் மனிதர்களில் ஐந்தில் மூன்று பேர் பயந்து சிகரெட் பிடிப்பதையே நிறுத்தி விட்டார்கள்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற காபி நிறுவனம் 'ஸ்டெல்லா எஸ்பிரஸ்ஸோ காபி'. காபிக் கொட்டைகளாலேயே ஒரு தேளின் உருவத்தை வரைந்து, அது ஓர் இளம் பெண்ணின் மூக்கில் ஏறுவது போல் விளம்பரம் செய்தார்கள். 'இந்த காபியின் மணம் தேள்கடி போல் விறுவிறுவென்ற உணர்வை ஏற்படுத்தும்' என்று அவர்கள் கூறிய விளக்கத்தைக் கேட்டு பலர் 'ச்ச்சீ' என்று சொன்னாலும், விளம்பரம் என்னவோ செம ஹிட் ஆனது.
-----------------------------------------------------------------------
உலக சாதனை விளம்பரம்!
விளம்பரத்தை சினிமா மாதிரி எடுத்தவர்களின் கதை இது! ஒரு பொருளின் அசைவு அல்லது விளை வின் மூலம் மற்றொரு பொருள் இயக்கப்படுவதற்கு டொமினோஸ் எஃபெக்ட் என்று பெயர். சுருக்கமாகச் சொன்னால் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் டெல்லி கணேஷை கமல் கோலிக் குண்டைப் பயன்படுத்திக் கொல்வாரே... அதுதான் டொமினோஸ் எஃபெக்ட். ஹோண்டா நிறுவனம் 2009-ம் ஆண்டு தன்னுடைய 'அக்கார்ட்' காரைச் சில புதிய வசதிகளோடு மறு வடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தியது. அதைப் புதுமையாக விளம்பரப்படுத்த டொமினோஸ் எஃபெக்ட்டை வைத்து இரண்டு நிமிட விளம்பரம் எடுத்தார்கள். மிகச் சிறிய சக்கரத்தின் சுழற்சியில் ஆரம்பிக்கும் விளம்பரம் நட்டு, போல்டு, பிஸ்டன், ஹாரன் என்று ஸ்பேர் பார்ட்ஸ் மூலம் பயணித்து, கார் ஸ்டார்ட் ஆவதில் முடியும்.
606 டேக்குகள் உழைத்து வெற்றிகரமாக இந்த விளம்பரத்தை எடுத்து முடித்தார்கள். இதற்காக ஹோண்டா செலவழித்த தொகை ஆறரை மில்லியன் டாலர்கள். ஒரே அறைக்குள் 50 தனித் தனிச் செயல்களின் முடிவில் அக்கார்ட் கார் நகருமாறு எடுக்கப்பட்டது இந்த விளம்பரம். 'உங்கள் சொகுசான அக்கார்ட் கார் பயணத்துக்குப் பின்னணியில் எங்களின் ஏகப்பட்ட உழைப்பு இருக்கிறது' என்ற அவர்களின் கான்செஃப்ட் மக்களிடையே செம ஹிட்! அயர்லாந்தின் புகழ்பெற்ற பீர் கம்பெனிக்காக, ஃபுல்சிக் என்ற டென்மார்க் விளம்பர இயக்குநர் தயாரித்த விளம்பரம்தான், இதுவரை எடுக்கப்பட்ட விளம்பரங்களிலேயே காஸ்ட்லியானது. இதற்கான செலவுத்தொகை 20 மில்லியன் டாலர்கள். இதுவும் டொமினோஸ் எஃபெக்ட்படி எடுக்கப்பட்ட விளம் பரம்தான். வடக்கு அர்ஜென்டினாவில் இரூயா என்ற கிராமத்தில் கேமராவையே பார்த்திராத ஆயிரம் கிராமவாசிகளை நடிக்கவைத்தார் ஃபுல்சிக். ஆறாயிரம் டொமினோக்கள், 10 ஆயிரம் புத்தகங்கள், 400 டயர்கள், 75 கண்ணாடிகள், 50 ஃபிரிஜ்கள், 45பீரோக்கள், ஆறு கார்களைவைத்து இந்த விளம் பரத்தை எடுத்தார்கள். இவை தவிர, பூசணிக்காய், பெயின்ட் டப்பா, சூட்கேஸ், எண்ணெய் பேரல் என்று பயன்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியல் இன்னும் நீளம். 'நல்ல விஷயங்கள், அவற்றுக்காகக் காத்திருப்பவர்களுக்கே கிடைக்கிறது' என்பதுதான் கான்செஃப்ட். செலவழித்த தொகையாலும், பயன் படுத்திய பொருட்களாலும் உலக சாதனையாகி விட்டது இந்த விளம்பரம்!
------------------------------------------------------------------
இரண்டு இஞ்ச் வித்தியாசம்!உலக அளவில் விளம்பர மாடல்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
உலகிலேயே அதிகச் சம்பளம் வாங்கும் மாடல், பிரேசிலைச் சேர்ந்த கிஸேல். இவரின் வருட வருமானம் மூன்றரைக் கோடி டாலர்கள். 15 கோடி டாலர் சொத்து வைத்திருக்கும் 26 வயது கிஸேல், உலகப் பணக்காரர்களின் வரிசையில் 16-வது இடத்தில் இருக் கிறார். 10 வருடங்களுக்கு முன் ஹோட்டலில் டிபன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார் கிஸேல். அவரைப் பார்த்ததும் பரசவமான மாடலிங் ஏஜென்ஸி அப்படியே தூக்கி, கேமரா முன் நிறுத்தியது. அப்புறம் எல்லாமே ஏறுமுகம்தான். பணக்காரி ஆனதும் கிஸேல் செய்த முதல் வேலை... ஹோட்டல் ஒன்றை விலைக்கு வாங்கியதுதான்.
வருடத்துக்கு 60 லட்சம் டாலர் சம்பாதிக்கும் ஆட்ரியனா லீமாவும் பிரேசில் தேவதைதான். மாடலிங் தோழி ஒருவருக்கு கம்பெனி கொடுக்க மாடலிங் ஏஜென்சிக்குச் சென்றவர், மாடலாகத் திரும்பி வந்ததற்கு அதிர்ஷ்டம் என்று பெயர். இப்போது ஆட்ரியனா, பிரேசிலின் சூப்பர் மாடல்.
இங்கிலாந்தின் கேட் மாசுக்கு வயது மட்டும் அதிகம். 37 வயது ஆகியும் 'உலகின் செக்ஸியான பெண்கள்' லிஸ்ட்டில் இன்னும் இருக்கிறார். விளையாட்டுப்போட்டிக்காக வெளிநாடு சென்றவரை ஏர்போர்ட்டில் பிடித்து மாடல் ஆக்கியது ஸ்டார்ம் என்கிற மாடல் ஏஜென்சி. டிஸ்கொதேவில் சண்டை, கொகைன் பயன்படுத்தியது என அடிக்கடி தன்னையும் விளம்பரப்படுத்திக்கொள்வார்.
வெளிநாடுகளைப் பொறுத்தவரை மாடலிங் வேறு... சினிமா வேறு. மாடல்கள் பெரும்பாலும் சினிமாவைப் பார்ப்பதோடு சரி. இந்தியாவில் இரண்டுக்கும் இரண்டு இஞ்ச் வித்தியாசம்கூட இருக்காது. இங்கே மாடல்களைவிட நடிகைகள்தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள். டாப் மாடல் என்கிற கிரீடம் போன வருடம் வரை ஐஸ்வர்யா ராயிடம் இருந்தது. இந்த வருடம் அதை அணிந்திருப்பவர் கேத்ரீனா கைஃப். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் தீபிகா படுகோன். இருவரும் விளம்பரங்களின் மூலம் மட்டும் வருடத்துக்கு 10 கோடி வரை பார்க்கிறார்கள்!
------------------------------------------------------------------------
57 ஆயிரம் புகைப்படங்கள்... 3 அணா!
சில விளம்பரத் துளிகள் இங்கே...
சல்மான் ருஷ்டியைத் திருமணம் செய்து, பின்பு விவாகரத்து செய்து பரபரப்புக் கிளப்பிய பத்ம லட்சுமி ஐயரை நினைவிருக்கிறதா? சென்னை பூர்வீகப் பெண்ணான பத்மா, ஐந்து மாதக் கர்ப்ப மாக இருக்கும்போது, அமெரிக்கப் பத்திரிகை ஒன்றுக்கு மேடிட்ட வயிற்றுடன் நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்புக் கிளப்பினார். குழந்தை பிறந்ததும் 'அப்பா பெயரை அப்புறம் அறிவிப்பேன்' என்று பத்மா கொடுத்த ஸ்டேட்மென்ட்... அடுத்த கட்ட அட்வர்டைஸ்மென்ட்!
'57 ஆயிரம் புகைப்படங்கள்... இரண்டு மைல் நீளத்துக்கு இருக்கும். பார்க்கக் கட்டணம் 3 அணா' 1913-ம் ஆண்டில் வெளியான இந்தியாவின் முதல் படமான 'ராஜா ஹரிச்சந்திரா'-வுக்கு தாதா சாகேப் பால்கே வெளியிட்ட விளம்பரம்தான் இது!
'நாடோடி பேசத் துவங்கிவிட்டான்' - ஊமைப் படங்களில் இருந்து பேசும் படங்களுக்குமாறிய போது சார்லி சாப்ளின் வெளியிட்ட விளம்பரம் இது.
தமிழ் சினிமாவின் வித்தியாசமான விளம்பர உத்தியை 'எஜமான்' படத்துக்காக அறிமுகப்படுத் தியது ஏவி.எம். படத்துக்குச் சரியான ஓப்பனிங் கிடைக்காத நிலையில், படம் பார்த்த ஒரு பெண் மணி 'எனக்கு வானவராயர் மாதிரி ஒரு கணவன் கிடைக்கலையே' என எழுதிய கடிதம் ஏவி.எம்-முக்கு வர, அதையே விளம்பரமாக்கிப் படத்தை ஹிட் ஆக்கினார்கள்!
இந்தியாவில் மிகப் பெரிய வெற்றி பெற்ற விளம்பர வாசகம் 'ஒன்லி விமல்'. அது வரை அயல்நாட்டு பாலியஸ்டர் ரகங்களே உயர்வானதாக இருக்க, உள்நாட்டுத் தயாரிப்பில் ஓர் உயர்ரக பாலியஸ்டர் துணியை உருவாக்கிய திருபாய் அம்பானியின் விளம்பர வாசகம் அது. இதனால் விமல் துணி பெரிய வெற்றியுடன் விற்றது. (இதை தன் 'குரு' படத்தில் 'ஒன்லி குரு' என்று மாற்றியிருப்பார் மணிரத்னம்).
ஒவ்வொரு ஜேம்ஸ்பாண்ட் படம் ரிலீஸ் ஆகும்போதும் ஜேம்ஸ் பாண்டுக்கு என்றே ஒரு காரை அறிமுகப்படுத்தும் 'ஆஸ்டன் மார்டின்' கார் நிறுவனம். அதன் பிறகுதான் அது சந்தைக்கே வரும். 'புது ஜேம்ஸ் பாண்ட் யார்?' என்ற பரபரப்புக்கு இணையானது இந்த கார் பற்றிய எதிர்பார்ப்பு!
----------------------------------------------------------------------------
நடு ரோட்டில் பணம்!
சில பச்சக் விளம்பங்கள்...
ஹெய்ன்கென் என்ற குளிர்பானத்துக்கு நெதர்லாந்தில் செய்யப்பட்ட விளம்பரம் இது. சற்று உற்றுப் பார்த்தால் தெரியும். ஒரு கை அப்படியே அந்த குளிர்பான பாட்டிலை அள்ளி எடுக்க முயலும்.
லண்டனில் 'வெஸ்டிபியூல் பஸ்' எனப்படும் பேருந்துகளில் டயர் பகுதிக்கு ரெண்டு பக்கமும் கேமராபோல வரைந்து டயரை லென்ஸாக்கி... செம கற்பனைதான்
அமெரிக்காவில் ஃபோல்ஜர்ஸ் பிராண்ட் காபி மிகப் பிரபலம். அந்த நாட்டில் பூமிக்கு அடியில் நீராவி விநியோகம் நடக்கும். அதில் சில இடங்களில் பாதாள சாக்கடை மூடி வழியாக நீராவி கசிந்துகொண்டு இருந்தது. உடனே, அதைச்சுற்றி காபி கப்பில் இருந்து ஆவி வருவதுபோல வரைந்து, அதைத் தங்கள் விளம் பரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டது.
ஜெர்மனியில் பிரபல கண்ணாடித் தயாரிப்பு நிறுவனம், தங்கள் கண்ணாடி பலமானது என்று காட்ட, நடுவீதியில் கண்ணாடிகளுக்கு இடையே பணக் கட்டுகளை அடுக்கி வைத்துவிட்டது. எந்த செக்யூரிட்டியும் கிடையாது. இரவில் புகுந்த திருடர்கள் எவ்வளவோ முயன்றும் கண்ணாடியைத் தாண்டி அவர்களால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதை ரகசிய கேமராவில் பதிவுசெய்து, டி.வி-யில் வெளியிட்டு ஏகப்பட்ட பப்ளிசிட்டி செய்தது அந்த நிறுவனம்.
vikatan

