இந்திய சினிமா உலகமே பெரிதும் எதிர்பாக்கும் மணிரத்னத்தின் 'ராவணன்', ஜூன் 18-ல் ரிலீஸாகவுள்ளதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்துள்ளன. உலகம் முழுவதும் கவனத்துக்குரிய பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் ராவணன் படத்தை திரையிட முடிவெடுத்திருக்கிறார், மணி ரத்னம். தற்போது, சென்னையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியில் 'ராவண்' என்ற தலைப்பில் வெளியாகும் இப்படத்தில் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஆகியோர் நடிக்கின்றனர். ரஞ்சிதாவுக்கு 'கட்' இல்லை! ராணவனின் நடிகை ரஞ்சிதாவுக்கும் முக்கிய கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்மையில் சர்ச்சையில் சிக்கியதன் எதிரொலியாக, அவர் நடித்த காட்சிகளை நீக்க முடிவு செய்தார், மணி ரத்னம். அவர் இடம்பெற்ற காட்சிகளை வேறொருவரை வைத்து படமாக்கவும் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், மணி ரத்னத்தை தொடர்புகொண்டு சில விளக்கங்களை அளித்ததோடு, தாம் இடம்பெற்ற காட்சிகளை நீக்க வேண்டாம் என ரஞ்சிதா கோரியதாகவும் தெரிகிறது. இதையடுத்து, ரஞ்சிதா இடம்பெறும் காட்சிகளை அப்படியே பயன்படுத்திக் கொள்வது என முடிவு செய்தாராம் மணி ரத்னம்.
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)


0 comments:
Post a Comment